குளத்தில் மூழ்கி 5 பேர் பலி.. 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த *** பகீர் சம்பவம் - நங்கநல்லூர் விபத்து பின்னணி

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோவில் திருவிழாவில் 5 அர்ச்சகர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 priests drowned in Nanganallur temple pond shocking news release

சென்னை மடிபாக்கம் அடுத்த நங்கநல்லூர் மூவரசன்பட்ட்டில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவில் குளத்தில் இன்று காலை தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது கோவில் குளத்தில் 20க்கும் மேற்பட்டோர் குளத்தில் மூழ்கி எழுந்துள்ளனர்.

இதில் நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா, மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த ராகவ் , நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ராகவன், கீழ்கட்டளை பகுதியை சேர்ந்த யோகேஸ்வரன், நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பானேஷ் ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி ஐவரும் உயிரிழந்தனர்.

5 priests drowned in Nanganallur temple pond shocking news release

இதையும் படிங்க..17 வயது சிறுமி.. ஒருதலைக்காதல்.. கடைசியில் காதலனுக்கு காத்திருந்த அதிர்ச்சி !!

இதனையடுத்து ஐந்து பேரின் உடலை கைப்பற்றிய தீயானைப்பு துறையினர் மற்றும் போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.  தகவல் அறிந்து மருத்துவமனைக்கு இறந்தவர்களின் உறவினர்கள் கூடியதால் மருத்துவமனை வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. 

பின்பு அங்கு வந்த அமைச்சர் தா.மோ அன்பரசன் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் , தாம்பரம் மாநகராசி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் இறந்தவர்களின் உறவினர்களிடம் ஆறுதல் கூறினர். பிறகு இதுபற்றி பேசிய அமைச்சர், “குளத்தில் ஐந்து இளைஞர்கள் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

கோவில் நிர்வாகம் முன்கூட்டியே பாதுகாப்பின்றி நிகழ்ச்சி நடத்தியதால் தான் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்றத்தில் இது குறித்து தகவல் வந்தவுடன் முதலமைச்சர் கவணத்திற்க்கு கொண்டு சென்று இருக்கிறோம். ஐந்து பேரை இழந்த குடும்பத்துக்கு தனது சார்பாகவும் முதலமைச்சர் சார்பகவும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும், பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு முதல்வர் நிச்சயமாக உதவி செய்வார் என்பதில் எந்த வித சந்தேகம் இல்லை என்று கூறினார்.

ஆழமான பகுதிக்கு சென்ற மூன்று பேர் நீரில் மூழ்கியபோது அவரை காப்பாற்ற சென்ற மேலும் இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி  கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தை தூர்வாரிய பிறகு அதன் ஆழம் அதிகரித்து உள்ளதாகவும் கூறுகிறார்கள். ஒருவேளை குளத்தின் ஆழம் காரணமாக இருக்கலாம் என்ற குற்றச்சாட்டை பொதுமக்கள் வைக்கின்றனர்.

இதையும் படிங்க..இந்த இடத்துக்கு போனா 2 லட்சம் உங்களுக்கு கிடைக்கும்.. ஆனா ஒரு கண்டிஷன்.!!

5 priests drowned in Nanganallur temple pond shocking news release

இந்நிலையில் சென்னை அருகே கோவில் திருவிழாவின் போது நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.  

தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோவில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, சூர்யா (வயது-22), பானேஷ் (வயது-22), ராகவன் (வயது-22) யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.  

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.   இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க..எடுத்தது எல்லாம் வேஸ்ட்.. புஷ்பா 2 படப்பிடிப்பில் கடுப்பான இயக்குனர் - ரசிகர்கள் அதிர்ச்சி!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios