பொம்மைக்கு உயிர் கொடுத்து ஆடியன்ஸ் உயிர காவு வாங்கிட்டீங்களே! பொம்மை படத்தின் டுவிட்டர் விமர்சனம் இதோ
ராதா மோகன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகி இருக்கும் பொம்மை திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொம்மை. இப்படத்தை ராதா மோகன் இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு முன்னர் மான்ஸ்டர் என்கிற திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா பவானி சங்கர்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். பொம்மை மீது மனிதன் காதல் கொண்டால் என்ன ஆகும் என்பதை மையமாக வைத்து தான் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ராதா மோகன். நீண்ட நாட்களாக கிடப்பில் கிடந்த இத்திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள், படத்தை பற்றி தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதன் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... பிரபாஸ் ராமனாக அதகளப்படுத்தினாரா? அப்செட் ஆக்கினாரா? - ஆதிபுருஷ் திரைப்படத்தின் முழு விமர்சனம் இதோ
யூகிக்கக்கூடிய வகையில் திரைக்கதை உள்ளது. காட்சிகள் மற்றும் டயலாக்குகளும் பழசாக உள்ளன. எஸ்.ஜே.சூர்யாவின் கடின உழைப்பும், முயற்சியும் வீணடிக்கப்பட்டுள்ளது. ஒரே பிஜிஎம்-ஐ வைத்து யுவன் படம் முழுக்க ஓட்டி இருக்கிறார். ஒரு இடத்தில் கூட காதல் காட்சிகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என பதிவிட்டுள்ளார்.
படம் பார்த்த நெட்டிசன் ஒருவர் படம் தனக்கு சுத்தமாக பிடிக்காததால், இதனை லூசு படம் என விமர்சித்துள்ளார். அதுமட்டுமின்றி பொம்மை படம் பார்த்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கோடை வெயில் தான் தாங்க முடியலன்னு பார்த்த, படங்களும் அப்படித்தான் இருக்கு. இந்த வெள்ளிக்கிழமை மோசமானது என குறிப்பிட்டு ஆதிபுருஷ் மற்றும் பொம்மை ஆகிய இருபடங்களையும் குறிப்பிட்டுள்ளார்.
பொம்மை படத்தின் முதல் பாதி பார்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நெட்டிசன் ஒருவர், மொழி, பயணம், அபியும் நானும் போன்ற படங்களை கொடுத்த இயக்குனரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை. இதுவரை படம் மந்தமாக செல்கிறது. எஸ்.ஜே.சூர்யா வழக்கம்போல் சிறப்பாக நடித்துள்ளார். அதேபோல் இரண்டாம் பாதியில் ஹீரோ கேரக்டர் சைக்கோவா இல்ல டைரக்டர் சைக்கோவானு தெரியல. பொம்மைக்கு உயிர் கொடுத்து ஆடியன்ஸ் உயிர காவு வாங்கிய இயக்குனருக்கு நன்றி என விமர்சித்துள்ளார்.
அதேபோல் மற்றொரு நெட்டிசன் படம் இடைவேளை வரை படு சுமார் என பதிவிட்டுள்ளார்.
மேற்கண்ட விமர்சனங்களை பார்க்கும் போது பொம்மை திரைப்படம் கலவையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. பாக்ஸ் ஆபிஸிலாவது இப்படம் கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... மொக்க படங்க.. ஆதிபுருஷ் படத்திற்கு நெகடிவ் ரிவ்யூ கொடுத்தவரை அடி வெளுத்துவிட்ட பிரபாஸ் ரசிகர்கள்- வைரல் வீடியோ