Published : Jun 16, 2023, 06:32 AM ISTUpdated : Jun 19, 2023, 07:41 AM IST

Tamil News highlights : செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவல்!!

சுருக்கம்

 Tamil News highlights செந்தில் பாலாஜிக்கு 8 நாள் அமலாக்கத்துறை காவலுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. மருத்துவமனையிலேயே அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு தள்ளுபடி.

.

05:59 PM (IST) Jun 16

ஆளுநர் ரவி ஒப்புதல்

அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறைகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமிக்கு மாற்றி ஒதுக்கி முதலமைச்சர் பரிந்துரைத்தற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால், செந்தில் பாலாஜி அமைச்சரவையில் தொடர்வதை ஆளுநர் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது

04:15 PM (IST) Jun 16

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா?

கோழியில் இருந்து முட்டை வந்ததா? முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற நீண்டகால கேள்விக்கான விடை கிட்டத்தட்ட கிடைத்து விட்டது

04:14 PM (IST) Jun 16

ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன்!

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் தமிழக ஏடிஜிபி ராஜேஷ் தாஸுக்கு ஜாமீன் விழுப்புரம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது

03:15 PM (IST) Jun 16

“ட்ரோன்ல தான் நாங்க ஸ்பெஷலிஸ்டே..” சீனாவுக்கு டஃப் கொடுக்க தயாராகும் இந்திய ராணுவம் !!

வாஷிங்டனுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையின் போது ராணுவம் குறித்த மெகா திட்டத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன் மூலம் இந்திய ராணுவம் மேலும் பலம் அடையும்.

02:42 PM (IST) Jun 16

லவ் ஜிகாத்: சென்னை தனியார் கல்லூரி மாணவி எஸ்கேப்.. கட்டாய மதமாற்ற திருமணமா? தந்தை கதறல்

சென்னை ஹாஸ்டலில் இருந்து காணாமல் போன கேரள பெண் லவ் ஜிகாத் செய்யப்பட்டிருக்கலாம் என்று தந்தை கோர்ட்டில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

02:26 PM (IST) Jun 16

ராமன் Vs ராவணன்: தென்னிந்தியாவில் ராவணன் ஏன் ஹீரோவாக கொண்டாடப்படுகிறார்.?

ராமனை மையமாக வைத்து பல படங்கள் எடுக்கப்பட்டு வந்தாலும், ராவணனுக்கு என்று தமிழ் சினிமா ஒரு சாஃப்ட் கார்னர் இன்றளவும் இருந்து வருகிறது.

02:10 PM (IST) Jun 16

பொம்மைக்கு உயிர் கொடுத்து ஆடியன்ஸ் உயிர காவு வாங்கிட்டீங்களே! பொம்மை படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ

ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பொம்மை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

01:00 PM (IST) Jun 16

Realme 11 Pro+ 5G: அட்டகாசம்! அமர்க்களம்! விடா முயற்சியோடு வந்த Realme 11 Pro+ - எப்படி இருக்கு?

ரியல்மி 11 ப்ளஸ் ப்ரோ (Realme 11 Pro+) நேற்று முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்.

12:51 PM (IST) Jun 16

அமலாக்கத்துறை - சிபிஐ என்ன வித்தியாசம்?

சிபிஐ போலல்லாமல் கட்டுப்படுத்தப்படுத்த முடியாத அமைப்பாக அமலாக்கத்துறை இயங்குகிறது

12:50 PM (IST) Jun 16

நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஹிஜாப்

காஷ்மீரில் ஹிஜாப் அணிந்த இரட்டை சகோதரிகள் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர்

12:50 PM (IST) Jun 16

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 நாட்களுக்கு பின்னரே அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

12:30 PM (IST) Jun 16

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனைவி யார் தெரியுமா? யார் இந்த பீலா ராஜேஷ்?

பெண் எஸ்.பி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

12:10 PM (IST) Jun 16

கடந்த ஆட்சியில் நடந்த ஊழலக்கே இந்த நிலைனா! டாஸ்மாக் ஊழலை விசாரிச்சா ஸ்டாலின் குடும்பமே அவ்வளவு தான்! ஷியாம்

கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலக்கே செந்தில் பாலாஜிக்கு இந்த நிலைனா திமுக ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரித்தால் அவ்வளவு தான் என ஷியாம்‌ கிருஷ்ணசாமி கூறியுள்ளார். 

ஷியாம்‌ கிருஷ்ணசாமி

 

12:09 PM (IST) Jun 16

Today Gold Rate in Chennai : மீண்டும் உச்சத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் நகை பிரியர்கள்! எவ்வளவு தெரியுமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

தங்கம் விலை

 

11:27 AM (IST) Jun 16

SGB 2023-24: ஜூன் 19 அன்று தொடங்கவுள்ள தங்க பத்திர விற்பனை.. முதலீட்டாளர்களே மிஸ் பண்ணீடாதீங்க..!

2023-24ம் ஆண்டிற்கான தங்கப் பத்திரத் திட்டத்தின் முதல் கட்டம் ஜூன் 19 அன்று தொடங்க உள்ளதாக என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

10:55 AM (IST) Jun 16

ஜம்மு-காஷ்மீர்: பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் 5 வெளிநாட்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

10:25 AM (IST) Jun 16

பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் FDFS பார்க்க தியேட்டருக்கு வந்த குரங்கு - வைரலாகும் வீடியோ

பிரபாஸ் நடிப்பில் வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க குரங்கு ஒன்று தியேட்டருக்கு வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

09:35 AM (IST) Jun 16

போலீசிடம் மீண்டும் வசமாக சிக்கிய டிடிஎஃப் வாசன்.. ஸ்பீடா போனது ஒரு குத்தமா.! கதறும் TTF ரசிகர்கள்

சர்ச்சைகளுக்கு புகழ்பெற்றவர் பிரபல யூடியூப்பர் ஆன டிடிஎஃப் வாசன். இவர்  தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

09:21 AM (IST) Jun 16

மத்திய அமைச்சர் வீட்டுக்கு தீ வைத்த மர்ம நபர்கள்.. மோதல்களால் கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர் !

மணிப்பூர் வன்முறையில் இம்பாலில் உள்ள மத்திய அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

09:01 AM (IST) Jun 16

திருமணமான 8 நாட்களில் புதுமாப்பிள்ளை பலி! கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் என்னை விட்டு விட்டு போயிட்டியே!

திருமணமான 8 நாட்களில் மின்சாரம் பாய்ந்து புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

புதுமாப்பிள்ளை

 

08:59 AM (IST) Jun 16

பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ

ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கும் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

08:16 AM (IST) Jun 16

1 லட்சம் பேர் இடமாற்றம்.. 950 கிராமத்தில் மின்சாரம் கட்! பைபர்ஜாய் புயலின் ருத்ர தாண்டவம் எப்போது முடியும்.?

பைபர்ஜாய் புயலால் 22 பேர் காயம் அடைந்துள்ளனர். மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளது. மேலும் குஜராத்தில் 950 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

07:46 AM (IST) Jun 16

நீட் தேர்வுக்கு மட்டும் எதிர்ப்பு.. உதய் மின் திட்டத்தை கைவிடுங்க - தலையில் அடித்து கதறும் வணிகர் சங்கங்கள்

மின் கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வணிகர் சங்கங்களின் பேரவை தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

07:40 AM (IST) Jun 16

சென்னையில் 391வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை

சென்னையில் 391வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

07:38 AM (IST) Jun 16

அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் இன்று உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மனு, இடைக்கால ஜாமீன் கோரிய மனு மீது சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. 

07:03 AM (IST) Jun 16

சகோதரி கனிமொழி கைதுக்கு துடிக்காத முதல்வர் ஸ்டாலின்.. செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவது ஏன்? தமாகா கேள்வி..!

தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்யும்போது மட்டும் முதல்வர் ஸ்டாலின் பதற்றப்படுவதும் துடிப்பதும் ஏன்? என யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். 

செந்தில்பாலாஜி

 


More Trending News