அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு.. திடீர் ட்விஸ்ட் கொடுத்த நீதிமன்றம்.. ஆடிப்போன திமுக
உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்தது. இதுதொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொண்டதில் இதயத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்ற அனுமதி பெற்று காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஜூன் 22ஆம் தேதி அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்தார். பலமுறை ஜாமீனுக்கு அவர் விண்ணப்பித்தும் கூட ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது, தற்போது செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான வழக்கை அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமைக்கு (நவம்பர் 28) உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை விடுத்த நிலையில், செந்தில் பாலாஜியின் எம்.ஆர்.ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு எடுக்கப்பட்ட எம்ஆர்ஐ ஸ்கேனில் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது என்று அவரது சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் எம்ஆர்ஐ ஸ்கேன் உட்பட மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த முறை ஜாமீன் கிடைக்கும் என்று திமுக தரப்பு எதிர்பார்த்திருந்தது. இதனால் திமுக வட்டாரங்கள் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றன.
குடும்பத்தோடு ஜாலி ரைடு போக சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. இவ்வளவு கம்மி விலையா..