என்னுடைய ஆசைக்கு இணங்கனா போதும்! உன்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்குறேன்! மறுத்த பெண்ணை கதறவிட்ட தானு.!

Published : Apr 21, 2024, 07:17 AM ISTUpdated : Apr 21, 2024, 07:49 AM IST
என்னுடைய ஆசைக்கு இணங்கனா போதும்! உன்ன ராணி மாதிரி வச்சு பாத்துக்குறேன்! மறுத்த பெண்ணை கதறவிட்ட தானு.!

சுருக்கம்

நீ கணவரால் கைவிடப்பட்டவள் தானே அதனால் என் சொல்படி கேட்டு என் ஆசைக்கு இணங்கி நீ நடந்துக் கொண்டால் சம்பளத்தோடு சேர்ந்து நீ விருப்பப்பட்டதை எல்லாம் செய்கிறேன் என்று மிகவும் மோசமாகவும் ஆபாசமாகவும் என்னிடம் பேசினான். 

தாம்பரம் அருகே மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை மண்ணிவாக்கத்தை சேர்ந்த வடிவாம்பிகை(46) என்ற பெண் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளருக்கு பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில்,  சென்னை - 600083, காசி டாக்கீஸ் மூன்றாவது மாடியில் இருக்கும் long drive Restro bar and Restuarent-ல் பெண் பௌன்சர் வேலைக்கு என்னை சேர்த்து முதலாளி என்று கூறிக் கொள்ளும்  தானு என்பவன் எனக்கு மாத சம்பளம் ரூபாய் முப்பதாயிரம் மட்டும் என்று சொல்லி வேலைக் கொடுத்தான். ஆனால் நான் வேலைக்குச் சேர்ந்து நான்கு மாதம் ஆன நிலையில் என் சம்பள பணத்தை மாதமாதம் சரியாக கொடுக்காமல் இடையிடையே சிறுக சிறுக சுமார் ரூ. 40000/ மட்டுமே எனது வங்கிக் கணக்கில் அனுப்பி உள்ளான். 

இதையும் படிங்க: நடத்தையில் தீராத சந்தேகம்! தாலி கட்டிய மனைவி கல்லால் அடித்து கொலை! இறுதியில் கணவர் என்ன செய்தார் தெரியுமா?

இதனால் எனது மாதந்திர குடும்ப செலவுகளை என்னால் பூர்த்தி செய்ய முடியாமல் தானுவிடம் என்னுடைய பாக்கி சம்பளத்தை முழுவதுமாக கொடுத்து விடுங்கள் நான் வேறு இடத்திற்கு வேலைக்கு போய்க் கொள்கிறேன் என்று கேட்டேன். அதற்கு அவன் பாக்கி சம்பளத்தை தர மறுத்ததோடு அல்லாமல் என் குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி நீ கணவரால் கைவிடப்பட்டவள் தானே அதனால் என் சொல்படி கேட்டு என் ஆசைக்கு இணங்கி நீ நடந்துக் கொண்டால் சம்பளத்தோடு சேர்ந்து நீ விருப்பப்பட்டதை எல்லாம் செய்கிறேன் என்று மிகவும் மோசமாகவும் ஆபாசமாகவும் என்னிடம் பேசினான். 

அதற்கு மறுநாள் மறுப்பு தெரிவித்த காரணத்தால் 15.04.2024 அன்று  சுமார் 5AM மணியளவில் பலாத்கார முறையில் அவன் என்னை பாலியல் துன்புறுத்தி எனது உடலில் பின் தலையிலும், குரல் வலையிலும் நெஞ்சுப் பகுதியிலும், வயிற்றுப் பகுதியிலும் மேலும் வலது கண்ணிலும், இடது காதிலும் இரத்தம் வருமளவு கண்ணாடி பாட்டிலாலும் மற்றும் இரும்பு மைக்காலும் என்னை தாக்கி  மேலும் கைகளால் என்னை குத்தியும், கால்களால் மிக மோசமாக என்னை மிதித்தும் மரணம் ஏற்படும் வகையில் பயங்கரமாக தானு என்பவன்  என்னைத் தாக்கினான்.

இதையும் படிங்க:  கல்யாணத்த கிட்ட வச்சுக்கிட்டு செய்ற வேலைய இது! ஓரினச்சேர்க்கைக்கு ஆசைப்பட்ட IT ஊழியர்!இறுதியில் நடந்த ட்விஸ்ட்

என் மீது நடத்திய தாக்குதலுக்கு தானுவின் கூட்டாளிகளான ராஜ்குமார், அஜித் மற்றும் அடையாளம் தெரிந்தும் பெயர் தெரியாத இருவர் என்னை சுற்றி நின்று நான் தப்பிச் செல்ல முடியாத அளவுக்கு தடுத்தும் என் கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டு விட்டனர்.  எனவே அவர்கள் என்னை கொடூரமாக தாக்கி பாலியல் துன்புறுத்தல் செய்தும் இதுகுறித்து வெளியே சொன்னாலோ காவல்துறையில் புகார் அளித்தாலோ என்னையும் எனது குடும்பத்தாரையும் மாடியில் இருந்து தள்ளிவிட்டு உருத் தெரியாமல் கொலை செய்து விடுவேன் என்றும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்த தானுவின் மீதும் மற்றும் இதற்கு  உடந்தையாக இருந்த அவன் கூட்டாளியின் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து எனக்கு தகுந்த நியாயம் என் குடும்த்ததாருக்கும் உரிய பாதுகாப்பையும் அளித்து உதவி செய்யுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். ஆனால், இந்த புகாரை பதிவு செய்ய போலீஸார் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! குற்றவாளிகளுக்கு அடுத்தடுத்து ஜாமீன்! எதிர்பாராத ட்விஸ்ட் வைத்த காவல்துறை!
பெண் போலீசிடம் ஆசைவார்த்தை கூறி ஆசை தீர! வேலை முடிந்ததும் வேலையை காட்டிய வாலிபர்! விசாரணையில் அதிர்ச்சி!