Gujarat Election Result 2022: மோடியின் சொந்த ஊர் தொகுதியைக் இந்த முறை கைப்பற்றுகிறது பாஜக: காங்கிரஸ் தோல்வி

குஜராத் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகர் அடங்கிய உன்ஜா தொகுதியைஇந்த முறை பாஜக கைப்பற்றுகிறது.

Gujarat Election Result 2022 Live: This time, the BJP wins Modi's home constituency.

குஜராத் சட்டசபைத் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகர் அடங்கிய உன்ஜா தொகுதியைஇந்த முறை பாஜக கைப்பற்றுகிறது.

மெஹ்சனா மாவட்டத்தில் உன்ஜா தொகுதியில்தான் மோடி பிறந்த ஊரான வத்நகர் அடங்கியுள்ளது. 
குஜராத்தில் கடந்த 20 ஆண்டுகளாகளுக்கும் மேலாகபாஜக ஆட்சியில் இருந்தாலும், கடந்த தேர்தலில் பிரதமர் மோடியின் சொந்த ஊரான வத்நகர் அடங்கிய உன்ஜா தொகுதியை மட்டும் பாஜகவால் கைப்பற்ற முடியவில்லை. இந்தத் தொகுதியை கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பாஜக பறிகொடுத்தது.

பிரதமர் மோடி சிறுவயதில் தனது தந்தையுடன் வந்து வத்நகர் ரயில்நிலையத்தில் தேநீர் விற்றுள்ளார். இதன் நினைவாகவா வத்நகர் ரயில்வே நிலையத்தை மத்தியில் ஆளும் பாஜாக அரசும், மாநிலத்தில் ஆளும் பாஜகவும் மெருகேற்றியுள்ளன. 

குஜராத்தில் ஓட்டு எண்ணிக்கை:பாஜக அசுர முன்னிலை:ஹர்திக் படேல்,அல்பேஷ் பின்னடைவு

பிரதமர் மோடி தேநீர் விற்ற கடையைக் கூட அதன் பழமை மாறாமல் அதை நினைவுச்சின்னம்போல் அமைக்கவும்பாஜக திட்டமிட்டது. குஜராத்துக்கு சுற்றுலா வரும் மக்கள் பிரதமர் மோடி தேநீர் விற்ற வத்நகர் ரயில்வே நிலையத்தை வந்து காணும்அளவுக்கு அது சுற்றுலாத்தளமாக பிரபலமாகியுள்ளது.

ஆனால் வத்நகர் ரயில்நிலைய வளர்ச்சிக்கு பாஜக கடுமையாக உழைத்தாலும் இந்த நகரம் அடங்கிய உன்ஜா தொகுதி என்னமோ காங்கிரஸிடம்தான் இருந்தது,

கடந்த 2017ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்  ஆஷா படேலிடம், பாஜக மூத்த தலைவர் நாராயன் படேல் தோல்வி அடைந்தார். 79 வயதான நாராயன் படேலை 19ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் 40வயதான ஆஷா படேல் தோற்கடித்தார்.

:குஜராத்தில் கவனத்தை ஈர்க்கும் வட்கம், விராம்கம், காந்திநகர் தெற்கு தொகுதிகள்?

இந்த உன்ஜா தொகுதியில் பெரும்பகுதி படேல் சமூகத்தினரும், தாக்கூர் சமூகத்தினரும் உள்ளனர். படேல் சமூகத்தினர் மட்டும் ஏறக்குறைய ஒரு லட்சத்துக்கும் மேலான வாக்காளர்கள் உள்ளனர், அடுத்ததாக தாக்கூர் சமூகத்தினர் 80ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த இரு சமூகத்தினர் வாக்குகள்தான் வெற்றியைத் தீர்மானிக்கும் துருப்புச்சீட்டுகளாகும்.

உன்ஜா தொகுதியை கைப்பற்ற பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் மட்டுமல்லாது ஆம் ஆத்மிக்கும் கடும் போட்டியிட்டன. அதிலும் காங்கிரஸ் கட்சிக்கு தன்வசம் வைத்திருக்கும் தொகுதி என்பதால் அதை தக்கவைக்க போராடியது. ஆனால், பாஜகவுக்கோ இது கவுரவப் பிரச்சினை, பிரதமர் மோடியின் பிறந்த ஊர் அடங்கிய தொகுதியை இழந்துவிட்டது அவமானக்குறையாக இருந்தது. 

இதற்காக உன்ஜா தொகுதியில் வரிந்து கட்டி பாஜகவினர் பிரச்சாரம் செய்தனர். பாஜக சார்பில் வேட்பாளராக கீர்த்திகுமார் கேஷவ்லால் படேல் போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் அம்ருத் அரவிந்த் படேல் போட்டியிட்டார். ஆம் ஆத்மி கட்சி சார்பில் ஊர்வசிகுமார் பாபுபாய் படேல் களம் கண்டார்.

இமாச்சலில் பெரும்பான்மையை நோக்கி முன்னேறும் காங்கிரஸ்.. பாஜக பின்னடைவு !

இந்தத் தேர்தலில் பாஜக அசுரத்தனமான முன்னிலையுடன் 150 இடங்களில் முன்னிலையுடன் நகர்ந்து வருகிறது. இதில் உன்ஜா தொகுதியும் தப்பவில்லை. உன்ஜா தொகுதியில் பாஜக வேட்பாளர் கீர்த்திகுமார் 32,271 வாக்குகளுடன் முன்னிலையில்உள்ளார். 

காங்கிரஸ் வேட்பாளர் அம்ருத் அரவிந்த் 10,831 வாக்குகளுடன் 2வது இடத்தில் பின்தங்கியுள்ளார்.  ஆம் ஆத்மி வேட்பாளர் பாபுபாய் படேல் 8,382 வாக்குகளுடன் உள்ளார். இதே நிலை நீடித்தால், பாஜக வேட்பாளர் கீர்த்திகுமார் வெற்றி பெறுவார். மோடியின் பிறந்த ஊரான வத்நகர் அடங்கிய உன்ஜா தொகுதி மீண்டும் பாஜக வசம் வரும்.


 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios