150 நாட்களாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு கேட்டு தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

08:30 PM (IST) Nov 20
ரூ 490 கோடி சொத்து மதிப்புள்ள இந்தியாவின் பணக்கார நகைச்சுவை நடிகர் யாரென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நிச்சயம் அது கபில் சர்மா அல்லது பார்தி சிங் அல்ல.
07:48 PM (IST) Nov 20
விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் அருள் நந்து, மாத்யூ அருள் நந்து தயாரிப்பில், ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் நடித்துள்ள ‘ஜோ’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நேற்று நடந்தது.
06:15 PM (IST) Nov 20
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
05:48 PM (IST) Nov 20
05:19 PM (IST) Nov 20
இப்போது இவ்வளவு தொகை மட்டுமே இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனை விமான பயணிகள் தெரிந்து கொள்வது அவசியம்.
04:56 PM (IST) Nov 20
நாடாளுமன்ற மக்களவையில் 700க்கும் மேற்பட்ட தனிநபர் மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாக தெரியவந்துள்ளது
04:25 PM (IST) Nov 20
தெலங்கானா அருகே கட்டுமானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
03:47 PM (IST) Nov 20
ரயில் டிக்கெட் ரத்து செய்யப்பட்டால் எவ்வளவு பணம் திரும்பப் பெறப்படுகிறது, முதல் ஏசி முதல் ஜெனரல் வரையிலான கட்டணங்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
03:24 PM (IST) Nov 20
வரவிருக்கும் 2024ம் ஆண்டில் இந்தியாவில் வெளியாகவுள்ள கார்களில் முக்கியமான 5 கார்கள் பற்றியும், அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
03:00 PM (IST) Nov 20
நடிகர் அஜித்குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினியின் சொத்து மதிப்பு மற்றும் அவர் வாங்கிய சம்பளம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
02:38 PM (IST) Nov 20
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை துவங்க ஆளுநர் ரவி அனுமதி அளித்துள்ளார்
02:15 PM (IST) Nov 20
மாமன்னன் படத்தின் மாஸ் வெற்றிக்கு பின்னர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள வாழை திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாம்.
01:38 PM (IST) Nov 20
தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மதிகா சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
01:34 PM (IST) Nov 20
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்று வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே செல்ல உள்ள மூன்று போட்டியாளர்கள் யார் என்கிற தகவல் கசிந்துள்ளது.
12:31 PM (IST) Nov 20
நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது தேசிய மகளிர் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
11:48 AM (IST) Nov 20
காற்றின் தரம் சற்று மேம்பாடு அடைந்துள்ளதால் டெல்லியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன
11:16 AM (IST) Nov 20
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக ஒரு சில மாவட்டங்களில் வருகிற 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மிக கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
11:15 AM (IST) Nov 20
லண்டனில் பென்னி குயிக் சிலை மற்றும் கல்லரையை திமுக அரசு பராமரிக்கவில்லையென்றால், நானே முன்வந்து அவருடைய கல்லறையை சீரமைப்பதற்கும் அவருடைய சிலைக்கான பராமரிப்புத் தொகையும் செலுத்துவதற்கு முயல்வேன் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
11:01 AM (IST) Nov 20
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த பின்னர் தான் கதறி அழுததாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
10:50 AM (IST) Nov 20
இந்தியாவில் முதன்முறையாக சென்னை-பெங்களூர் இடையே இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது
10:05 AM (IST) Nov 20
தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு மூச்சுவிடுவதில் சிரமம் உள்ளதால் மூன்றாவது நாளாக அவருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
09:40 AM (IST) Nov 20
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் ஏற்கனவே 5 வைல்டு கார்டு போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் உள்ளே அனுப்பப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 பேர் வர உள்ளார்களாம்.
07:43 AM (IST) Nov 20
ஆளுநர் ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், ஆளுநர் ரவி டெல்லிக்கு சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
07:05 AM (IST) Nov 20
மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார்; ஆனால் அண்ணாமலை தலைமை இருக்கும் வரை ஒரு சீட் கூட கிடைக்காது என்றும் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
07:04 AM (IST) Nov 20
காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் வழக்கம் போல் காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இன்று வின்பனை செய்யப்படுகிறது.