இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், முதல்வர் ஸ்டாலின், வானிலை நிலவரம், தங்கம் விலை, சினிமா, ஜோதிடம், இந்தியா, உலகம், வர்த்தகம் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:54 AM (IST) Dec 21
இந்தியாவுக்கு பல ஜெய்சங்கர்கள் தேவையா என்ற கேள்விக்கு, தலைமைத்துவத்தின் முக்கியத்துவத்தை பிரதமர் மோடியை மையப்படுத்தி அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் விளக்கினார். இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
10:46 AM (IST) Dec 21
Karthigai Deepam Serial Best Scene Today Karthik Entry : கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக் பாஸாக எண்ட்ரி கொடுத்த அந்த ஒரு காட்சி தான் இப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
10:03 AM (IST) Dec 21
Sivakarthikeyan Car Accident Chennai : சிவகார்த்திகேயன் சென்ற கார் முன்னே சென்ற கார் மீது மோதி விபத்து ஏற்படுத்திய நிலையில் அவரே பஞ்சாயத்தை முடித்து வைத்துள்ளார்.
09:18 AM (IST) Dec 21
நவம்பர் 2025 விற்பனையில் ரெனால்ட் கைகர் இரண்டாம் இடத்திலும், க்விட் விற்பனை சரிவையும் சந்தித்துள்ளது. இதற்கிடையில், புதிய ரெனால்ட் டஸ்டர் 2026 ஜனவரியில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
08:46 AM (IST) Dec 21
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையையொட்டி பேக்கரி பொருட்களுக்கான தேவை அதிகரித்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
07:58 AM (IST) Dec 21
ரிவர் மொபிலிட்டி நிறுவனம் அதன் இண்டி எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டிசம்பர் 31 வரை சிறப்பு தள்ளுபடி சலுகைகளை அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் ரூ.14,999 குறைந்த முன்பணத்திலும், ரூ.22,500 வரையிலான தள்ளுபடியிலும் ஸ்கூட்டரை வாங்கலாம்.
07:37 AM (IST) Dec 21
அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கு ஆவணங்களில், டொனால்ட் டிரம்பின் புகைப்படங்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு குறிப்பிட்ட கோப்பு திடீரென காணாமல் போயுள்ளது.
06:50 AM (IST) Dec 21
வங்கதேசத்தில் அரசியல் கலவரங்கள் மற்றும் இளம் செயற்பாட்டாளர் ஷெரீப் உஸ்மான் ஹாதியின் கொலையால் பதற்றம் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, புர்கா/ஹிஜாப் அணியாத பெண்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோக்கள் வைரலாகி வருகிறது.