நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

09:18 PM (IST) Nov 22
மின்சார வாகனங்களின் வரத்து இந்திய வாகன சந்தையில் அதிகரித்து வருகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ செல்லும் என்எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
08:38 PM (IST) Nov 22
யுனெஸ்கோவிடம் சமர்ப்பித்ததில், ஈராக் அதன் பரப்பளவை 917 ஹெக்டேர்களாக மதிப்பிட்டுள்ளது. இது 1,700க்கும் மேற்பட்ட கால்பந்து மைதானங்களுக்கு சமம் ஆகும்.
07:14 PM (IST) Nov 22
காணொளி வாயிலாக நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் இஸ்ரேலுக்கும், தீவிரவாதக் குழுவான ஹமாஸுக்கும் இடையே நடந்து வரும் போரில், பிணைக்கைதிகளை விடுவித்ததை வரவேற்றார் பிரதமர் மோடி.
06:43 PM (IST) Nov 22
காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்லும் சதித்திட்டத்தை முறியடித்துள்ளது அமெரிக்கா. இந்த செய்தி உலக அளவில் விவாதங்களை உண்டாக்கி உள்ளது.
06:08 PM (IST) Nov 22
ஆசியான்-இந்தியா சிறுதானிய திருவிழா இந்தோனேசியாவின் தெற்கு ஜகர்த்தாவில் தொடங்கியது
06:07 PM (IST) Nov 22
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த என்கவுன்டரில் ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
05:54 PM (IST) Nov 22
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 3ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது.
05:26 PM (IST) Nov 22
தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அறிவிப்புக்கு பிறகு வியட்நாம் நாடு இந்திய சுற்றுலா பயணிகளுக்கான விசா விதிகளை தளர்த்தி உள்ளது.
05:05 PM (IST) Nov 22
பிரதமர் மோடி, அதானி ஆகியோரை மறைமுகமாக பிக்பாக்கெட்டுகளுடன் ஒப்பிட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்
05:00 PM (IST) Nov 22
Google Pay, PhonePe, Amazon Pay மற்றும் Paytm உள்ளிட்ட பிரபலமான பயன்பாடுகளின் UPI பரிவர்த்தனை வரம்பு வெளியிடப்பட்டுள்ளது.
04:24 PM (IST) Nov 22
தேர்தலுக்கு பிறகு எனது பங்கை கட்சி மேலிடம் முடிவு செய்யும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்
03:44 PM (IST) Nov 22
ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை வெறும் ரூ.9,990க்கு இப்போது வாங்கலாம். விண்டோஸ் 11 உடன் சமீபத்திய அம்சங்கள் போன்றவற்றை அடக்கியுள்ளது இந்த லேப்டாப்.
03:01 PM (IST) Nov 22
கே.ஜி.எப் படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆன கன்னட நடிகர் யாஷ்-ன் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:00 PM (IST) Nov 22
கலைஞர் கருணாநிதி முன்னர் மேடையில் பேசும்போது தன்னை கட்டாயப்படுத்தி வரவைத்ததாக அஜித் கூறியதும் ரஜினி எழுந்து நின்று கைதட்டிய பிளாஷ்பேக் சம்பவம் பற்றி பார்க்கலாம்.
01:24 PM (IST) Nov 22
சுகாதார கேடுகளை சரிபார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மோசமான காற்றின் தரம் குறித்து டெல்லி அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவுறுத்தியுள்ளது
12:38 PM (IST) Nov 22
உத்தரகாண்ட் சுரங்க மீட்பு பணிகளில் பாதுகாப்பான கால்வாய் அமைக்கப்பட்டு, சுரங்கப்பாதைக்குள் ஒரு சறுக்குவழியை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன
12:25 PM (IST) Nov 22
நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
12:20 PM (IST) Nov 22
பொள்ளாச்சி அருகே மினி வேன் ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டி அவரை கடித்து வைத்த திமுக நிர்வாகியை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
12:19 PM (IST) Nov 22
திமுகவின் கொள்கை பரப்பு துணைச்செயலாளராக உள்ள குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
11:41 AM (IST) Nov 22
கார்த்திக், அர்த்திகா நடிப்பில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்று என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
10:10 AM (IST) Nov 22
எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தின் சார்பில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு திரைத்துறை வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது.
09:53 AM (IST) Nov 22
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் திரிஷா, அடுத்ததாக பான் இந்தியா ஸ்டார் ஒருவருடன் ஜோடி சேர உள்ளாராம்.
09:08 AM (IST) Nov 22
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முழு நேர முனைவர் பட்டப்படிப்பு பயலும் (பிஎச்டி) மாணவர்கள் தமிழ்நாடு அரசின் ஊக்கத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
09:07 AM (IST) Nov 22
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
07:52 AM (IST) Nov 22
மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிடலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
07:51 AM (IST) Nov 22
தொடர் கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:38 AM (IST) Nov 22
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புரையின்படி, தீபத்திருநாளான 26.11.2023 அன்று 2500 பக்தர்கள் மட்டும் அண்ணாமலையார் மலை மீது ஏற பின்வரும் நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி அளிக்கப்படுகிறது.
07:37 AM (IST) Nov 22
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அம்பத்தூர் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
07:37 AM (IST) Nov 22
சென்னையில் விடிய விடிய கனமழை பெய்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.