மும்பையில் மெட்ரோ திட்டத்தை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதற்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

நீண்ட காலமாக மும்பைக்கு விரிவான மெட்ரோ ரயில் சேவை தேவை என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வந்தது. 2014ஆம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டாலும் பெயரளவில் 11 கிமீ தூரம் மட்டுமே செயல்பட்டது. 

டெல்லி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களில் விரிவான மெட்ரோ சேவைகள் ஆண்டு கணக்காக செயல்பட்டு வரும் நிலையில், மும்பையின் விரிவான மெட்ரோ சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மதிப்பு சுமார் ரூ.12,600 கோடி ஆகும். கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி சுமார் 35 கிமீ தூரத்திற்கான 2ஏ மற்று 7 ஆகிய இரு மெட்ரோ ரயில் வழித் தடத்தை தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

இந்த விழாவில் மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோரும் பங்கேற்றனர். திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் குண்டாவலி மற்றும் மோக்ரா வழித் தடங்கள் இடையே மெட்ரோ ரயிலில் பயணித்தார்.இந்த நிலையில் மும்பை மெட்ரோ மும்பை மக்களிடம் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றுள்ளது என்பதை பார்க்கலாம்.

ட்விட்டரில் இதைபற்றி பலரும் வரவேற்கும் விதமாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து ஒருவர், அலுவலகத்திற்கு செல்வதற்கான பயண நேரத்தை எளிதாகவும், வசதியாகவும் மாற்றியுள்ளது என்று பதிவிட்டார்.

அவர்களில் ஒருவர் லோயர் பரேல் மெட்ரோ நிலையத்தின் படத்தை பகிர்ந்துள்ளார்.

Scroll to load tweet…

இதையும் படிங்க..மனநலம் குன்றிய சிறுமி பாலியல் பலாத்காரம்! கொடுமை! வைரலான வீடியோ.. 3 சிறுவர்களை கொத்தாக தூக்கிய போலீஸ்

மற்றொருவர், மும்பையின் சூப்பரான மெட்ரோ நிலையம் என்றும் பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

மற்றொரு பதிவில், மெட்ரோவில் மெட்ரோ திட்டத்தை மும்பைக்கு கொண்டு வந்ததற்காக ஒரு ஜோடி, தேங்காய் மற்றும் ஊதுபத்தி வைத்து பூஜை செய்ய உள்ளதாக கூறியுள்ளனர்.

Scroll to load tweet…

இதையும் படிங்க..Karnataka Elections 2023: தொகுதியை மாற்றிய சித்தராமையா.. பாஜக எடுத்த அஸ்திரம்! சூடுபிடித்த கர்நாடகா தேர்தல்