Published : Nov 15, 2023, 07:26 AM ISTUpdated : Nov 15, 2023, 09:55 PM IST

Tamil News Live Updates: சங்கரய்யாவிற்கு அரசு மரியாதையோடு இறுதி அஞ்சலி

சுருக்கம்

விடுதலைப் போராட்ட வீரராக, சட்டமன்ற உறுப்பினராக அரசியல் கட்சித் தலைவராக சங்கரய்யா தமிழ்நாட்டுக்கு ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 

09:55 PM (IST) Nov 15

குறைந்த விலையில் நேபாளத்தை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் கட்டணம் எவ்வளவு?

குறைந்த விலையில் நேபாளத்தை சுற்றி பார்க்க விரும்புபவர்கள் ஐஆர்சிடிசியின் சுற்றுலா பேக்கேஜை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

08:50 PM (IST) Nov 15

இந்தியாவில் உள்ள டாப் 5 விலை மலிவான எலக்ட்ரிக் கார்கள் இதுதான்..

இந்தியாவில் உள்ள சிறந்த 5 விலை மலிவான மின்சார கார்கள் பற்றியும், அதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

07:54 PM (IST) Nov 15

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு தடை விதித்த ரிசர்வ் வங்கி.. என்ன காரணம் தெரியுமா?

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பஜாஜ் ஃபைனான்ஸ் தனது இரண்டு கடன் தயாரிப்புகளின் கீழ் கடன்களை அனுமதிப்பதையும், வழங்குவதையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

07:00 PM (IST) Nov 15

வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் எண்ணுடன் எல்பிஜி இணைப்பை எளிதாக இணைக்கலாம்!

உங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் ஆதார் எண்ணுடன் எல்பிஜி எரிவாயு இணைப்பை எளிதாக இணைக்கலாம். அது எப்படி என்பதை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

06:24 PM (IST) Nov 15

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் அமைச்சர் செந்தில் பாலாஜி.. என்ன ஆச்சு.? அதிரடி திருப்பம்.!!

புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுகிறார்.

05:43 PM (IST) Nov 15

25% கேஷ்பேக்.. அதிரடி சலுகைகள்.. இந்த கிரெடிட் கார்டுகளை நீங்கள் வைத்திருக்கிறீர்களா.? செக் பண்ணுங்க..

ஆக்சிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் எச்டிஎஃப்சி ஆகியவற்றிலிருந்து இந்த கிரெடிட் கார்டுகளை நீங்கள் ஷாப்பிங் செய்தால், நீங்கள் பெரிய தள்ளுபடிகள் மற்றும் கேஷ்பேக் சலுகைகளைப் பெறலாம். சிறந்த சலுகைகளை வழங்கும் 4 கிரெடிட் கார்டுகளைப் பற்றி பார்க்கலாம்.

05:09 PM (IST) Nov 15

வடகிழக்கு பருவமழை: மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மின்சார ஊழியர்கள் தயார் நிலையில் இருக்க அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்

 

05:06 PM (IST) Nov 15

கண்ணை மூடிட்டு வாங்கலாம்.. ரூ.20 ஆயிரத்துக்குள் உள்ள சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் இதுதான்..

நீங்கள் பட்ஜெட்டுக்குள் 5G ஸ்மார்ட்போனைத் தேடுகிறீர்களானால்,உங்களுக்கான செய்தி தான் இது. ரூ.20,000க்கு குறைவான பட்ஜெட்டுக்கு ஏற்ற 5G ஸ்மார்ட்போன்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

04:52 PM (IST) Nov 15

தோசை கல்லை சுத்தம் செய்ய துடைப்பம்; லிட்டர் கணக்கில் நெய்: நெட்டிசன்கள் கேள்வி!

தோசைக் கல்லை சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தப்படும் வீடியோவை பகிர்ந்து சுகாதாரம் பற்றி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

 

04:03 PM (IST) Nov 15

பல்வீர் சிங் மீது குற்ற நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு அனுமதி!

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் பல்வீர் சிங் மீது குற்ற நடவடிக்கை எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது

 

03:17 PM (IST) Nov 15

ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ போகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகைகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஹீரோ விடா V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அதிரடியான விலை குறைப்புடன் வருகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் வரை செல்லலாம்.

03:03 PM (IST) Nov 15

பாலஸ்தீன சார்பு போராட்டங்களுக்கு நிதியளிக்கும் நெவில் ராய் சிங்கம்!

பாலஸ்தீன சார்பு கோபத்தை தூண்டுவதற்கு அமெரிக்க மல்டிமில்லியனர் மார்க்சிஸ்டுகள் நிதியளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

 

02:41 PM (IST) Nov 15

ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து.. 36 பேர் பலியான சோகம்.. ஜம்மு காஷ்மீர் அருகே அதிர்ச்சி சம்பவம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் பேருந்து ஒன்று ஆழமான பள்ளத்தாக்கில் புதன்கிழமை விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

01:57 PM (IST) Nov 15

பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்: இரு சக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி!

திமுக இரு சக்கர வாகன பேரணியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
 

01:26 PM (IST) Nov 15

ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி தீபாவளி பரிசு: அமேதி கோட்டையை மீட்க காங்கிரஸ் திட்டம்!

அமேதி மக்களுக்கு ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி ஆகியோர் தீபாவளி பரிசு அளித்துள்ளனர்

01:14 PM (IST) Nov 15

புரோமோ பொறுக்கினு சொன்ன தினேஷ்... அடிதடியில் இறங்கிய விஷ்ணு - கலவர பூமியாக மாறிய பிக்பாஸ் வீடு

பிக்பாஸ் வீட்டில் விஷ்ணு உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது அவரை கேப்டன் தினேஷ் புரோமோ பொறுக்கி என அழைத்ததால் இருவருக்கும் இடையே சண்டை முற்றி உள்ளது.

12:33 PM (IST) Nov 15

சிப் டிசைன் ஸ்டார்ட்அப்களுக்கு அரசு போதுமான உதவி: கேடென்ஸ் டிசைன்!

சிப் டிசைன் ஸ்டார்ட்அப்களுக்கு அரசாங்கம் போதுமான அளவு உதவி செய்கிறது என கேடென்ஸ் டிசைன் நிறுவனத்தின் இந்தியா மேலாண்மை இயக்குநர் தெரிவித்துள்ளார்

 

12:01 PM (IST) Nov 15

சங்கரய்யா உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

11:45 AM (IST) Nov 15

அக்டோபர் மாதம் விற்பனையில் பட்டையை கிளப்பி முதல் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையானது, மாதந்தோறும் கணிசமான வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனையான முதல் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு காணலாம்

 

11:40 AM (IST) Nov 15

பெண் குளிப்பதை வளைச்சு வளைச்சு செல்போனில் வீடியோ எடுத்து ரசித்த அண்ணன் தம்பிகள்.. சிக்கியது எப்படி தெரியுமா?

அரசு பெண் ஊழியர் குளிப்பதை வளைச்சு வளைச்சு செல்போனில் வீடியோ எடுத்த அண்ணன் தம்பிகள் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

11:28 AM (IST) Nov 15

நீங்க இல்லாம நான் இல்ல... நடிகையாக ஒரு தசாப்தத்தை நிறைவு செய்த கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட எமோஷனல் வீடியோ

சினிமாவில் ஹீரோயினாக 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் பதிவிட்டுள்ள எமோஷனல் பதிவு வைரலாகி வருகிறது.

11:25 AM (IST) Nov 15

சங்கரய்யா உடலுக்கு மரியாதை செலுத்த அப்போலோ மருத்துவமனைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை

அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடலுக்கு மரியாதை செலுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்துள்ளார். 

11:06 AM (IST) Nov 15

ஏகாதிபத்திய எதிர்ப்பு முதல் சாதி மறுப்பு வரை: தொழிலாளர்களின் உற்ற தோழர் சங்கரய்யா!

சுதந்திர போராட்ட தியாகியும், முதுபெரும் மார்க்சிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார். அவருக்கு வயது 102

 

10:57 AM (IST) Nov 15

இதென்னடா நூதன மோசடியா இருக்கு.... ரூ.17 லட்சத்தை அபேஸ் செய்து பிக்பாஸ் பிரபலத்துக்கு விபூதி அடித்த கும்பல்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன டேனியலிடம் இருந்து ஒரு கும்பல் ரூ.17 லட்சத்தை அபேஸ் செய்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது.

10:20 AM (IST) Nov 15

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா காலமானார்!

சுதந்திர போராட்ட தியாகியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யா (102) காலமானார்.

10:09 AM (IST) Nov 15

அய்யோ! பாவம்! துரைமுருகனை இப்படி புலம்ப விட்டுட்டீங்களே! அவரு வயசுக்காட்சி மரியாதை கொடுங்கய்யா! பாஜக.!

திமுகவினருக்குள் முதலில் ஒற்றுமை வேண்டும்; கட்சியில் இருக்கும் சிலரே வருமானவரித்துறையில் போட்டுக் கொடுக்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் பேசியதை சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

09:08 AM (IST) Nov 15

ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு... இன்று விசாரணை

அதிமுக பெயர், இரட்டை இலை சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு நீதிமன்றம் தடை விதித்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்த ஓபிஎஸ் மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

08:42 AM (IST) Nov 15

பேட்ட பராக்! உலக கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க மும்பையில் கெத்தாக வந்திறங்கிய ரஜினியின் Exclusive போட்டோஸ்

வான்கடேவில் இன்று நடைபெற உள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார்.

08:36 AM (IST) Nov 15

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 6 மாவட்டங்களில் பிச்சு உதற போகுதாம் மிக கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் காலை 8.30 மணி வரை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

08:29 AM (IST) Nov 15

Power Shutdown in Chennai: ஐயையோ.. சென்னையில் இன்று இந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை..!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கடப்பேரி பகுதிகளில் மின்தடை ஏற்படும் என  மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:28 AM (IST) Nov 15

Sahara Group Founder Died: சஹாரா குழுமத்தின் நிறுவனர் சுப்ரதா ராய் மாரடைப்பால் காலமானார்..!

சஹாரா குழும நிறுவனர் சுப்ரதா ராய் (75) உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

07:27 AM (IST) Nov 15

உங்களுக்கு சந்தேகம்னா என்கூட வாங்க! நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்! இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் மா.சு.!

எடப்பாடி பழனிச்சாமிக்கு மருந்துகள் தட்டுப்பாடு இருக்கிறது என்ற சந்தேகம் இருக்குமேயானால் வாருங்கள் நேரடியாக சென்று ஆய்வு செய்வோம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 


More Trending News