Asianet News TamilAsianet News Tamil

Himachal Pradesh Election Result: இமாச்சலில் காங்கிரஸ், பாஜகவுக்கு டஃப் கொடுக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் !!

இமாச்சலப்பிரதேச தேர்தலில் ஆளுங்கட்சியான பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் மாறி மாறி முன்னிலை வகித்து வருகிறது.

Himachal Pradesh Assembly Election Result 2022 independent candidates winners list
Author
First Published Dec 8, 2022, 10:32 AM IST

இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டபை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த மாதம் 12ம் தேதி தேர்தல் நடந்தது. ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டி உள்ளது.இந்த தேர்தலில் மாநிலத்தை ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம்ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சியை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. பிறகு எண்ணப்படும் வாக்குகளில் இருகட்சிகளும் மாறி,மாறி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு முக்கிய கட்சிகளில் தேர்தலில் சீட் மாறுக்கப்பட்டதால், பலர் சுயேட்சையாக சட்டசபை தேர்தலில் நின்றுள்ளனர். அவர்கள் பாஜக, காங்கிரஸ் கட்சியின் வெற்றியை இந்த தேர்தலில் தடுத்தார்களா ? என்பதை  இங்கு பார்க்கலாம்.

Himachal Pradesh Assembly Election Result 2022 independent candidates winners list

இந்து வர்மா:

இந்து வர்மா கடந்த இரண்டு தலைமுறைகளாக அரசியலில் இருக்கும் இவர், மூன்று முறை எம்எல்ஏவாக இருந்த ராகேஷ் வர்மாவின் மனைவி ஆவார். ராகேஷ் வர்மா தியோக் தொகுதியில் இருந்து இரண்டு முறை சுயேட்சையாகவும், ஒரு முறை பாஜக வேட்பாளராகவும் வெற்றி பெற்றார்.

கடந்த ஜூலை மாதம் இந்து வர்மா காங்கிரசில் இணைந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் சீட்டு கிடைக்காததால் சுயேச்சையாக தற்போது போட்டியிட்டுள்ளார். இந்த நிலையில் சிபிஐம்-ன் சிட்டிங் எம்.எல்.ஏ ராகேஷ் சின்ஹா தியோக் தொகுதியில் தனது முன்னிலையில் இருக்கிறார். இவர் பின்னடைவை சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க.. Gujarat Election Result 2022: குஜராத் தேர்தல் முடிவு : பாஜக புதிய வரலாறு ! ஜடேஜா மனைவி, மேவானி, படேல் முன்னிலை

கிர்பால் சிங் பர்மர்:

பாஜகவில் மாவட்ட பதவிகளில் ஆரம்பித்து ராஜ்யசபா எம்.பி, மாநில பாஜக துணைத் தலைவராக உயர்ந்தார்  கிர்பால் சிங் பர்மர். கடந்த ஆண்டு, ஃபதேபூர் இடைத்தேர்தலின் போது அவருக்கு தேர்தலில் போட்டியிட சீட் மறுக்கப்பட்டது. மேலும் கட்சியின் மாநிலத் தலைமைப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டி கடந்த ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். இடைத்தேர்தலின் போது பல்தேவ் தாக்கூரை கட்சி நிறுத்தியது.

ஆனால் அவர் காங்கிரஸின் பவானி பதானியாவிடம் 5,800 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த முறையும் சீட் மறுக்கப்பட்டதால் சட்டசபை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடுள்ளார். தற்போது வெளிவந்துள்ள முடிவுகளில் காங்கிரஸ் வேட்பாளர் பிஎஸ் பதானியா முன்னிலை வகித்து வருகிறார்.

கே.எல்.தாக்கூர்:

2017ல் காங்கிரஸின் லக்விந்தர் சிங் ராணாவிடம் 1,300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார் கே.எல்.தாக்கூர். இந்த முறை, ராணா காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறியதால், தாக்கூருக்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் சுயேட்சையாக போட்டியிட்டுள்ளார். தற்போதைய நிலவரப்படி, கே.எல்.தாக்கூர் முன்னிலை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க.. Himachal Pradesh Election Results: இமாச்சல பிரதேசத்தில் தொங்கு சட்டசபை அமைகிறதா.? பாஜக Vs காங்கிரஸ் பிளான்.!!

Follow Us:
Download App:
  • android
  • ios