Asianet News TamilAsianet News Tamil

அணை பாதுகாப்பு: கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க மத்திய அமைச்சர் பரிந்துரை!

அணைகளுக்கான அவசர செயல் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைக்க மத்திய ஜல் சக்தி அமைச்சர் பரிந்துரைத்துள்ளார்

Union Minister For Jal Shakti Suggests Joint Action Force for dam safety smp
Author
First Published Sep 17, 2023, 4:01 PM IST | Last Updated Sep 17, 2023, 4:01 PM IST

ஜல் சக்தி அமைச்சகத்தின் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை ஏற்பாடு செய்த அணை பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு (ஐ.சி.டி.எஸ்) ஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் (ஆர்.ஐ.சி) நிறைவடைந்தது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சிக்கு மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் பேசிய மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், எதிர்காலத்தில் அணை நிர்வாகத்தின் முக்கிய அம்சமாக இருக்கக்கூடிய அணையின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து வலியுறுத்தினார். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மத்திய அமைச்சர், அணை பாதுகாப்பு குறித்த சர்வதேச மாநாடு 2023 இன் முடிவுகள் அணை பாதுகாப்பு மற்றும் முக்கியமான அணை உள்கட்டமைப்பின் நீண்ட ஆயுளை உறுதி செய்வதில் நீண்ட தூரம் செல்லும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: புதிய கட்டிடத்தில் தேசியக் கொடியேற்றிய குடியரசு துணை தலைவர்!

தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்துடன் (என்ஐடிஎம்) அணைகளுக்கான அவசர செயல் திட்டங்களை (ஈஏபி) முன்னெடுத்துச் செல்ல கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைப்பது உள்ளிட்ட முக்கிய செயல்பாட்டு அம்சங்களை மத்திய ஜல் சக்தி அமைச்சர் பரிந்துரைத்தார்; பல்வேறு அணை பாதுகாப்பு சம்பவங்கள் மற்றும் தோல்விகள் குறித்து விவாதிக்க பயிலரங்கம் நடத்தவும், அதன் விளைவுகளை அனைத்து தரப்பினருக்கும் பரப்பவும் மத்திய அமைச்சர் பரிந்துரைத்தார்.

அணை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான திறன்களை வலுப்படுத்த இத்துறையில் முன்னணி வல்லுநர்கள் மற்றும் தலைவர்களுக்கு ஏதுவாக இரண்டு நாள் மாநாட்டில் பல்வேறு தொழில்நுட்ப அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அணை பாதுகாப்பு மற்றும் மேலாண்மை குறித்த மத்திய அரசின் முன்முயற்சிகளைப் பகிர்வதில் தொடங்கி, மகாராஷ்டிராவின் அணை பாதுகாப்பு நிலை குறித்த தலைப்புகளை உள்ளடக்கிய பிற விளக்கக்காட்சிகள் இந்த முழுமையான அமர்வில் வழங்கப்பட்டன. அமெரிக்காவில் அணை பாதுகாப்பு அறிமுகம் குறித்த விளக்கக்காட்சிகள் வெளியிடப்பட்டன.

ஆஸ்திரேலியாவிலிருந்து மதிப்புமிக்க அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸ் (என்.எஸ்.டபிள்யூ) அணைப் பாதுகாப்பை ஒழுங்குபடுத்துதல்; நீர் மேலாண்மையில் டென்மார்க்கிற்கும் இந்தியாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பல்வேறு ஒத்துழைப்பு முயற்சிகளை விரிவுபடுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios