சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் முக்கிய நீர் தேக்கமான திருவள்ளூர்அருகே உள்ள பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவான35 அடியைநெருங்குவதால் இன்று மாலை 4 மணியளவில் 1000 கன அடிஉபரி நீர்வெளியேற்றப்படுகிறது. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கைவிடுத்துள்ளது

08:55 PM (IST) Sep 25
வட்டி விகிதங்களைப் பொறுத்தவரை பிபிஎப், தபால் அலுவலக சேமிப்பு மற்றும் வங்கி பிக்சட் டெபாசிட் இவற்றில் எது சிறந்தது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
07:36 PM (IST) Sep 25
பிரதமர் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில் இந்த நாளில் அரசாங்கம் 15 வது தவணையை வெளியிடலாம். புதிய அப்டேட்டை உடனடியாக சரிபார்க்கவும்.
06:52 PM (IST) Sep 25
மின்சார வாகன சந்தையில் ஹோப் எலக்ட்ரிக் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் தன்னுடைய நிறுவன ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவை மக்களை கவரும்படி உருவாக்கி உள்ளனர்.
05:53 PM (IST) Sep 25
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகியது
04:43 PM (IST) Sep 25
பகலை விட இரவில் இரயில் ஏன் வேகமாக ஓடுகிறது என்பது தெரியுமா? பலருக்கும் விடை தெரியாத இந்த விஷயம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
03:22 PM (IST) Sep 25
30 நாட்களுக்கு பிறகு இந்த ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ்அப் (WhatsApp) வேலை செய்யாது. இந்த பட்டியலில் உங்களது மொபைல் போனும் இடம்பெற்றுள்ளதா என்பதை உடனடியாக சரிபாருங்கள்.
03:01 PM (IST) Sep 25
புதுச்சேரி பாஜக தலைவராக செல்வகணபதி எம்.பி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
02:31 PM (IST) Sep 25
உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்தால் அவர்களின் இறுதிச் சடங்குகளை இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்கிற அரசின் அறிவிப்பை கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.
01:45 PM (IST) Sep 25
சென்னை தியாகராய நகரில் உள்ள போத்தீஸ் ஜவுளிக்கடையின் குடோனில் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையின் தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்துள்ளதாக கூறப்படுகிறது
01:35 PM (IST) Sep 25
தமிழ் திரையுலகில் பல்வேறு மாஸ்டர் பீஸ் படங்களை கொடுத்துள்ள இயக்குனர் ஏ.ஆர்.முருதாஸ் தான் அடுத்ததாக சிவகார்த்திகேயன் படத்தை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
01:33 PM (IST) Sep 25
நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் படிக்க
01:32 PM (IST) Sep 25
விஜய் டிவி பிரபலமான, KPY பாலா போனில் தன்னுடைய மகளுக்காக உதவி கேட்ட நபருக்கு... முதல் ஆளாக ஓடி போய் உதவி செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
12:30 PM (IST) Sep 25
அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான தாமரை வடிவ நீரூற்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
11:50 AM (IST) Sep 25
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யவுள்ளார்
11:47 AM (IST) Sep 25
ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன ஜவான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.
10:38 AM (IST) Sep 25
பாலா இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள வணங்கான் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு உள்ளது.
10:11 AM (IST) Sep 25
சிலிக்கா ஜெல் கலந்த ஜூஸ் குடித்த சிறுவர்கள் உள்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
09:39 AM (IST) Sep 25
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினமான இன்று அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத 10 சுவாரஸ்ய தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
09:11 AM (IST) Sep 25
ஹாங்சோவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்தியா முதல் தங்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
08:41 AM (IST) Sep 25
பாலிவுட் நடிகை பரினீத் சோப்ராவை ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது.
07:45 AM (IST) Sep 25
மத மோதல்களை உண்டாக்கும் வகையிலும், பெரியார் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசியதாக எச்.ராஜா மீது புகார் செய்யப்பட்டதையடுத்து சிவகங்கை போலீசார் 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
07:45 AM (IST) Sep 25
மின் நிலையங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை சரி செய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. அந்தவகையில் சென்னையில் இன்று எண்ணூர், மடிப்பாக்கம், IT காரிடார் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
07:44 AM (IST) Sep 25
தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதும் தெரியாமல், சிறுகுறு நடுத்தர தொழில்முனைவோர்கள் தமிழக அரசை எதிர்த்துப் போராட்டம் நடத்தவிருக்கிறார்கள் என்பது கூடத் தெரியாமல் முதலமைச்சர் ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கிறார் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.