எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழக பெண்.. சாதனை படைக்க உள்ளார் சென்னைப்பெண் !!

உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை படைக்க உள்ளார் தமிழகத்தை சேர்ந்த பெண் ஒருவர்.

Tamilnadu woman is going to set a record by climbing Mount Everest

எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க நிதியுதவி வழங்கிட தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையினை 28.03.2023 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார்.

Tamilnadu woman is going to set a record by climbing Mount Everest

இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

இந்நிலையில் சிகரம் ஏறுவதற்கு கூடுதல் நிதியுதவி தேவைப்படுவதால் மேலும் நிதியுதவி வழங்கிடுமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் மீண்டும் கோரிக்கை விடுத்தார். இதனை தொடர்ந்து தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக ரூ.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.

முத்தமிழ்ச் செல்வி அப்போது பேசிய போது, “எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய தமிழ்நாட்டிலிருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் நான். எனது கனவை நனவாக்கும் வகையில் நிதியுதவி வழங்கிய தமிழ்நாடு அரசு மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Tamilnadu woman is going to set a record by climbing Mount Everest

தற்போது எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க உள்ளார் முத்தமிழ்ச்செல்வி. சுமார் 8,849 மீட்டர் ஏறி சாதனை படைக்க இருக்கிறார். இதுபற்றி கூறிய அவர், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனையை படைப்பேன் என்று கூறியுள்ளார். இன்று (ஏப்ரல் 5) எவரெஸ்ட் சிகரத்தில் ஏற தொடங்கியுள்ளார் முத்தமிழ்ச்செல்வி.

இதையும் படிங்க..இந்த இடத்துக்கு போனா 2 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்.!!

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios