Published : Mar 30, 2025, 06:47 AM ISTUpdated : Mar 30, 2025, 11:57 PM IST

Tamil News Live today 30 March 2025: CSK vs RR: கடைசி வரை திக் திக் திக்! சூப்பர் பவுலிங்கால் ராஜஸ்தான் முதல் வெற்றி! சிஎஸ்கே 2வது தோல்வி!

சுருக்கம்

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மதுரை, சேலம், கரூர், திருச்சி, திருவள்ளூர், வேலுார், ஈரோடு, தருமபுரி, சென்னை, கோவை நகரங்களில், வெயில், 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. 

Tamil News Live today 30 March 2025: CSK vs RR: கடைசி வரை திக் திக் திக்! சூப்பர் பவுலிங்கால் ராஜஸ்தான் முதல் வெற்றி! சிஎஸ்கே 2வது தோல்வி!

11:57 PM (IST) Mar 30

CSK vs RR: கடைசி வரை திக் திக் திக்! சூப்பர் பவுலிங்கால் ராஜஸ்தான் முதல் வெற்றி! சிஎஸ்கே 2வது தோல்வி!

சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இது ராஜஸ்தான் அணியின் முதல் வெற்றியாகும். 
 

மேலும் படிக்க

10:33 PM (IST) Mar 30

இல்லத்தரசிகளுக்கு இனி கவலையில்லை! சமையல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சூப்பர் முடிவு!

கடந்த 4 நாட்களாக நடந்த சமையல் கேஸ் டேங்கர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

09:33 PM (IST) Mar 30

CSK vs RR: ராஜஸ்தானை 200 ரன்னுக்குள் முடக்கிய சிஎஸ்கே! சவாலான இலக்கை எட்டிப் பிடிக்குமா?

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 182 ரன்கள் அடித்துள்ளது. சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே பேட்டிங் செய்கிறது. 

மேலும் படிக்க

09:05 PM (IST) Mar 30

நாளை பொது விடுமுறை அதுவுமா தமிழகத்தில் மின்தடையா?

தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க

08:28 PM (IST) Mar 30

ஓடிசாவில் 'பெங்களூரு 'எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது! ஒருவர் பலி! 8 பேர் காயம்!

ஒடிசாவில் பெங்களூருவில் இருந்து சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்து விட்டார். 

மேலும் படிக்க

08:20 PM (IST) Mar 30

தமிழ் மீது இவ்வளவு பாசமா? தமிழ் புத்தாண்டில் Tiguan R Lineஐ வெளியிடும் Volkswagen

Volkswagen India நிறுவனம் Tiguan R-Line மாடலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுகிறது. இதன் முன்பதிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த CBU மாடலின் விலை ரூ. 45-50 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க

08:18 PM (IST) Mar 30

சம்பலில் 1000 படுக்கை வசதிகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் பணி ஏப்ரலில் தொடக்கம்!

08:03 PM (IST) Mar 30

உங்கள் காரில் எதிர்பார்த்த மைலேஜ் கிடைக்கலையா? இந்த டிப்ஸை பாலோ பண்ணி பாருங்க

டீசல் கார்களை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யவில்லை என்றால், அவை உங்களுக்கு பெரிய அளவில் செலவை ஏற்படுத்துவதோடு, நிறைய மாசுபாட்டையும் ஏற்படுத்தும். இதுமட்டுமின்றி, எரிபொருள் நுகர்வும் அதிகரிக்கத் தொடங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சில விஷயங்களை மனதில் வைத்தால், டீசல் கார் கூட நல்ல மைலேஜ் தரும்.

மேலும் படிக்க

07:55 PM (IST) Mar 30

SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்ச்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார்.

மேலும் படிக்க

07:47 PM (IST) Mar 30

உபியில் நவராத்தியின் போது இறைச்சி விற்பனைக்கு தடை- ஆக்‌ஷனில் இறங்கிய யோகி ஆதித்யநாத்!

07:03 PM (IST) Mar 30

தோல்விலிருந்து மீளுமா சிஎஸ்கே? பிளேயிங் 11, ஹெட் டூ ஹெட் சாதனை, வெற்றி வாய்ப்பு யாருக்கு?

06:51 PM (IST) Mar 30

டோங்காவில் மிகப்பெரிய நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை! மக்கள் பீதி!

பசிபிக் தீவு நாடான டோங்காவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

06:25 PM (IST) Mar 30

வரியைக் குறைக்க ரெடி! அமெரிக்காவுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த இந்தியா திட்டம்!

பாதாம், வால்நட், கிரான்பெர்ரி, பிஸ்தா உள்ளிட்ட பல அமெரிக்க விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க இந்திய அரசாங்கம் முன்வந்திருக்கிறது. இதன் மூலம் அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்த முயல்கிறது.

மேலும் படிக்க

06:22 PM (IST) Mar 30

மில்லியன் கணக்கான புகைப்படங்களை திருடும் கிப்லி! உங்கள் முகத்தை வைத்து சம்பாதிப்பது யார் தெரியுமா?

இப்போது சமூக ஊடங்களில் கிப்லி பாணியிலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதன்மூலம் மில்லையன் கணக்கான புகைப்படங்கள் திருடப்படுவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க

06:02 PM (IST) Mar 30

Annamalai vs ADMK: அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் ராஜினாமா! அண்ணாமலை உறுதி!

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைந்தால் ராஜினாமா செய்வேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உறுதியாக கூறியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

மேலும் படிக்க

05:48 PM (IST) Mar 30

இன்னொரு கட்சியை அழித்துதான் பாஜக வளரணும் அவசியமில்லை! ஒரே போடு போட்ட அண்ணாமலை!

பிரதமர் மோடி ஏப்ரல் 6-ம் தேதி ராமேஸ்வரம் வருகிறார். அதிமுக கூட்டணி குறித்து கருத்து கூற விரும்பவில்லை. ஸ்டாலினுக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.

மேலும் படிக்க

05:19 PM (IST) Mar 30

சீனியர் சிட்டிசன்களுக்கு வங்கியில் வீட்டுக்கடன் கிடைக்குமா?

மூத்த குடிமக்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்குமா? சீனியர் சிட்டிசன்களுக்கு கடன் வழங்க, வயது, வருமானம், திருப்பிச் செலுத்தும் திறன் போன்ற காரணிகளை வங்கிகள் பரிசீலிக்கின்றன. கடனுக்கான தகுதி, வட்டி விகிதம், மற்றும் தவணைக்காலம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

05:18 PM (IST) Mar 30

டொயோட்டா ஃபார்ச்சூனரை ஓரங்கட்ட நேரடியாக களத்தில் இறங்கிய MG Majestor

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா, குளோஸ்டர் எஸ்யூவி அப்டேட்டையும், எம்ஜி மஜெஸ்டர் என்ற புதிய பிரீமியம் வேரியண்டையும் அறிமுகப்படுத்துகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாக வரும் இந்த வாகனம் மேக்சஸ் D90 எஸ்யூவியில் இருந்து உத்வேகம் கொண்டுள்ளது.

மேலும் படிக்க

05:06 PM (IST) Mar 30

என்னது பழ ஜூஸ் குடிச்சா கேன்சர் வருமா? ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் புற்று நோய்!

புத்துணர்ச்சியூட்டும் ஐஸ்கட் டீ அல்லது பழச்சாறு தீங்கற்றதாகத் தோன்றினாலும், சர்க்கரை பானங்களை அதிகமாக உட்கொள்வது வாய்வழி புற்றுநோய்க்கான அதிக ஆபத்து உட்பட பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

மேலும் படிக்க

05:01 PM (IST) Mar 30

அமெரிக்க ராணுவ உதவி கடன் இல்லை! பணத்தை திருப்பி தர முடியாது! ஜெலன்ஸ்கி அதிரடி!

ரஷ்யா-உக்ரைன் போர் (Russia Ukraine War) நடந்து கொண்டிருக்கும்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ளார். அமெரிக்காவின் இராணுவ உதவியை உக்ரைன் கடனாக ஒருபோதும் ஏற்காது என்று ஜெலென்ஸ்கி கூறினார்.

மேலும் படிக்க

05:01 PM (IST) Mar 30

திருச்சி-யாழ்ப்பாணம் நேரடி விமான சேவை!

இண்டிகோ திருச்சிராப்பள்ளிக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே நேரடி விமான சேவையை மார்ச் 30, 2025 அன்று தொடங்குகிறது. இது தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பயணத்தை எளிதாக்கும்.

மேலும் படிக்க

04:56 PM (IST) Mar 30

மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு மோட்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்த இளையராஜா!

04:40 PM (IST) Mar 30

Hardik Pandya: மீண்டும் அதே தவறு! ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?

குஜராத் டைட்டன்ஸ்க்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதால் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க

04:22 PM (IST) Mar 30

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்! மாதம் ரூ.5000 பெறும் அசத்தல் திட்டம் - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி

PM இன்டர்ன்ஷிப் திட்ட காலக்கெடு: இந்த இன்டர்ன்ஷிப்பிற்கு விண்ணப்பிக்கவும், ரூ.5,000 மாதாந்திர உதவித்தொகை முதல் ரூ.6,000 மானியம் வரை பெறவும், எப்படி விண்ணப்பிப்பது என்பதைப் பார்க்கவும்.

மேலும் படிக்க

03:50 PM (IST) Mar 30

கனமழைக்கு நாள் குறித்த வானிலை! எந்தெந்த மாவட்டங்களில் ஊத்தப்போகுது தெரியுமா?

தமிழகத்தில் ஏப்ரல் 2, 3 தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர், தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க

03:46 PM (IST) Mar 30

5 ஆண்டுகளில் 7,388% லாபம்! ஐபிஎஸ் அணிகளை வளைத்துப் போட்ட நிறுவனம்!

எராயா லைஃப்ஸ்பேசஸ் பங்கு ஐபிஎல் அணிகளுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தால் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எபிக்ஸ் டிராவல்ஸ் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கான தங்குமிட வசதிகளை செய்து தரவுள்ளது.

மேலும் படிக்க

03:05 PM (IST) Mar 30

மன் கி பாத்: ஜவுளி கழிவில் இந்தியாவின் நிலை குறித்து பிரதமர் மோடி கவலை!

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஜவுளி கழிவுகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். துணிகளை மறுசுழற்சி செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜவுளி கழிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.

மேலும் படிக்க

03:02 PM (IST) Mar 30

ஆரம்பித்த வேகத்தில் புது சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட சன் டிவி! ஷாக் ஆன ரசிகர்கள்

சீரியல்களுக்கு பேமஸ் ஆன சன் டிவி, கடந்த 4 மாதங்களுக்கு முன் தொடங்கிய சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டுவந்துள்ளது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

02:46 PM (IST) Mar 30

தப்பு பண்ணிட்டேன்; ஏண்டா அந்த படத்துல நடிச்சோம்னு ஃபீல் பண்ணும் பானுப்பிரியா!

மூத்த நடிகை பானு பிரியா தான் நடித்த படங்கள் குறித்து பேசுகையில் விருப்பமில்லாமல் சில படங்களில் நடித்தேன், நடித்த பிறகு தவறு செய்த உணர்வு வந்தது என கூறி உள்ளார்.

மேலும் படிக்க

02:35 PM (IST) Mar 30

இனி எல்லாருமே தாய்பாலின் சுவையை ருசிக்கலாம்! வெளியாகிறது தாய்ப்பால் ஐஸ்கிரீம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் ஒன்று தாய்ப்பால் சுவையில் புதிய ஐஸ்கிரீமை வெளியிட உள்ளதாக அதிகரித்துள்ளது. இதனால் அனைவரும் தாய்ப்பாலின் சுவையை அனுபவிக்க முடியும் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் படிக்க

02:12 PM (IST) Mar 30

MIக்கு 2 தோல்விகள் சகஜம்; டிராபி வெல்லும் வாய்ப்பு இருக்கிறது - சஞ்சய் மஞ்ச்ரேகர்!

02:08 PM (IST) Mar 30

சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்; தடபுடலாக விருந்து வைத்த ஜோதிகா! என்ன விசேஷம்?

நடிகர் சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் தங்கள் வீட்டில் சினிமா ஹீரோயின்களுக்கு தடபுடல் விருந்து வைத்துள்ளனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க

02:03 PM (IST) Mar 30

மாணவர்களுக்கு குஷியான நியூஸ்.! முன் கூட்டியே கோடை விடுமுறை-பள்ளிக்கல்வித்துறை அதிரடி

பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு நடைபெற்று வருகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தேர்வுகள் முன்கூட்டியே தொடங்கப்பட்டு, ஏப்ரல் 17ஆம் தேதியே கோடை விடுமுறை விடப்படுகிறது.

மேலும் படிக்க

02:01 PM (IST) Mar 30

தன்னலமில்லா சேவை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்: பிரதமர் மோடி பாராட்டு!

நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களின் சேவையை பிரதமர் மோடி பாராட்டினார். மேலும், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்துக்குச் சொந்தமான ஆராய்ச்சி மையத்தின் புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். ஆர்.எஸ்.எஸ் - பாஜக இடையே கருத்து வேறுபாடு இல்லை என மோகன் பகவத் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க

01:55 PM (IST) Mar 30

7 மாற்றங்கள் + குறைந்தபட்ச சம்பளம் உயர்வு.. 8வது ஊதியக் குழு நியூ அப்டேட்

மோடி அரசு புதிய 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்த அறிவித்துள்ளது. ஏப்ரலில் சம்பள உயர்வு அறிவிப்பு வெளியாகலாம். மத்திய அரசு ஊழியர்கள் மத்தியில் 8-வது ஊதியக் குழு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

01:47 PM (IST) Mar 30

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 102 பயணிகள்! நடந்தது என்ன?

SpiceJet emergency landing: ஜெய்ப்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தின் டயர் தரையிறங்கும் முன் வெடித்தது. விமானியின் திறமையால் 102 பயணிகள் உயிர் தப்பினர். விமானம் தாமதமானதால் பயணிகள் அவதி.

மேலும் படிக்க

01:38 PM (IST) Mar 30

தொழிற்பேட்டைகளில் தொழில் தொடங்க வாய்ப்பு.! உடனே பதிவு செய்யுங்கள்- தமிழக அரசு அதிரடி

தமிழ்நாடு அரசு, தாட்கோ மூலம் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட தொழிற்பேட்டைகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கு தொழில் தொடங்க வாய்ப்பளிக்கிறது. வாடகை மற்றும் குத்தகை முறையில் தொழிற்கூடங்கள் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஈங்கூர் தொழிற்பேட்டையில் தள பார்வையிடலாம்.

மேலும் படிக்க

01:24 PM (IST) Mar 30

ஓயோவில் ரூம் புக் செய்கிறீர்களா? இந்த தவறை மட்டும் பண்ண வேண்டாம்

பிரபல ஹோட்டல் புக்கிங் நிறுவனமான ஓயோவுக்கு சர்வதேச அளவில் எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதை பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஒரு சிறிய கிளிக்கில் ஹோட்டல் ரூம்ஸை புக் செய்யும் வசதியை இந்த நிறுவனம் கொண்டு வந்தது.

மேலும் படிக்க

01:09 PM (IST) Mar 30

தங்கம் வாங்குவதில் இந்தியக் குடும்பங்கள் வெற லெவல் சாதனை!

இந்தியக் குடும்பங்களில் உள்ள தங்க இருப்பு 25,000 டன்களை எட்டியுள்ளது. இது உலகின் முதல் 10 நாடுகளின் மத்திய வங்கிகள் வைத்திருக்கும் தங்கத்தை விட அதிகம். பொருளாதார ரீதியாக மட்டுமின்றி கலாச்சார அடையாளமாகவும் இந்தியாவில் தங்கம் அதிகமாக வாங்கப்படுவதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க

12:47 PM (IST) Mar 30

தமிழ் ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் உதவித்தொகை.! ஸ்டாலினுக்கு பறந்த முக்கிய கோரிக்கை

தமிழ்நாட்டில் தமிழ் படித்த ஆசிரியர்கள் வேலைவாய்ப்பின்றி தவிப்பது குறித்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்களை உருவாக்க அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

More Trending News