Asianet Tamil News highlights : புதிய 75 ரூபாய் நாணயத்தை நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் வெளியிட்டார் பிரதமர் மோடி.

04:33 PM (IST) May 28
புதிய பாராளுமன்றத்தை கட்டியெழுப்புவது "ஜனநாயகத்தின் கோவில்" என்றும் "புதிய இந்தியாவின் கனவுகளின் பிரதிபலிப்பு" என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
03:29 PM (IST) May 28
தன்னை தானே புகழும் சர்வாதிகார பிரதமர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
02:15 PM (IST) May 28
பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
12:51 PM (IST) May 28
தமிழ்நாட்டு பால் கொள்முதலில் குஜராத் ‘அமுல்’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்துவதோடு, தற்சார்பு திட்டங்கள் மூலம் ஆவின் நிறுவனத்தையும் திமுக அரசு வலுப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் சீமான்.
12:44 PM (IST) May 28
புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் செங்கோல் நிறுவப்படுவதன் மூலம் எந்த மாநிலத்திற்கும் கிடைக்காத பெருமை தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற போது அதை அங்கீகரித்து இருந்தால் ஸ்டாலின் போன்றோரெல்லாம் உண்மையிலேயே தமிழ் பற்றாளர்கள் என ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்
11:30 AM (IST) May 28
ஆதீனங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்று, செங்கோலை வாங்கி, நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர் இருக்கை அருகே அதை நிறுவினார்.
10:42 AM (IST) May 28
வும்மிடி எத்திராஜுலுவுக்கும், அவரது சகோதரருக்கும் செங்கோல் தயாரிக்கும் போது அவருக்கு 20 வயது. தற்போது 97 வயதாகும் அவருக்கு புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதைக் காண வந்தார்.
10:14 AM (IST) May 28
ராஷ்டிரிய ஜனதா தளம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஒரு சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுள்ளது.
09:59 AM (IST) May 28
நாடு முழுவதும் உள்ள மாணவிகள், ஆசிரியைகள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான மத்திய அரசின் பயிற்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
08:57 AM (IST) May 28
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் அழகை விவரிக்கும் வகையில் பேசி வீடியோ வெளியிட்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு பிரதமர் மோடி ரிப்ளை செய்துள்ளார்.
08:56 AM (IST) May 28
‘தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி’ என்று புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா குறித்து ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.
08:42 AM (IST) May 28
தற்போது 97 வயதாகும் உம்மிடி எத்திராஜுலு. அவரும் அவரது சகோதரரும் செங்கோலை உருவாக்கும்போது அவருக்கு வயது 20. புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் பொருத்தப்படுவதை கண்டுகளிக்கிறார். செங்கோல் உம்மிடி பங்காரு நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது.
08:37 AM (IST) May 28
ஜப்பானில் ஒசாகா நகரில் இருந்து டோக்கியோவுக்கு புல்லட் ரயிலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணம் செய்வதை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
08:28 AM (IST) May 28
புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழா அட்டவணை:
காலை 7.15: பிரதமர் நரேந்திர மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்கு வருகிறார்
காலை 7.30: சடங்கு, ஹோமம் வளர்த்தல் என பூஜை துவக்கம். சுமார் ஒரு மணி நேரம் தொடரும்.
காலை 8.30: மக்களவைக்கு பிரதமர் வருகை.
காலை 9.00: சபாநாயகர் நாற்காலிக்கு அருகில் ‘செங்கோல்’ நிறுவப்படுகிறது
காலை 9.30: பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்ததும் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து பிரதமர் மோடி வெளியேறுகிறார்
பகுதி 2:
காலை 11.30: விருந்தினர்கள் வருகை.
நண்பகல் 12.00: பிரதமர் நரேந்திர மோடி வருகை. தேசிய கீதத்துடன் விழா தொடங்குகிறது.
நண்பகல் 12.10: ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இருவரிடம் இருந்து வரும் உரையை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் வாசிப்பார்
நண்பகல் 12.17: இரண்டு குறும் ஆவணப்படங்கள் திரையிடல்.
நண்பகல் 12.38: ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் உரை (கலந்துகொள்ள வாய்ப்பில்லை). மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை.
பிற்பகல் 1.05: ரூபாய் 75 நாணயம் மற்றும் நினைவு முத்திரையை பிரதமர் வெளியிடுகிறார்.
பிற்பகல் 1.10: பிரதமர் நரேந்திர மோடியின் உரை.
பிற்பகல் 2.00: விழா நிறைவடைகிறது.
08:25 AM (IST) May 28
பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
08:21 AM (IST) May 28
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பதிவுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் பதில்!!
08:20 AM (IST) May 28
புதிய நாடாளுமன்ற கட்டுமான பணியாளர்களை கவுரவித்தார் பிரதமர் மோடி. கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசு வழங்கி பிரதமர் மோடி கௌரவபடுத்தினார்.
08:18 AM (IST) May 28
வரலாற்றில் பதிவான நாள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
08:14 AM (IST) May 28
புதிய நாடாளுமன்றத்தில் சர்வமத பிராத்தனை நடந்து வருகிறது
08:11 AM (IST) May 28
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஆதீனங்களிடம் ஆசி வாங்கினார் பிரதமர் மோடி.
07:52 AM (IST) May 28
07:50 AM (IST) May 28
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறக்க உள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து இசையமைப்பாளர் இளையராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். பிரதமர் மோடியை வாழ்த்திய இளையராஜா
07:49 AM (IST) May 28
இந்திய பிரதமர் மோடி செங்கோல் முன்பு விழுந்து வணங்கினார். பிறகு பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசீர்வாதம் பெற்றார். ஆதீனங்கள் சேர்ந்து பிரதமர் மோடியிடம் செங்கோல் ஒப்படைத்தனர்.
07:46 AM (IST) May 28
அதற்போது புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பூஜை தொடங்கியுள்ளது.
07:02 AM (IST) May 28
நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் 970 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது.இந்த நான்கு மாடிக் கட்டிடத்தில் 1,224 எம்பிக்கள் தங்கும் வசதி உள்ளது. இது உணவகம், வாகன நிறுத்துமிடம், பெரிய அரசியலமைப்பு மண்டபம் எனப் பல பகுதிகளைக் கொண்டுள்ளது.
06:58 AM (IST) May 28
புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ள செங்கோல் நேற்று இரவு 7 மணிக்கு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றார்.
06:57 AM (IST) May 28
சுதந்திரத்திற்குப் பிறகு புனித செங்கோலுக்கு உரிய மரியாதை கொடுத்து கௌரவமான பதவி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
06:56 AM (IST) May 28
தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தின் பாரம்பரிய அடையாளம் - செங்கோல் என்றும் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்றும் நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார்.
06:56 AM (IST) May 28
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு விழா இரண்டு பகுதியாக நடைபெறவுள்ளது. இன்று காலை 7.15 மணிக்கு ஹோமம் வளர்க்கும் நிகழ்ச்சியும், காலை 11.30 மணிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது