கலைஞர் சங்க பணியாளர்கள் நிதி உருவாக்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க பணியாளர்களின் நலனை பேணி காக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும், சங்க பணியாளர் விபத்து காரணமாக இறக்க நேரிட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் திட்டக்குடியில் ரூ.25 கோடியில் கால்நடை தீவன ஆலை, ஆன்லைனில் ஆவின் பொருள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

09:29 PM (IST) Apr 05
கல்லூரி மாணவர்களுக்கு கவிதை மற்றும் கட்டுரை போட்டிகள் நடைபெற உள்ளனர். அவை பற்றி முழு விபரத்தை இங்கு காண்போம்.
08:19 PM (IST) Apr 05
தமிழகத்துக்கு வேலைக்கு வந்த வடமாநிலத்தவர்களை திமுக இழிவுபடுத்தியது. வெறுப்பை விதைத்தது. ஆனால் பிரச்சினை வந்த பிறகு பாஜகவினரை கைது செய்கின்றனர் என்று கூறியுள்ளார் இந்து மக்கள் கட்சி நிறுவனர் தலைவர் அர்ஜூன் சம்பத்.
07:30 PM (IST) Apr 05
25க்கும் மேற்பட்ட ஆலய அர்ச்சகர்கள் குளத்தில் இறங்கியபோது ஒருவர் குளத்தில் மூழ்கிய நிலையில் அவரை காப்பாற்ற சென்றவர்கள் அடுத்தடுத்து 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தி மிகுந்த மன வருத்தம் அளிக்கிறது. - அண்ணாமலை, மாநில பாஜக தலைவர்.
06:56 PM (IST) Apr 05
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்ற மேடை சரிந்து விழுந்தது.
06:26 PM (IST) Apr 05
திமுகவுக்கும், அதிமுகவுக்கும் எப்போதும் ஒரு போட்டி இருக்கும். திட்டம் அறிவிப்பு முதல் போராட்டம் வரை. அது மு.க ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையேவும் இருந்து வருகிறது.
05:41 PM (IST) Apr 05
சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
04:42 PM (IST) Apr 05
உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை படைக்க உள்ளார் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர்.
03:41 PM (IST) Apr 05
ஒருதலைக்காதலால் மாணவி ஒருவரின் வாழ்க்கையை சீரழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
03:09 PM (IST) Apr 05
ஸ்பானிய நகரம் ஒன்று ஒரு இடத்துக்கு செல்ல, 2,600 யூரோக்களை வழங்குகிறது. ஆனால் அதில் ஒரு நிபந்தனை இருக்கிறது.
02:11 PM (IST) Apr 05
சென்னைக்கு பிழைப்பு தேடி வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை ஆட்டோக்காரர் ஒருவர் காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.மேலும் படிக்க
12:22 PM (IST) Apr 05
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்பு திட்டமிட்டு பறிக்கப் படுகிறது என்றால், அதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது என ராமதாஸ் கூறியுள்ளார்.
11:54 AM (IST) Apr 05
ராஷ்மிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படங்களில் புஷ்பா 2-வும் ஒன்று. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இப்படத்தின் அப்டேட்டும் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் ராஷ்மிகா பற்றிய அப்டேட்டாக தான் அது இருக்கும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் படிக்க
10:31 AM (IST) Apr 05
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்கள் மற்றும் இல்லத்தரிகளின் மதத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
09:42 AM (IST) Apr 05
திருவண்ணாமலையில் பங்குனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல இன்று காலை 10.16 மணி முதல் நாளை மறுநாள் காலை 10.56 மணிவரை உகந்த நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
09:41 AM (IST) Apr 05
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் காதல் தோல்வியில் முடிந்ததை அடுத்து அவர் சினிமாவில் அசுர வளர்ச்சி கண்டதைப் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
08:03 AM (IST) Apr 05
ராகுல் காந்தி பதவி நீக்கத்தை கண்டித்து பாஜக அலுவலக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கன்னியாகுமரி மாவட்ட பாஜகவினர் கைது செய்யப்பட்டதற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:49 AM (IST) Apr 05
ரசிகர்களால் நேஷனல் கிரஷ் என கொண்டாடப்படும் ராஷ்மிகா, இன்று தனது 26-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். டுவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் நடிகை ராஷ்மிகாவிற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது நடிகை ராஷ்மிகாவின் சொத்து மதிப்பு பற்றியும், அவரின் ஆடம்பர வாழ்க்கை பற்றியும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
07:31 AM (IST) Apr 05
மக்களை முட்டாள்கள் என்று எண்ணி பாராளுமன்றத்திலே சட்டமாக்கி விட்டு பின்னர் திமுகவின் தயவிற்காக கெஞ்சி கூத்தாடி கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பவாத அரசியல் பிழைப்பிற்கு காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெட்கப்பட வேண்டும் என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.'
07:17 AM (IST) Apr 05
எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதுக்கும் அடுத்த முதலமைச்சராக பொறுப்பேற்பதற்கும் தீச்சட்டி எடுக்கப்போவதாக கஞ்சா கருப்பு கூறியுள்ளார்.