இந்தியாவில் முதன்முறை: சென்னை-பெங்களூர் இடையே இரவு நேர வந்தே பாரத் ரயில்!
இந்தியாவில் முதன்முறையாக சென்னை-பெங்களூர் இடையே இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது
மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தற்போது மொத்தம் 34 வந்தே பாரத் ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டை பொறுத்தவரை . தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னை - மைசூரு, சென்னை - கோவை ஆகிய இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தென் தமிழக மக்களுக்காக நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு, பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நாட்டிலேயே முதன்முறையாக சென்னை-பெங்களூர் இடையே இரவு நேர வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, பெங்களூருவில் இருந்து நவம்பர் 20ஆம் தேதி (இன்று) மாலை 5.15 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் சிறப்பு ரயில் இரவு 10 மணிக்கு சென்னை வந்தடையும். மறுமார்க்கத்தில் நவம்பர் 21ஆம் தேதி (நாளை) இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 11 மணிக்கு கிளம்பும் வந்தே பாரத் சிறப்பு ரயில் புதன்கிழமை காலை 4.30 மணிக்கு வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் வாசித்து உறுதிமொழி எடுத்து அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தஞ்சை தமிழன்
கூட்ட நெரிசல், விடுமுறை தினங்களை கருத்தில் கொண்டு பயனிகள் நலனுக்காகவும் இயக்கப்படவுள்ள இந்த சிறப்பு ரயிலானது, சென்னை - பெங்களூரு இடையேயான தூரத்தை 5.30 மணி நேரத்தில் கடந்து விடும்.
“நாட்டின் வேறு எந்த ரயில்வே மண்டலங்களும் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவையை இயக்கவில்லை. ஆனால், சென்னை - திருநெல்வேலி இடையேயான வந்தே பாரத் சிறப்பு ரயிலுக்கு கிடைத்த வரவேற்பை கருத்தில் கொண்டு, இரவில் நேரத்தில் அமர்ந்து செல்லும் ரயிலில் பயணிகளின் கருத்துக்களை பெற விரும்புகிறோம். அதனடிப்படையில் இரவு நேர சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.” என தெற்கு ரயில்வேயின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.