கடந்த ஆட்சியில் நடந்த ஊழலக்கே இந்த நிலைனா! டாஸ்மாக் ஊழலை விசாரிச்சா ஸ்டாலின் குடும்பமே அவ்வளவு தான்! ஷியாம்
திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை, தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அவரை கைது செய்தனர்.
கடந்த முறை அதிமுக ஆட்சியில் நடந்த ஊழலக்கே செந்தில் பாலாஜிக்கு இந்த நிலைனா திமுக ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரித்தால் அவ்வளவு தான் என ஷியாம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2015 வரை செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். 2014ம் ஆண்டு போக்குவரத்து துறையில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொறியாளர்களை பணி நியமனம் செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி பணம் பெற்றுக்கொண்டு பணி வழங்காமல் ஏமாற்றிவிட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- கொங்கு மண்டலத்தை செந்தில்பாலாஜிக்கு அப்பன், முப்பாட்டன் எழுதி வைத்துவிட்டு போய்விட்டார்களா?- சி.வி.சண்முகம்
இந்த விவகாரம் தொடர்பாக 2 மாதங்களுக்குள் வழக்கை விசாரித்து முடித்து அறிக்கை அளிக்க தமிழகத்தின் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் தற்போதைய திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை, தலைமைச்செயலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அவரை கைது செய்தனர். அப்போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து ஒமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது பை பாஸ் சர்ஜரி செய்வதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைதுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திமுகவுக்கு எதிராக ஷியாம் கிருஷ்ணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க;- சகோதரி கனிமொழி கைதுக்கு துடிக்காத முதல்வர் ஸ்டாலின்.. செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவது ஏன்? தமாகா கேள்வி..!
இதுதொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் ஷியாம் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- கடந்த ஆட்சியில் நடந்த ஊழலக்கே செந்தில் பாலாஜிக்கு இந்த நிலை. திமுக ஆட்சியில் நடக்கும் டாஸ்மாக் ஊழலை விசாரிக்க துவங்கினால் செந்தில் பாலாஜியுடன் சேர்த்து மொத்த ஸ்டாலின் குடும்பத்திற்கும் இதே நிலைதான் வரும் என டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.