சென்னை செங்குன்றம் பகுதியில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சென்னை செங்குன்றம் காமராஜர் நகர் ஜி.என்.டி. புறவழிச் சாலையில் பழைய சார் பதிவாளர் அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான எச்டிஎப்சி வங்கி இயங்கி வருகின்றது. அதே பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் இந்த ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் கல்லை கொண்டு உடைக்க முயற்சித்துள்ளார்.
மோடியின் ரத்த அணுக்களில் ஊடுருவியுள்ள முஸ்லிம் வெறுப்பு; வைகோ கடும் கண்டனம்
undefined
இதனை சிசிடிவி காட்சியில் கண்காணித்த பாதுகாவலர், உடனடியாக இது தொடர்பாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் செங்குன்றம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது, மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து பணத்தை எடுக்க முயற்சித்துள்ளார். காவலர்களை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து செங்குன்றம் காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வனவிலங்கு வேட்டை; எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு போலீஸ் வலை
அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் செங்குன்றம் அடுத்த வடகரையை சேர்ந்த அலெக்ஸாண்டர் (வயது 40) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வங்கி அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்ற சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.