எங்கு இருந்தாலும் உங்கள் பள்ளிக்கு உதவுங்க.!! நம்ம ஸ்கூல் திட்ட விழாவில் முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கை!

By Raghupati RFirst Published Dec 19, 2022, 3:07 PM IST
Highlights

பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,அரசுப் பள்ளிகளை மேம்படுத்திட நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சென்னையில்  பள்ளிக் கல்வித் துறை சார்பில் “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்தை தொடங்கி வைத்தார். 

பிறகு உரையாற்றிய அவர், தமிழ்நாட்டின் கல்வித் துறை அமைச்சராக இருந்து எண்ணற்ற பல சாதனைகளை அந்தத் துறையில் நிகழ்த்தியிருக்கக்கூடியவர்தான் இனமானப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் இன்று அவருடைய பிறந்த நாளில், அரசுப் பள்ளிகளை தனியார் பங்களிப்போடு மேம்படுத்தும் மற்றுமொரு முன்னோடித் திட்டம் இங்கு தொடங்கப்படுகிறது. உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத காலம் எது என்று யாரைக் கேட்டாலும், "அது என்னுடைய பள்ளிக் காலம்தான்" என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். 

பள்ளிப் பருவம் : 

பள்ளிப் பருவத்தில் துள்ளித் திரிந்த அந்தக் காலத்தைத்தான் யாராலும் மறக்க முடியாது. அதேபோல் உங்களுக்கு நெருக்கமான நண்பர் யார் என்று கேட்டால், பெரும்பாலும் பள்ளிக்காலத் தோழர்களைத்தான் நாம் சொல்வதுண்டு. நேற்றுப் பார்த்தவரைக் கூட மறந்துவிடுவோம். ஆனால் நாம் குழந்தைகளாக இருந்தபோது, கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் பெயரை நிச்சயமாக நாம் மறக்க மாட்டோம். அவர்கள் முகங்கள் நமக்கு அடிக்கடி வந்து நிழலாடும். அந்தளவுக்கு ஒவ்வொருவருடைய வாழ்விலும் வசந்தகாலம் என்பது பள்ளிக் காலம்தான்.

இதையும் படிங்க..செலவே இல்லாமல் சுற்றுலா செல்ல வேண்டுமா.? நீங்க வந்தா மட்டும் போதும்! - இந்த நாடு பற்றி தெரியுமா உங்களுக்கு?

நம்ம ஸ்கூல் பவுண்டேசன் : 

நாம் இந்தளவிற்கு உயர்வதற்கு, இந்த உயரத்தை அடைவதற்கு உதவியாக இருந்தது அந்தப் பள்ளிக் கூடம் தான். அந்தப் பள்ளிக் கூடங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டாமா? என்ற உன்னதமான நோக்கத்தோடு "நம்ம ஸ்கூல் பவுண்டேசன்" நம்ம ஊர் பள்ளி என்ற பெயரில் இந்த அமைப்பு தொடங்கப்பட்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து முதல் ஆண்டு இதே இந்தியா டுடே ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அப்படி வெளியிட்டபோது, நம்பர் ஒன் முதலமைச்சர் இந்தியாவிலேயே தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர்தான் என்று ஒரு கருத்துக் கணிப்பை முதல் ஆண்டு வெளியிட்டார்கள். 

நம்பர் ஒன் முதலமைச்சர் : 

அப்போது பத்திரிகை நிருபர்களெல்லாம் இதை எப்படி பார்க்கிறீர்கள் என்று   என்னிடத்தில் வந்து கேட்டார்கள், உள்ளபடியே பெருமைப்படுகிறேன், ஆனால் இதைவிட எனக்கு என்ன பெருமை வந்து சேர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றால், நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதைவிட நம்பர் ஒன் தமிழ்நாடு என்று வர வேண்டும் என்று நான் முதல் ஆண்டே தெரிவித்தேன். அது, இந்த இரண்டாம் ஆண்டு நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அந்த சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கிறது. அனைவருக்கும் கல்வி என்ற அடிப்படை இலக்கை மையமாகக் கொண்டு நம்முடைய அரசு செயல்பட்டு வருகிறது. இல்லம் தேடிக் கல்வித் திட்டம் முழு வெற்றியை நமக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

அரசு பள்ளிகள் : 

கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து. அந்த அறிவுச்சொத்தை உருவாக்கித் தந்து வருகிறோம். இதன் தொடர்ச்சியாக, நம்ம ஊர் பள்ளித் திட்டத்தை  உருவாக்கி இருக்கிறோம். அரசுப் பள்ளிகள் என்பவை அரசின் சொத்துகள் மட்டுமல்ல, அது மக்களுடைய  சொத்துக்களுமாகும்.இதனை மனதில் வைத்துத்தான் பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தோம். 37 ஆயிரத்து 558 பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.  அவை மூலம், பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊராட்சிகள் மற்றும் சமூகத்தின் நலம்விரும்பிகள் அனைவரும் ஒரு கட்டமைப்பாக, நிறுவனமாக ஒன்றிணைந்தனர்.  

தங்கள் பள்ளிக்கு எது தேவையோ அதனை அவர்களே உருவாக்கித் தர முன்வந்துள்ளார்கள். இந்த எண்ணங்களை அரசு மட்டுமே தனியாகச் செய்திட  முடியாது.  உங்கள் அனைவருடைய உதவியும் ஆதரவும் இதற்கு நிச்சயம் தேவை. இப்போதும் எப்போதும் தமிழ்நாட்டுக் குழந்தைகளுக்கு ஆதரவு அளிக்க ஒன்றிணைய விரும்பக்கூடிய உங்கள் எல்லோருடனும் கைகோர்க்க நம்முடைய அரசு விரும்புகிறது. உள்ளூர் மக்களுடன் முன்னாள் மாணவர்களுடன், தொழிற்துறையுடன், உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் கைகோப்பதற்காகவும் ‘நம்ம ஊர் பள்ளி’ அடித்தளம் அமைத்திருக்கிறது.

இதையும் படிங்க..சொத்து பட்டியலை வெளியிட தயார்! வேலியில் போகிற ஓணானை.. அண்ணாமலைக்கு சவால் விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!

முதலமைச்சர் ஸ்டாலின் :   

உங்களுடைய சி.எஸ்.ஆர். நிதி பயனுள்ள முறையில் செலவிடப்படுவதை உறுதி செய்யுங்கள். எங்கள் தரப்பிலிருந்து உங்கள் பங்களிப்பை தமிழ்நாட்டுக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக பொறுப்புடன் பயன்படுத்துவோம் என்று நான் உறுதி அளிக்கிறேன். உங்களை வளர்த்த உங்கள் மண்ணுக்கு நீங்கள் செய்த, அதை நீங்கள் திருப்பிச் செய்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பு நம்ம ஸ்கூல் வாயிலாக, நம்ம பள்ளி வாயிலாக நமக்கெல்லாம் கிடைத்திருக்கிறது. 

நம்முடைய குழந்தைகள் வளர்ந்து உங்கள் நிறுவனங்களையும், பெருநிறுவனங்களையும், தமிழ்நாட்டின் கிராமங்களையும், நகரங்களையும் முன்னேற்றுவார்கள்;அவர்கள் நம் வளத்தையும், நம்பிக்கையையும் திட்டங்களையும் வளர்த்தெடுப்பார்கள். தமிழ்நாட்டின் தொழிற்துறையில் மிகச் சிறப்பான நிலையில், முன்னிலையில் இருக்கக்கூடிய திரு. வேணு சீனிவாசன் அவர்கள், இந்த நம்ம ஸ்கூல் பவுண்டேஷனின் தலைவராக இருப்பதும், பவுண்டேஷனின் தூதுவராக கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அவர்கள் இருப்பதும் நமக்கெல்லாம் கிடைத்திருக்கக்கூடிய பெருமை!

கனவு பள்ளி : 

இதற்கு தொடக்கமாக நானே முதல் நபராக எனது சொந்த நிதியிலிருந்து ஐந்து இலட்சம் ரூபாயை இந்தத் திட்டத்திற்காக நான் அளிக்கிறேன். உங்கள் ஒவ்வொரு ரூபாயும் அரசுப் பள்ளிகளுக்கே செலவிடப்படும் என உறுதி கூறுகிறேன். நம் பிள்ளைகளின் கல்விக்கென உங்களிடம் நிதியுதவி வேண்டி நிற்கும் இந்தக் கோரிக்கையை ஏற்று நம் பள்ளிக்கூடங்களை மேம்படுத்துவதற்காக வாரி, வாரி வழங்கிடவேண்டும். அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்துவோம், நாம் காண விரும்பிய கனவுப் பள்ளியை நாம் உருவாக்குவோம் என்று பேசினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இதையும் படிங்க..டாஸ்மாக் சரக்குக்கு பில் இருக்கா.? வாட்ச்க்கு மட்டும் பில் கேட்குறீங்க.? திமுகவுக்கு எதிராக சீறிய பாஜக!

click me!