Asianet News TamilAsianet News Tamil

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி வெளியிட்ட தகவல்..!

 தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது. 

Erode East Constituency by-election...pmk No party competition, no support
Author
First Published Jan 21, 2023, 12:29 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியில்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என அன்புமணி ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27-ஆம் நாள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கும் நிலையில், அது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் உயர்நிலைக்குழு கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் கூடி விவாதித்தது. கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் உள்ளிட்ட உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இதையும் படிங்க;- ஓபிஎஸ் எடுத்த அதிரடி முடிவு.. முடக்கப்படுகிறது இரட்டை இலை சின்னம்? அதிர்ச்சியில் இபிஎஸ்?

Erode East Constituency by-election...pmk No party competition, no support

இடைத்தேர்தல்கள் தேவையற்றவை, மக்களின் வரிப் பணத்தையும், நேரத்தையும் வீணடிப்பவை. அதனால் தான் சட்டமன்ற உறுப்பினர் காலமானதாலோ,  கட்சித் தாவியதாலோ சட்டப்பேரவை உறுப்பினர் பதவி காலியானால் அங்கு இடைத் தேர்தல் நடத்தத் தேவையில்லை. அங்கு பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அதே கட்சியைச் சேர்ந்த ஒருவரை சட்டமன்ற உறுப்பினராக்கிவிடலாம் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. இதையே பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கடைபிடித்து வருகிறது.

இதையும் படிங்க;-  ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. காங்கிரஸ் வேட்பாளர் இவர்தான்? வெளியான தகவல்..!

Erode East Constituency by-election...pmk No party competition, no support

அதன்படியே ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலிலும் போட்டியிடுவதில்லை; எந்தக்  கட்சிக்கும் ஆதரவு அளிப்பதில்லை என்று உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இன்று மாலை பாமக தலைவர்களை சந்தித்து ஆதரவு கோர ஓபிஎஸ் திட்டமிட்டிருந்த நிலையில், யாருக்கும் ஆதரவு இல்லை என பாமக தலைமை அறிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios