அயோத்தி ராமர் கோயிலில் ரூ.100 கோடியில் பிரம்மாண்ட தாமரை வடிவ நீரூற்று!
அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான தாமரை வடிவ நீரூற்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 2024ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் 24ஆம் தேதிக்குள் பிரதமர் மோடியால் அயோத்தி ராமர் கோயில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் வளாகத்தில் ரூ.100 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான தாமரை வடிவ நீரூற்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏறக்குறைய 25,000 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து, ஆம்பிதியேட்டர் பாணியில் இந்த மல்டிமீடியா ஷோ நீரூற்றை கண்டு ரசிக்க முடியும்.
குப்தர் காட் முதல் நயா காட் வரை 20 ஏக்கரில் தாமரை வடிவ நீரூற்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தனியார் செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது. நன்கு வரையறுக்கப்பட்ட கருப்பொருளுடன், உண்மையான தெய்வீக மற்றும் ஆன்மீக அனுபவத்தை வழங்கும் வகையில் நீரூற்று வளாகம் அமையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீரூற்று கோயிலின் சுற்றுப்புறத்தை வெறும் காத்திருப்பு வளாகமாக இருப்பதை விட, ஆன்மீக அனுபவத்தை கொடுக்கப்பதை நோக்கமாக கொண்டது. ராமரின் காவியக் கதையைச் சொல்லவும், யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தை உருவாக்கவும் இது பொருத்தமான இடமாக இருக்கும். இது, பார்வையாளர்களை அமைதிப்படுத்தவும், பிரார்த்தனை செய்யவும், ஒன்று சேரவும் செய்யும் ஒரு "மாயாஜால இடமாக" இருக்கும் என அத்தகவல்கள் கூறுகின்றன.
மத்தியப்பிரதேசம், ராஜஸ்தானில் பிரதமர் மோடி பிரசாரம்!
நீரூற்றின் நோக்கம் கோயில் வளாகத்தில் வெறும் அலங்காரமாக இருப்பதைத் தாண்டியது; மாறாக, இது கோவிலின் நெறிமுறையின் நீட்சியாகவும், கோவில் எழுப்பும் அதே அமைதியையும் உள்ளடக்கியது. நீரூற்றின் சாரத்திற்கும் கோவிலின் சுற்றுப்புறத்திற்கும் இடையிலான இந்த ஒத்திசைவு ஒரு இணக்கத்தை உருவாக்கும். இது பக்தர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் அவர்களின் ஆன்மீக மற்றும் உணர்ச்சி பரிமாணங்களைத் தொடும் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீரூற்று அதன் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான அனுபவங்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பகலில், நீரூற்று பல படிநிலை அடுக்குகளால் அனிமேஷன் செய்யப்படும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு, நீரூற்று ஒரு பெரிய மேடையாக மாறும், அங்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட நீர் நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை ராமாயண உலகத்திற்கு அழைத்துச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.