சென்னை புழல் சிறையில் கைதிகளிடையே மோதல்; 1 பெண் காவலர், பெண் கைதி காயம்

By Velmurugan s  |  First Published Apr 25, 2024, 11:31 AM IST

சென்னை மத்திய புழல் சிறையில் நடைபெற்ற இருவேறு மோதல் சம்பவங்களால் 1 பெண் காவலர், 1 பெண் கைதி காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


சென்னை மத்திய புழல் சிறையில் போதைப் பொருள் வழக்கில் தொடர்புடைய திரிபுராவைச் சேர்ந்த சலோமகாதூண் என்ற பெண் கைதி மற்றும் சக பெண் கைதிகள் இடையே வரிசையில் நின்று உணவு வாங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனை அடுத்து மோதலை தடுக்கச் சென்ற பெண் காவலர் சசிகலாவை கீழே தள்ளிவிட்டதில் பெண் காவலர் சசிகலாவிற்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனை அடுத்து  காயமடைந்த சசிகலா அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். சிறைத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட பெண் கைதி மீது வழக்கு பதிவு செய்து புழல் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tap to resize

Latest Videos

undefined

என் கர்ப்பத்திற்கு அந்த போலீஸ் தான் காரணம்; திருமணத்தை மீறிய உறவை சுட்டிகாட்டி காவல் நிலையம் முன் பெண் தர்ணா

இதே போன்று சென்னை புழல் பெண்கள் சிறை பன்னிரண்டாவது பிளாக்கில் விசாரணை கைதிகளாக இருந்து வரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்த திருநங்கை ஷீபா என்பவரும், எருக்கஞ்சேரியை சேர்ந்த அகல்யா என்பவரும் சென்னை கொடுங்கையூர் பகுதியில் கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு விசாரணை கைதிகளாக தற்போது புழல் சிறையில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அதே பிளாக்கில் இருக்கும் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்ட பெண் கைதியான வண்ணாரப்பேட்டை சேர்ந்த லட்சுமி என்பவருக்கும், இந்த இரண்டு திருநங்கைகளுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்பொழுது திருநங்கைகள் இருவரும் பெண் கைதி லட்சுமியிடம் எங்கள் பிறப்பை பற்றி தவறாக பேசினாயா? என கூறி வாக்குவாதம் செய்த படி ஆபாச வார்த்தைகளால் லட்சுமியை திட்டி தாக்கியுள்ளனர்.

நெல்லையில் தனிமையில் பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறிப்பு

இதில் தாக்குதலுக்கு உள்ளான பெண் கைதி லட்சுமிக்கு கழுத்து மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு புழல் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் தற்போது புழல் சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!