அரசுப் பேருந்தில் தமிழ் மொழிக்கு பதிலாக சீன மொழியில் வந்த பெயர் பலகை; பயணிகள் அதிர்ச்சி

By Velmurugan sFirst Published Apr 25, 2024, 7:24 PM IST
Highlights

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில், அரசுப் பேருந்து ஒன்றில் திடீரென சீன மொழியில் ஒளிர்ந்த பெயர் பலகையால் பேருந்து எந்த ஊருக்கு செல்கிறது என அறிய முடியாமல் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

தென் தமிழகத்தின் பிரதான பேருந்து நிலையங்களில் ஒன்றாக திண்டுக்கல்  காமராஜர் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த காமராஜர் பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருப்பூர், காரைக்குடி, தேனி, கம்பம், கோவை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும் இரவு, பகலாக சுமார் ஆயிரம் பேருந்துகள் இந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. 

குடிபோதையில் தகராறு; பெற்ற மகன் என்றும் பாராமல் தந்தை செய்த கொடூர செயல் - கோவையில் பயங்கரம்

தமிழகத்தில் உள்ள அரசு பேருந்துகளில் உலக பொது மறை வாக்கியமான   திருக்குறளையும், அதனுடைய அதிகாரங்களையும் பேருந்தில் இடம் பெற செய்து தமிழின் பெருமைகளை உணர்த்தும் விதமாக தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து உள்ளது. ஆனால் திண்டுக்கல் மாவட்டம் மதுரை கோட்டத்திற்கு உட்பட்டTN 57 N 2410 என்ற  அரசு பேருந்தில்  திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி செல்லும்   அரசு பேருந்து என்று  இடம் பெற்றிருக்கும்  மின்னணு பெயர் பலகையில்  சீன மொழி இடம் பெற்று பேருந்து நிலையத்திற்கு வந்தது. 

மண்ட மேல இருந்த கொண்டைய மறந்துட்டியே பங்கு; கோவையில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தால் பொதுமக்கள் நகைப்பு

அந்த  அரசு பேருந்து சீன மொழியிலேயே பேருந்து  நிலையத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்றதால்   பேருந்தில் ஏற இருந்த பயணிகளும், காத்திருந்த பயணிகளும் தமிழ்  சொற்களுக்கு பதிலாக சீன மொழி இடம்பெற்று இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஹிந்தி மொழிக்கே எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தில் சீன மொழியுடன் அரசு பேருந்து இயங்கியது பெரும்  ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

click me!