மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து தமிழகத்தின் 24 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், கடலூர், திருப்பத்தூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, நாகை, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய 24 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

09:35 PM (IST) Dec 08
மாண்டஸ் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நாளை (09-12-2022) நடைபெறவிருந்த அண்ணா, அண்ணாமலை, சென்னை, திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (09.12.2022) நடைபெற இருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளையும் ஒத்திவைத்து தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
07:24 PM (IST) Dec 08
குஜராத்தின் கோத்ரா சட்டமன்றத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சி கே ரவுல்ஜி 35,198 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரஷ்மிதாபென் சவுகானை தோற்கடித்தார். ரவுல்ஜி 96,223 வாக்குகளும், சவுகான் 61,025 வாக்குகளும் பெற்றனர். கோத்ரா சட்டமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் ராஜேஷ்பாய் படேல் 11,827 வாக்குகளும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின் ஹசன் கச்சாபா 9,508 வாக்குகளும் பெற்றனர். கோத்ரா சட்டமன்றத் தொகுதியில் வெற்றிப்பெற்ற கே ரவுல்ஜி, பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேருக்கு ஆதரவாக பிராமணர்கள் மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள் என்று பேசி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
07:03 PM (IST) Dec 08
இமாசலப்பிரதேசத்தில் காங்கிரஸ் 40 இடங்களிலும், பாஜக 25 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 43.9 சதவீத வாக்குகளையும், பாஜக 43 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன. வெறும் 0.9% வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவை விட காங்கிரஸ் 15 இடங்களை அதிகமாக கைப்பற்றியுள்ளது. ஒவ்வொரு வாக்கும் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.முடிவுகள் உணர்த்துகின்றன.
06:05 PM (IST) Dec 08
அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிரந்தரம் செய்வதோடு உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று – சீமான் வலியுறுத்தியுள்ளார்.
05:09 PM (IST) Dec 08
என்எல்சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு உரிய இடமும் வேலையும் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
03:35 PM (IST) Dec 08
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரும் 12ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
02:43 PM (IST) Dec 08
ஹைதராபாத்தில் கடந்த புதன்கிழமை அன்று, வானில் காணப்பட்ட வெள்ளை நிற பறக்கும் பொருள் மக்களிடையே பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
02:41 PM (IST) Dec 08
செம்புலிங்கத்தின் குடும்பத்தினரை 8 காவலர்கள் கொண்ட படையினர் சுற்றிவளைத்து தாக்கியதை வைத்துப் பார்க்கும் போது இது திட்டமிட்ட தாக்குதலோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
02:40 PM (IST) Dec 08
கல்லூரி மாணவி ரயிலில் இறங்கும்போது கால் தவறி நடைமேடைக்கு ரயிலுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
01:25 PM (IST) Dec 08
இமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
12:00 PM (IST) Dec 08
குஜராத் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகர் அடங்கிய உன்ஜா தொகுதியைஇந்த முறை பாஜக கைப்பற்றுகிறது.விரிவான செய்திகளுக்கு.......
11:21 AM (IST) Dec 08
திமுக அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்த அதிமுக தலைமைகழகம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் புயல் காரணமாக நாளை பேரூராட்டி பகுதிகளல் நடைபெற இருந்த போராட்டம் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது
மேலும் படிக்க..
11:03 AM (IST) Dec 08
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் கடுமையாக விலை சரிந்தும், பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் எந்த சக்தி தடுக்கிறது? என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி எழுப்பியதற்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
11:02 AM (IST) Dec 08
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டை தடை செய்யும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். இந்தநிலையில் ஆளுநர் ஆர்.என். ரவியை ஆன்லைன் விளையாட்டு நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
10:56 AM (IST) Dec 08
இமாச்சல பிரதேச தேர்தலில் பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பும் காங்கிரஸ் கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டு இருந்தது. ஆளும் கட்சிக்கும் எதிர்கட்சிக்கும் உள்ள வித்தியாசம் மிகக் குறைவாக இருக்கும் என்று தெரிய வந்து இருந்தது.
10:35 AM (IST) Dec 08
இமாச்சலப்பிரதேச தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.
10:31 AM (IST) Dec 08
குஜராத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்கிறது என்றாலும் இமாசலப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இமாச்சலப் பிரதேசம் தொங்கு சட்டசபையை நோக்கி செல்வதைத்தான் தற்போதைய நிலவரம் காட்டுகின்றன. காங்கிரஸ் ஆட்சி அமைக்குமா? பாஜக ஆட்சியை அமைக்குமா? என்பது இலாச்சலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் மற்ற கட்சிகள் எந்தப் பக்கம் சாய்கிறதோ அந்தக் கட்சிதான் ஆட்சி அமைக்கும். பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவி வருகிறது. அப்படி நடந்தால் 37 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக இமாசலப் பிரதேசத்தை ஆட்சி செய்யும் கட்சி என்ற பெயரை பாஜக பெறும்.
10:21 AM (IST) Dec 08
இமாச்சலில் பெரும்பான்மையை நோக்கி முன்னேறும் காங்கிரஸ் கட்சி முன்னேறி வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 34 இடங்களிலும், பாஜக 30 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
09:58 AM (IST) Dec 08
உத்தரப்பிரதேச மெயின்புரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் மனைவியும், மறைந்த சமாஜ்வாடி தலைவர் முலாயம் சிங் யாதவ் மருமகள் டிம்பிள் வெற்றி பெற்றுளார்.
09:51 AM (IST) Dec 08
தமிழக சட்டமன்றமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22 மசோதாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக விவாதிக்க மக்களைவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.
09:48 AM (IST) Dec 08
தற்போதைய நிலவரப்படி இமாச்சல பிரதேசத்தில் பாஜக 28 தொகுதிகளிலும், காங்கிரஸ் 33 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி 30 தலைவர்களை காங்கிரஸ் கட்சி நீக்கம் செய்துள்ளது. இவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 ஆண்டுகள் வரை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
09:45 AM (IST) Dec 08
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வட்கம் தொகுதியில் போட்டியிட்ட ஜிக்னேஷ் மேவானி பின்னடைவு.
09:36 AM (IST) Dec 08
குஜராத் சட்டசபைத் தேர்தலில் 182 தொகுதிகள் இருந்தபோதிலும் குறிப்பிட்ட சில தொகுதிகள் நாடுமுழுவதும் கூடுதல் கவனத்தை ஈர்க்கின்றன. அதில் வட்கம், விராம்கம், காந்திநகர் தெற்கு ஆகிய தொகுதிகள்தான்.விரிவான செய்திகளுக்கு........
09:08 AM (IST) Dec 08
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவின் முதல்வர் ஜெய்ராம் தாகூர் முன்னிலை வகித்து வருகிறார்.
09:08 AM (IST) Dec 08
குஜராத்தில் நடந்த சட்டசபைத் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையில் பாஜக இமாலய முன்னிலையுடன் செல்கிறது. இதுவரை 126 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றனவிரிவான செய்திகளுக்கு...
09:01 AM (IST) Dec 08
காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த இளம் தலைவர் ஹர்திக் படேல், வீரம்கிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். அந்த தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் அமர் சிங் தாகூர் முன்னிலையில் உள்ளார்.
08:58 AM (IST) Dec 08
இமாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் பாஜக 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. குஜராத்தில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 134 தொகுதிகளிலும், காங்கிரஸ் 40 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
08:55 AM (IST) Dec 08
இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மாறி மாறி முன்னிலை பெற்று வருகின்றது. தற்போது நிலவரப்படி பாஜக 26 இடங்களிலும், காங்கிரஸ் 28 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
08:54 AM (IST) Dec 08
இமாச்சல பிரதேசத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையேயான கடும் இழுபறியில் தற்போது காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது.
08:53 AM (IST) Dec 08
இமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் பாஜக 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 35 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
08:43 AM (IST) Dec 08
குஜராத் சட்டசபை தேர்தலில் பெரிதம் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி ஒரு இடத்தில் கூட முன்னிலை பெறவில்லை.
08:33 AM (IST) Dec 08
இமாசலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் இதுவரை வெளியான முடிவுகளில் பாஜக 24 தொகுதிகளிலும், காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
08:31 AM (IST) Dec 08
இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி பாஜக 22 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
08:30 AM (IST) Dec 08
குஜராத் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 112 தொகுதிகளிலும், காங்கிரஸ் 37 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆரம்ப முதலே பாஜக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.
08:23 AM (IST) Dec 08
தபால் வாக்குகளில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக முன்னிலை வகிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது பக்க 16 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
08:16 AM (IST) Dec 08
குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. தற்போது நிலவரப்படி குஜராத்தில் பாஜக 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது.
08:14 AM (IST) Dec 08
07:53 AM (IST) Dec 08
கேரளா டிஜிட்டல் ரீ சர்வே மூலம் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களதேவி கண்ணகி கோவிலை தனது பகுதிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் கேரளா இறங்கி இருப்பது அதிர்ச்சியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க..
07:43 AM (IST) Dec 08
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாசல பிரதேசத்தில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
07:40 AM (IST) Dec 08
அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில் சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார்.