மகளுக்காக போனில் உதவி கேட்ட தாய்.. ஓடி வந்து உதவிய KPY பாலா!! என்ன மனுஷ சார் நீங்க.. குவியும் பாராட்டு!!
விஜய் டிவி பிரபலமான, KPY பாலாவை போனில் தொடர்பு கொண்டு தன்னுடைய மகளுக்காக உதவி கேட்ட தாய்க்கு... முதல் ஆளாக ஓடி போய் உதவி செய்துள்ளார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
KPY Bala Movies
வசதி படைத்தவர்களும், முன்னணி நடிகர்களும் கூட.. தன் பாக்கெட்டில் இருந்து சொந்த பணத்தை எடுத்து மற்றவர்களுக்கு உதவி செய்ய யோசிக்கும் நிலையில், KPY பாலா எந்த ஒரு பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து பல உதவிகளை செய்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
KPY Bala Donate Ambulance
பொதுவாக ஆரம்ப காலத்தில் பல நடிகர்கள், கஷ்டப்பட்டு நடித்து சம்பாதிக்கும் பணத்தை, தன்னுடைய ஆடம்பர தேவைகள், மற்றும் எதிர்காலத்துக்கு என சேமித்து வைப்பார்கள். ஆனால் பாலா மக்களுக்கு பயன்படும் விதத்தில் செலவு செய்து வருகிறார். இதுவரை மலைக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் 2 ஆம்புலன்ஸ் மற்றும் முதியோர் இல்லத்துக்கு ஒரு ஆம்புலன்சும் வாங்கி கொடுத்துள்ள நிலையில்... பல மாணவர்களை தன்னுடைய சொந்த செலவில் படிக்க வைத்து வருகிறார்.
KPY Bala Help
அதே போல், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்களுக்கும் தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் KPY பாலா. இவரின் செயல் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை குவித்து வருகிறது.
Mother Requesting Daughter Treatment
இந்நிலையில் பாலாவின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த போனில் பேசிய ஒரு தாய்... தன்னுடைய மகளுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அவரை பற்றி உங்களுடைய சமூக வலைத்தளத்தில் வீடியோ ஏதாவது பகிர்ந்தால், மருத்துவ சிகிச்சைக்கு ஃபண்ட் கிடைக்கும் என கூறியுள்ளார். மகள் சம்பந்ப்பட்ட சில வீடியோக்களையும் அவர் அனுப்பி வைத்துள்ளார்.
Bala Help Girl Treatment:
இந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்ள மனம் இல்லாத பாலா, அவரை நேரில் சந்திக்கலாமா என கேட்டுவிட்டு... வீட்டிற்கே நேரடியாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேலும் தன்னால் முடிந்த ஒரு லட்சம் தொகையை அவர்களிடம் கொடுத்தது மட்டும் இன்றி, அந்த பெண்ணின் பிஸியோ தெரபி சிகிச்சைக்கு ஆகும் செலவையும் தானே ஏற்று கொள்வதாக கூறியுள்ளார்.
Bala video:
இந்த வீடியோவை பாலா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பகிர, பலர் என்ன மனுஷன் சார் நீங்க... என புகழ்ந்து தள்ளி வருவதோடு, KPY பாலாவுக்கு பாராட்டுகளை குவித்து வருகிறார்கள். மேலும் இவரின் நல்ல மனசுக்கு தான் அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.