மிரட்டுறாங்க ஐயா... கலைஞர் முன்பே மேடையில் அஜித் செய்த தக் லைஃப் சம்பவம்; மெர்சலாகி கைதட்டிய ரஜினி..!
கலைஞர் கருணாநிதி முன்னர் மேடையில் பேசும்போது தன்னை கட்டாயப்படுத்தி வரவைத்ததாக அஜித் கூறியதும் ரஜினி எழுந்து நின்று கைதட்டிய பிளாஷ்பேக் சம்பவம் பற்றி பார்க்கலாம்.
Ajith speech infront of Kalaignar
தமிழ் சினிமாவில் பல்வேறு மகத்தான சாதனைகளை படைத்தவர் கலைஞர். அவரின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கலைஞர் 100 என்கிற பெயரில் சினிமா சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரு விழாவை நடத்த ஏற்பாடு செய்துள்ளனர். அந்த விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
Ajith, karunanidhi
இந்த விழாவில் தமிழ் திரையுலகம் மட்டுமின்றி, இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு என பல்வேறு திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்டவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அதோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதையும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தனர்.
யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதை அறிக்கையில் குறிப்பிட்டதற்கு 2010-ம் ஆண்டு அஜித் செய்த தரமான சம்பவமே காரணமாக கூறப்படுகிறது. கடந்த 2010-ம் ஆண்டு பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்கிர பெயரில் தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞருக்கு பாராட்டு விழா ஒன்று நடத்தப்பட்டது. அந்த விழாவில் அஜித், விஜய் தொடங்கி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே கலந்துகொண்டு சிறப்பித்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Ajith, stalin
இந்த விழாவில் நடிகர் அஜித் மேடையில் பேசிய பேச்சை திரையுலகில் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. அவரின் அந்த பேச்சு திரையுலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்படி அவர் என்ன பேசினார் என்பதை பார்க்கலாம். அவர் பேசியதாவது : “நீங்க எவ்வளவோ பிரச்சனைகளை தீர்த்து வச்சிருக்கீங்க. உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமேல் இதுபோன்ற அரசியல் விழாக்களில் சினிமாக்காரர்கள் தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க ஐயா.
Ajithkumar speech
சினிமாவில் பொறுப்பில் இருக்கும் ஒரு சிலர் எங்களை கட்டாயப்படுத்தி வர வைக்கிறாங்க. எதாவது பிரச்சனை வந்தால் அரசியல் வாதிகள் குரல் கொடுக்கும் முன்னரே சினிமாவில் பொறுப்பில் இருப்பவர்கள் அறிக்கை வெளியிடுகிறார்கள். இதற்கு போராட்டம் நடத்த வர சொல்லி வற்புறுத்துறாங்க. வரலேனா ஒத்துழைப்பு தரமாட்டோம்னு மிரட்டுறாங்க ஐயா. இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க ஐயா என அஜித் ரசிகர்கள் முன்னிலையில், கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்.
Ajith with kalaignar karunanidhi
அஜித்தின் இந்த வெளிப்படையான பேச்சைக் கேட்டு அங்கிருந்த நடிகர்கள் அனைவரும் வாயடைத்து போயினர். குறிப்பாக அஜித்தின் பேச்சை வரவேற்கும் விதமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். அதுவும் அந்த சமயத்தில் சர்ச்சை ஆனது. பின்னர் அஜித் கலைஞரை சந்தித்து மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது. பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவில் அஜித் செய்த இந்த தக் லைஃப் சம்பவத்தால் தான் கலைஞர் 100 விழா அறிக்கையில் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்கள்.
இதையும் படியுங்கள்... மீசவச்ச குழந்தைனு சும்மாவா சொன்னாங்க... பேரன்களிடம் சூப்பர்ஸ்டார் எப்படி பழகுவார்? ரஜினி மனைவி சொன்ன சீக்ரெட்