ராஷ்டிரிய ஜனதா தளம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஒரு சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுள்ளது.

டெல்லியில் 64ஆயிரத்து 500 சதுர அடியில் , முக்கோண வடிவில், 4 மாடிகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதற்காக புதிய நாடாளுமன்றக் கட்டிடம் அமைந்துள்ள இடத்திற்கு வந்த பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகருடன் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற திறப்பு விழாவுக்கான சிறப்பு பூஜையில் அவர்கள் கலந்துகொண்டனர். குண்டம் வளர்க்கப்பட்டு, ஆச்சாரியார்களை வைத்து பூஜை நடத்தப்பட்டது. கிறிஸ்தவம், இஸ்லாமியம், பௌத்தம் உள்ளிட்ட அனைத்து குருமார்கள் வழிபாடும் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக சோழர்களின் பொற்காலத்திற்கு சாட்சியாக விளங்கும் செங்கோலை , தமிழக ஆதீனங்கள் 21 பேரும் பிரதமர் மோடியிடம் வழங்கினர்.

Scroll to load tweet…

அப்போது செங்கோலை பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி, ஆதீனங்கள் முன்னிலையில் சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து ஆசி பெற்றார். புதிய பாராளுமன்றத்தின் அளவு குறித்து ராஷ்டிரிய ஜனதா தளம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஒரு சவப்பெட்டியுடன் ஒப்பிட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.

Scroll to load tweet…
Scroll to load tweet…
Scroll to load tweet…

இதையும் படிங்க..தமிழன்டா.. தமிழுக்கு பெருமை சேர்த்த மோடி! ‘மகிழ்ச்சி’ ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன பிரதமர் மோடி