தென்மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது. பிரதமரை சந்தித்த பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

04:15 PM (IST) Dec 19
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்க தமிழக அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது
04:06 PM (IST) Dec 19
03:56 PM (IST) Dec 19
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் குறித்து கேள்வி கேட்ட எதிர்க்கட்சிகள் எம்.பி.க்களின் இடைநீக்க எண்ணிக்கை 100ஐ கடந்தது
03:01 PM (IST) Dec 19
பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.44.46 கோடி மொத்தக் கடன்களில் 69 சதவீதம் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது
01:21 PM (IST) Dec 19
அமெரிக்காவில் உள்ள நடிகர் நெப்போலியன்-னுக்கு சொந்தமான 300 ஏக்கர் விவசாய தோட்டத்துக்கு பிரபல யூடியூபர் முகமது இர்பான் சென்று அங்குள்ள வசதிகளை பற்றி கூறி இருக்கிறார்.
12:25 PM (IST) Dec 19
தென் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை முதல்வர் ஸ்டாலின் நாளை நேரில் பார்வையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
12:24 PM (IST) Dec 19
தென் மாவட்டங்களில் கனமழை குறித்து வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை சற்று தாமதமாக கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
11:56 AM (IST) Dec 19
தென்மாவட்டங்களில் வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மழைப்பொழிவு மிக அதிகமாக இருந்தது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாகவே கிடைத்தது. பிரதமரை சந்தித்த பிறகு தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி செல்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
11:25 AM (IST) Dec 19
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடியை விடுதலை ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
11:10 AM (IST) Dec 19
டெல்லியில் குளிர்காலத்தில் வீடற்றவர்களின் மரணங்கள் தொடர்பாக விசாரிக்க குழு ஒன்றை ஆம் ஆத்மி அரசு அமைத்துள்ளது
11:10 AM (IST) Dec 19
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்
10:51 AM (IST) Dec 19
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
10:32 AM (IST) Dec 19
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:50 AM (IST) Dec 19
பொது நிதி திரட்டும் திட்டத்தின் மூலம் 6 மணி நேரத்தில் ரூ.1 கோடி கிடைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
09:24 AM (IST) Dec 19
ஸ்ரீவைகுண்டத்தில், கனமழை காரணமாக சென்னை நோக்கி வந்த ரயிலில் சிக்கிக் கொண்ட பயணிகளை மீட்கும் நடவடிக்கை தொடங்கியது
09:15 AM (IST) Dec 19
தூத்துக்குடி, நெல்லை, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக்கடல் நோக்கி நகர தொடங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.
09:14 AM (IST) Dec 19
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் வரும் 23ம் தேதி வரை நடைபெற இருந்த பொறியியல் மாணவர்களுக்கான தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
09:02 AM (IST) Dec 19
08:50 AM (IST) Dec 19
நடிகை ராதா மகள் கார்த்திகா நாயர் தனது காதல் கணவருடன் ஹனிமூன் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கு எடுத்த புகைப்படங்கள் வைரலாகின்றன.
08:16 AM (IST) Dec 19
தென்மாவட்டங்களில் அபரிமிதமான மழை – வெள்ளத்தால் கடும் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு உதவிட புதிய தமிழகம் கட்சியினர் உடனடியாக நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என கிருஷ்ணசாமி உத்தரவிட்டுள்ளார்.
08:10 AM (IST) Dec 19
மழை மீட்பு பணிகள், வெள்ள நிவாரணம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்க பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்கிறார்.
07:57 AM (IST) Dec 19
Trains Cancelled : தென் மாவட்டங்களில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் அங்கு பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் 25க்கும் மேற்பட்ட ரயில்களை இன்று ரத்து செய்வதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
07:42 AM (IST) Dec 19
ஸ்ரீவைகுண்டம் அருகே சிக்கியிருக்கும் 500க்கும் மேற்பட்ட பயணிகளை மீட்க ராணுவ புறப்பட்ட ஹெலிகாப்டர் புறப்பட்டது. ரயிலில் சிக்கி இருப்பவர்களுக்கு உணவு அளித்துவிட்டு பின்னர் அதே ஹெலிகாப்டரில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
07:34 AM (IST) Dec 19
தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் திமுக இளைஞரணி மாநாடு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
07:33 AM (IST) Dec 19
வழக்கம்போல் இன்று பள்ளி, கல்லூரிகளில் இயங்கும் என தென்காசி மாவட்ட நிர்வாகம் கூறி வந்த நிலையில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
07:30 AM (IST) Dec 19
சென்னையில் 577வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.