சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

08:17 PM (IST) Sep 17
வைஷ்ணவி தேவி கோவிலுக்கான ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் 5 இரவு மற்றும் 6 பகல்களுக்கு ஐஆர்சிடிசி அறிவித்துள்ளது.
07:33 PM (IST) Sep 17
வேலூர் கந்தனேரியில் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பெரியார் விருது- கி.சத்தியசீலன்.
அண்ணா விருது - க.சுந்தரம்.
கலைஞர் விருது-ஐ.பெரியசாமி.
பாவேந்தர் விருது- மலிகா கதிரவன்.
பேராசிரியர் விருது - ந.இராமசாமி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் விருதுகளை வழங்கினார்.
07:32 PM (IST) Sep 17
காவிரி விவகாரம் தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழ்நாட்டின் அனைத்து கட்சி எம்.பி.க்கள் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சரை சந்திக்கவுள்ளனர்
07:16 PM (IST) Sep 17
கார் வாங்க போறீங்களா ? கார்கள் மீது தற்போது ரூ.1 லட்சத்திற்கும் மேல் தள்ளுபடி கிடைக்கிறது. அது எந்தெந்த கார்கள், அதன் விலை என்ன மற்றும் தள்ளுபடி எவ்வளவு போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
07:13 PM (IST) Sep 17
வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் பாமக இனியும் இலவுகாத்த கிளியாக இருக்க முடியாது.என ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்
06:28 PM (IST) Sep 17
திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் தொடங்கியது. மக்களுடன் ஸ்டாலின் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
05:24 PM (IST) Sep 17
இல்லத்தரசிகள் ஒவ்வொரு மாதமும் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும். சில ஆண்டுகளில் லட்சங்கள் மதிப்புள்ள தொகை தயாராகிவிடும். எப்படி தெரியுமா? அதனைப் பற்றி முழுமையாக பார்க்கலாம்.
04:58 PM (IST) Sep 17
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் அனைத்து ஏழை மக்களுக்கும் மாதத்திற்கு ரூ.10,000 நிதி உதவி வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது
04:46 PM (IST) Sep 17
ஹைதராபாத் மற்றும் ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்றவற்றை சுற்றிப் பார்க்க சூப்பரான டூர் பேக்கேஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது ஐஆர்சிடிசி. இதன் கட்டணம் மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
04:19 PM (IST) Sep 17
பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது
04:03 PM (IST) Sep 17
அணைகளுக்கான அவசர செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க மத்திய ஜல் சக்தி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்
03:50 PM (IST) Sep 17
03:42 PM (IST) Sep 17
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கஜ துவாரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்
03:30 PM (IST) Sep 17
பிஎஸ்என்எல் அதிக தினசரி டேட்டாவை வழங்குகிறது. வேலிடிட்டியில் ஏர்டெல்லை விட ஜியோ முன்னணியில் உள்ளது. சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை பற்றி காணலாம்.
02:59 PM (IST) Sep 17
கலைஞர் மகளிர் உரிமை தொகை விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால் மேல்முறையீடு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
02:38 PM (IST) Sep 17
இந்த ஐந்து முக்கியப் பணிகளின் காலக்கெடு செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.செய்யாவிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும். அது எந்தெந்த பணிகள் என்று விரிவாக இங்கு காணலாம்.
02:31 PM (IST) Sep 17
கீர்த்தி பாண்டியனை உருவகேலி செய்து கிண்டலடித்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளார் அசோக் செல்வன்.
01:43 PM (IST) Sep 17
சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். எனக்கும் பேசத் தெரியும். சுயமரியாதை உள்ள கட்சி பாஜக, கூட்டணியில் இருப்பதால் அடிமையாக இருக்க முடியாது. நல்ல போலீஸைப் பார்த்தால் திருடனுக்கு தேள் கொட்டியது போலத்தான் இருக்கும். வசூல் செய்து அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு புரியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.
01:42 PM (IST) Sep 17
டெல்லி மெட்ரோவில் பயணித்த பிரதமர் மோடிக்கு சமஸ்கிருதத்தில் பாட்டு பாடி பெண் ஒருவர் வாழ்த்து சொல்லிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
01:11 PM (IST) Sep 17
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வரும் மார்க் ஆண்டனி படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.
12:15 PM (IST) Sep 17
கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீயின் காதல் கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
12:15 PM (IST) Sep 17
தான் பெயரிலேயே அண்ணாவை வைத்து கொண்டு அண்ணாவை பற்றி விமர்சனம் செய்ய கூடாது. தமிழ் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. கட்சியை வளர்க்க வேண்டும் என்றால் வேறு ஏதாவது பேசிக் கொள்ளுங்கள் என அண்ணாமலைக்கு ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
12:02 PM (IST) Sep 17
பல்லடம் அருகே 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நபரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
11:28 AM (IST) Sep 17
விஜய் டிவி மூலம் பிரபலமான பாலா, தற்போது ஈரோடு அருகே ஆம்புலன்ஸ் வசதி இன்றி கஷ்டப்பட்ட பழங்குடியினர்களுக்காக புது ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார்.
10:33 AM (IST) Sep 17
கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், சைமா விருது விழாவில் அவரின் அடுத்த பட அப்டேட்டை கேட்டு ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
09:15 AM (IST) Sep 17
துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் கமல்ஹாசனின் விக்ரமும், மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனும் போட்டிபோட்டு விருதுகளை அள்ளிச்சென்றன.
08:33 AM (IST) Sep 17
கடந்த செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10ம் தேதி ஜி20 மாநாடு வெகு நேர்த்தியாக இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்று முடிந்தது. பல நாட்டு தலைவர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டை, இந்தியா வெற்றிகரணமாக நடத்தி முடித்ததற்கு, உலக அரங்கில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. இந்நிலையில் உலகளாவிய தலைவர்கள் குறித்த மதிப்பீடு ஒன்று வெளியாகியுள்ளது.
08:32 AM (IST) Sep 17
பிரதமர் நரேந்திர மோடி நாளை செப்டம்பர் 17 அன்று 73வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது பதவிக் காலத்தில், பிரதமர் மோடிக்கு பல்வேறு நாடுகளின் பல கவுரவ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு வழங்கப்பட்ட சர்வதேச விருதுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
08:31 AM (IST) Sep 17
செப்டம்பர் 17, 1950ல், அதாவது இந்தியா சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும், குடியரசாக ஆவதற்கு சில மாதங்களுக்கு முன்பும் பிறந்தவர் தான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தாமோதர்தாஸ் மோடி மற்றும் ஹீராபா மோடியின் ஆறு குழந்தைகளில் மூன்றாவது குழந்தை அவர் என்பது குறிப்பிடத்தக்கது.
08:30 AM (IST) Sep 17
டீ விற்பவராக இருந்து இந்தியாவின் பிரதமர் வரை மோடியின் வாழ்க்கைக் கதை ஒரு சாகசக் கதையைப் போல அனைவரையும் கவர்கிறது. இருப்பினும், அவரைப் பற்றி பலருக்கும் தெரியாத சில விஷயங்கள் இன்னும் இருக்கின்றன.
08:29 AM (IST) Sep 17
குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஹோட்டலில் வாங்கிய குடிநீர் பாட்டிலில் பல்லி செத்துக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
07:35 AM (IST) Sep 17
அதிகார பசிக்காக, அரசியல் ஆதாயத்திற்காக தமிழ்நாட்டு விவசாயிகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை காவு கொடுக்கும் திமுகவுக்கு வானதி சீனிவாசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
07:35 AM (IST) Sep 17
தூத்துக்குடியில் அம்மா உணவகத்தில் வாங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் அரணை இருந்த சம்பவம் வாடிக்கையாளரை அதிர்ச்சி அடைய செய்தது.
07:34 AM (IST) Sep 17
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து நள்ளிரவு வரை சூறைக்காற்று இடி, மின்னலுடன் விட்டு விட்டு பெய்த மழை பெய்தது. இதனால், சென்னை விமான நிலையத்தில் 5 சர்வதேச விமானங்கள் உட்பட, 38 விமான சேவைகள் தாமதமாகின. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.