Asianet News TamilAsianet News Tamil

பெண்களே மிஸ் பண்ணிடாதீங்க.. மாதம் ரூ.20,000 ஊக்கத்தொகை.. விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி..

நாடு முழுவதும் உள்ள மாணவிகள், ஆசிரியைகள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Ladies don't miss out.. Rs.20,000 per month incentive.. Tomorrow is the last date to apply..
Author
First Published May 28, 2023, 9:56 AM IST

பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஒரு அசத்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள மாணவிகள், ஆசிரியைகள், மகளிர் சமூக ஆர்வலர்களுக்கான பயிற்சி திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த பயிற்சி திட்டங்களுக்கான விண்ணப்பங்களை வரவேற்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முதல் நிலை அல்லாத நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த பயிற்சி திட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

இதையும் படிங்க : பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை தரக்குறைவாக பேசிய தகவல் உரிமை ஆர்வலர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்

03.07.2023 முதல் 31.08.2023 வரை நடைபெற உள்ள இந்த பயிற்சி திட்டத்தில் பங்கேற்க வேண்டும் சேர விரும்புவோர் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் படிப்பவராகவோ அல்லது பணியாற்றுபவராகவோ இருக்க வேண்டும்.

21 முதல் 40 வயதுக்கு உட்பட்டோர் இந்த பயிற்சி திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ரூ.20000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அவர்களுக்கு டெல்லியில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். பயிற்சியில் கலந்துகொள்ள டெல்லி சென்று வருவதற்கான 3-ம் வகுப்பு ஏசி ரயில் கட்டணம் செலுத்தப்படும்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் முக்கிய திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் குறித்து இந்த பயிற்சி திட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் சேர விரும்பும் பெண்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 29.05.2023 இரவு 11.55 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பெண்கள் பயிற்சி திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ

ஆன்லைன் விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க : தமிழன்டா.. தமிழுக்கு பெருமை சேர்த்த மோடி! ‘மகிழ்ச்சி’ ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன பிரதமர் மோடி

Follow Us:
Download App:
  • android
  • ios