இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, இன்று பள்ளிகள் திறப்பு, அரசியல், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

01:42 AM (IST) Jun 03
Top 5 Bowlers with Most Wickets : ஐபிஎல் 2025 தொடரில் மட்டையாளர்கள் மட்டுமல்ல, பந்துவீச்சாளர்களும் அசத்தினர். விக்கெட்டுகளை அள்ளிய சிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருந்தனர். அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 5 பந்துவீச்சாளர்களைப் பற்றி இங்கே காண்போம்.
11:56 PM (IST) Jun 02
ஓபன்ஏஐ நிறுவனத்தின் ரகசிய அறிக்கை கசிந்தது! ChatGPT 2025-ல் "சூப்பர் அசிஸ்டென்ட்" ஆக மாறும் என்றும், தனிப்பயனாக்கப்பட்ட உதவிகளை வழங்கும் என்றும் தகவல்.
11:43 PM (IST) Jun 02
ஐஐடி மெட்ராஸ் மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நன்னீர் ஏரி வைரஸ்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை பாக்டீரியாக்களைக் கொன்று சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய முடியும். இந்த 20 ஆண்டு ஆய்வு, ஃபேஜ் சிகிச்சை மற்றும் சுற்றுச்சூழல் நிர்வாகத்திற்கு வழி வகுக்கிறது.
11:26 PM (IST) Jun 02
11:08 PM (IST) Jun 02
இஸ்ரோ SETU 2025 திட்டத்தின் கீழ் ஆசிரியர்களுக்கு 5 நாள் இலவச ஆன்லைன் விண்வெளி தொழில்நுட்பப் பயிற்சிக்கு அழைப்பு விடுத்துள்ளது. விண்கலங்கள், செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளிப் பயணங்கள் குறித்து கற்றுக்கொள்ளுங்கள். ஜூன் 6 கடைசி நாள்.
10:43 PM (IST) Jun 02
ஸ்மார்ட்போன்கள் எவ்வாறு ஒட்டுண்ணிகள் போல் செயல்படுகின்றன, நம் நேரத்தையும் கவனத்தையும் நிறுவனங்களின் லாபத்திற்காக எடுக்கின்றன என்பதை ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.
10:32 PM (IST) Jun 02
ஜப்பானிய நிறுவனமான கேஜி மோட்டார்ஸ் ஒற்றை இருக்கை மின்சார கார் மிபோட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. 7,000 டாலர் விலையுள்ள இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும்.
10:28 PM (IST) Jun 02
காஃபின் எவ்வாறு ஆழ்ந்த உறக்கத்தையும் மூளை அலைகளையும் சீர்குலைக்கிறது என்பதை AI ஆய்வுவெளிப்படுத்துகிறது. இது நரம்பியல் சிக்கலை அதிகரித்து, மூளை மீட்சியைத் தடுக்கிறது, குறிப்பாக இளம் வயதினரிடம்.
10:19 PM (IST) Jun 02
சீனாவின் ஆன்மிக மற்றும் தற்காப்புக் கலைகளின் தந்தையாகக் காஞ்சிபுரத்தில் பிறந்த போதிதர்மர் போற்றப்படுகிறார். எழுத்தாளர் ரவிக்குமார் தனது புத்தகங்கள் மற்றும் உரைகளின் மூலம் இந்தத் தகவலை வெளிப்படுத்தி வருகிறார்.
10:15 PM (IST) Jun 02
இளம் வயது ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவுகள் குறைந்து வருவதால், சக்திக்குறைவு, மனச்சோர்வு மற்றும் நெருக்கம் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன. Naturesque நிறுவனத்தின் Men Advance போன்ற மூலிகை மருந்துகள் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்க உதவும்.
09:57 PM (IST) Jun 02
யுஏஎன் செயல்படுத்தும் காலக்கெடு ஜூன் 30, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள், குறிப்பாக ஒழுங்கற்ற துறை தொழிலாளர்கள், காப்பீட்டு சலுகைகளைப் பெற முடியும்.
09:02 PM (IST) Jun 02
உலக அளவில் ChatGPT பயன்பாட்டில் இந்தியா முதலிடம் (13.5%). அமெரிக்காவை மிஞ்சியது. DeepSeek மொபைல் பயன்பாட்டில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இது AI-யின் விரைவான வளர்ச்சியை காட்டுகிறது.
08:50 PM (IST) Jun 02
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (HPCL) நிறுவனத்தில் 372 காலிப் பணியிடங்கள்! இந்தியா முழுவதும் , ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஜூன் 1 முதல் 30, 2025 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி. ரூ. 1.6 லட்சம் வரை சம்பளம்!
08:40 PM (IST) Jun 02
சி-டாக் சென்னை நிறுவனத்தில் 87 காலிப் பணியிடங்கள் அறிவிப்பு! ப்ராஜெக்ட் இன்ஜினியர், ப்ராஜெக்ட் அசோசியேட் உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஜூன் 20, 2025-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
08:35 PM (IST) Jun 02
08:17 PM (IST) Jun 02
டெல்லி மதராஸி முகாமில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் நூற்றுக்கணக்கான தமிழ்க் குடும்பங்கள் வாழ்விடங்களை இழந்துள்ளனர். மறுவாழ்வுக்குத் தகுதியானவர்களுக்கு நரேலாவில் குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டாலும், பலர் தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
07:51 PM (IST) Jun 02
செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டிருந்ததை கவனிக்காமல், அமைச்சர் தா.மோ. அன்பரசன் தேசியக்கொடிக்கு அவமரியாதை செய்துள்ளதாக பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.
06:54 PM (IST) Jun 02
பாட்னாவிலிருந்து ராஞ்சிக்குச் சென்ற இண்டிகோ விமானம், ராஞ்சி அருகே பறவை மோதியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் சேதம் ஏற்பட்டிருந்தாலும், 175 பயணிகளும், விமான ஊழியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்.
06:22 PM (IST) Jun 02
06:01 PM (IST) Jun 02
ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்கும் என தவறாக நினைத்து நாம் சாப்பிடும் சில உணவுகள் தான் நம்முடைய உடலில் சர்க்கரை அளவு சட்டென உயருவதற்கு காரணமாக உள்ளன. ரத்த சர்க்கரையை அதிகரிக்கும் இந்த உணவுகளை தெரிந்து கொண்டு கவனமாக சாப்பிடுவது நல்லது.
05:52 PM (IST) Jun 02
உங்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைக்க திட்டமிடுகிறீர்களா? மழை காலத்தில் நீங்கள் வளர்க்கக்கூடிய சில சிறந்த காய்கறிகள் இங்கே.
05:51 PM (IST) Jun 02
05:48 PM (IST) Jun 02
05:40 PM (IST) Jun 02
வெண்டைக்காய் ஊற வைத்த தண்ணீர் உடலுக்கு பல விதமான நன்மைகளை தரக் கூடியது என்பது தெரியும். ஆனால் இதை வைத்து முடியை அலசி வந்தால் முடி உதிர்வது குறைவதுடன், புதிதாக முடி வளரும் என்பது தெரியுமா? இந்த தண்ணீரை இப்படி பயன்படுத்தி பாருங்கள்.
05:26 PM (IST) Jun 02
எப்போதும் இளமை தோற்றத்துடனேயே காட்சி அளிக்க வேண்டும். முகம் பளிங்கு மாதிரி பளபளப்பாக இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? அதற்கு இந்த 5 ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தி பாருங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றை தினமும் பயன்படுத்தி வந்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
05:22 PM (IST) Jun 02
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
05:16 PM (IST) Jun 02
விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விரைவில் மறுஒளிபரப்பாக உள்ள செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
05:13 PM (IST) Jun 02
நெருக்கமான உறவுகளிடம் மறைக்காமல் வெளிப்படுத்த வேண்டிய 3 உணர்ச்சிகளை இங்கு காணலாம்.
05:08 PM (IST) Jun 02
தென்னாப்பிரிக்கா அதிரடி வீரர் ஹென்ரிச் கிளாசன் தனது 33 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.
05:06 PM (IST) Jun 02
உணவில் கலக்கப்படும் செயற்கை நிறமிகள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என அனைவருக்கும் தெரியும். ஆனால் என்னென்ன பாதிப்புக்களை ஏற்படுத்தும் என நம்மில் பலருக்கும் தெரியாது. பலருக்கும் தெரியாத இந்த பாதிப்புக்களை பற்றி வாங்க தெரிந்து கொள்ளலாம்.
04:54 PM (IST) Jun 02
நத்திங் ஃபோன் (3) ஜூலை 2025 இல் வெளியிடப்பட உள்ளது, இது Glyph இன்டெர்பேஸுடன் பிரீமியம் அம்சங்களைக் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா மற்றும் வேகமான சார்ஜிங் ஆகியவற்றுடன் வருகிறது.
04:54 PM (IST) Jun 02
04:52 PM (IST) Jun 02
ரஷ்யாவின் RS-28 சர்மட் (Satan-2) ஏவுகணை, நியூயார்க் போன்ற நகரங்களை நொடிகளில் அழிக்கும் ஆற்றல் கொண்டது. 15 MIRV வார்ஹெட்களுடன் 13,000 கி.மீ. தூரம் செல்லும் இந்த ஏவுகணை, அணு ஆயுதப் போர் மூலம் மனித குலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் அபாயம் கொண்டது.
04:43 PM (IST) Jun 02
நடிகர் சிவகார்த்திகேயன் தனது கடைக்குட்டி மகன் பவனின் முதல் பிறந்தநாளை கொண்டாடி அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
04:30 PM (IST) Jun 02
இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில், நமக்கு நோய் தோற்று ஏற்படாமல் தடுப்பதற்கு கடைபிடிக்க வேண்டிய எளிமையான 5 முறைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த 5 வழிகளை தவறாமல் கடைபிடித்தாலேயே கொரோனா பாதிப்பு வராமல் தடுக்க முடியும்.
04:23 PM (IST) Jun 02
ரூ.5க்குக் கீழ் உள்ள பென்னி பங்குகள் அதிக ஆபத்துள்ள, அதிக வெகுமதி வாய்ப்புகளாகக் காணப்படுகின்றன. முதலீட்டாளர்கள் குறைந்தபட்ச மூலதன முதலீட்டில் தங்கள் வருமானத்தைப் பெருக்கக்கூடிய ஒரு பிரேக்அவுட்டை எதிர்பார்க்கிறார்கள்.
04:18 PM (IST) Jun 02
“முத்த மழை..” பாடல் குறித்து தன்னையும் பாடகி தீ-யையும் ஒப்பிடுவதற்கு சின்மயி மன்னிப்புக் கோரியுள்ளார்.
04:03 PM (IST) Jun 02
தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
04:01 PM (IST) Jun 02
ரஷ்யா ஐரோப்பிய தலைநகரங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ஊகங்கள் தீவிர விவாதத்தை கிளப்பியுள்ளன. ஜெர்மனியின் பாதுகாப்புத் தலைவர் ரஷ்யா நேட்டோ நாடுகள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
03:34 PM (IST) Jun 02
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராக உள்ளார். அவரது சொத்து மதிப்பு, சொத்துகள், கார் சேகரிப்பு ஆகியவற்றைப் பார்ப்போம்.