சிக்கிய ரூ.35 கோடி கொக்கைன்.. சென்னையில் தொடரும் போதை பொருள் கடத்தல்.. பகீர் சம்பவம்..

By Ramya sFirst Published Apr 25, 2024, 7:03 PM IST
Highlights

சென்னை விமான நிலையத்தில் இன்று ரூ.35 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது

கடந்த சில நாட்களாகவே சென்னை விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வரும் போதை பொருட்கள் சென்னை வழியாக பல்வேறு மாநிலங்களுக்கும் கடத்தப்படுகின்றன. எனினும் அவ்வப்போது பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் ரூ.28 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் இன்றும் சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து இன்று காலை சென்னை சர்வதேச விமானநிலையத்தில் ஏர் ஏசியா பயணிகள் விமானம் தரையிறங்கியது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.

காவேரி கூக்குரல் சார்பில் ஒரே நாளில் 4 இடங்களில் மிளகு சாகுபடி கருத்தரங்கு!

அப்போது கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னை வந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அந்த பயணியை நிறுத்தி அதிகாரிகள் விசாரித்த போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார். இதை தொடர்ந்து அதிகாரிகள் அவரிடன் உடைமைகளை சோதனை செய்த போது, அவரின் பைக்குள் கொக்கைன் போதைப் பொருள் பார்சல் இருந்துள்ளது. 

அந்த பார்சலில் 3.5 கிலோ மதிப்புள்ள கொக்கைன் போதை பொருள் இருந்துள்ளது. அதன் சர்வதேச மதிப்பு ரூ.35 கோடி என்று கூறப்படுகிறது. அந்த நபரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எதற்காக அந்த நபர் சென்னைக்கு அந்த போதை பொருளை கடத்தி வந்துள்ளார்?

அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. அந்த பயணி சர்வதேச போதை பொருள் கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால் இதுகுறித்து மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கையில வச்ச மையே அழியல; அதுக்குள்ள ஓட்ட காணும்னு போராட்டமா? கோவையில் வசமாக சிக்கிய பாஜகவினர்

சென்னை விமான நிலையத்தில் நேற்று  ரூ.28 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்றும் ரூ.35 கோடி மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

click me!