MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!

SRH vs DC: ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு! சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை ஊதித்தள்ளிய டெல்லி!

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மிட்ச்செல் ஸ்டார்க் 5 விக்கெட் வீழ்த்தினார்.

2 Min read
Author : Rayar A
Published : Mar 30 2025, 07:55 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

IPL: Delhi Capitals beat Sunrisers Hyderabad: ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்களில் 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அபிஷேக் சர்மா முதல் ஓவரில் விப்ராஜ் நிகம் ரன் அவுட் ஆக்கப்பட்டு வெளியேறினார். ஸ்டார்க் மூன்றாவது ஓவரில் இஷான் கிஷன் (2) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (0) ஆகியோரை வெளியேற்றினார். இதனால் SRH 2.3 ஓவர்களில் 25/3 என தடுமாறியது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
SRH vs DC, IPL

SRH vs DC, IPL

மிட்செல் ஸ்டார்க் SRHக்கு எதிராக சிறப்பாக பந்துவீசி, இஷான் கிஷன் (2) மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி (0) ஆகியோரை மூன்றாவது ஓவரில் வெளியேற்றினார். SRH 2.3 ஓவர்களில் 25/3 என இருந்தது. டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாட முயன்று ஸ்டார்க் பந்துவீச்சில் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹென்ரிச் கிளாசன் அனிகேத் ஜோடி சேர்ந்து 22 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தனர். அனிகேத் அக்சர் படேல் பந்துவீச்சில் இரண்டு சிக்ஸர்களை விளாசினார். பின்பு மோஹித் சர்மா கிளாசெனை 32 ரன்களில் வெளியேற்றினார். விப்ராஜ் நிகம் ஒரு அருமையான கேட்ச் பிடித்தார். தொடர்ந்து அபினவ் மனோகர் 4 ரன்னில் குல்தீப் யாதவ் பந்தில் காலியானார்.

Hardik Pandya: மீண்டும் அதே தவறு! ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை?

34
SRH vs DC, Cricket

SRH vs DC, Cricket

இதற்கிடையே அனிகேத் 34 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்தார். அவர் 41 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். கடைசியில் பேட் கம்மின்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 163 ரன்னில் அடங்கியது.  ஸ்டார்க் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். குல்தீப்  யாதவ் 3 விக்கெட் வீழ்த்தினார். 

பின்பு சவாலான இலக்கை துரத்திய டெல்லி அணியின் வீரர்கள் ஃபாஃப் டு பிளெஸ்ஸி மற்றும் ஜேக் ஃபிரேசர் மெக் குர்க் சன்ரைசர்ஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். ஜேக் ஃபிரேசர்  நிதானம் காட்ட 
பாஃப் ஷமியின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். சிறப்பாக விளையாடிய ஃபாஃப் டு பிளெஸ்ஸி 27 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் 50 ரன்கள் எடுத்து ஜீஷன் அன்சாரி பந்தில் கேட்ச் ஆனார். தொடர்ந்து மெக் குர்க் 38 ரன்கள் எடுத்து ஜீஷன் அன்சாரி பந்தில் அவுட் ஆனார். 

44
IPL 2025, Sports News

IPL 2025, Sports News

கே.எல்.ராகுல் 15 ரன்னில் ஜீஷன் அன்சாரி பந்தில் கேட்ச் ஆனார். அடுத்தடுத்து விக்கெட்டுகள் போதிலும், டெல்லி வீரர்களான டிரிஸ்டன் ஸ்டப்ஸ் மற்றும் அபிஷேக் போரல் ஹைதராபாத் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். டெல்லி அணி 16 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 5 விக்கெட் வீழ்த்திய மிட்ச்செல் ஸ்டார்க் ஆட்டநாயகன் விருது வென்றார். டெல்லி அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்றதுள்ளது. ஹைதராபாத் அணி 2 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.

MIக்கு 2 தோல்விகள் சகஜம்; டிராபி வெல்லும் வாய்ப்பு இருக்கிறது - சஞ்சய் மஞ்ச்ரேகர்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ஐபிஎல் 2025
RR vs CSK
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
(115.5 ov) 368 & 234/5
INDIND
(166.0 ov)720/9
Day 5 - Session 3
Schedule ›
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரூ.45 கோடி சொத்து... ரூ.18 கோடி ஐபிஎல் சம்பளம்! பாஜகவில் புதிய பொறுப்பு பெற்ற சாஹலின் பின்னணி..!
Recommended image2
Rishabh Pant: நியூசிலாந்து மண்ணில் ரிஷப் பந்த் ருத்ரதாண்டவம்.. ஒரே சதத்தில் 5 வரலாற்றுச் சாதனைகள்!
Recommended image3
KL Rahul: 6 மாத உழைப்பு.. செஞ்சுரியில் கிடைத்த பலன்! நியூசிலாந்தில் மனம் திறந்த கே.எல். ராகுல்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved