Asianet News TamilAsianet News Tamil

பாலஸ்தீன சார்பு போராட்டங்களுக்கு நிதியளிக்கும் நெவில் ராய் சிங்கம்!

பாலஸ்தீன சார்பு கோபத்தை தூண்டுவதற்கு அமெரிக்க மல்டிமில்லியனர் மார்க்சிஸ்டுகள் நிதியளிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

The American Multimillionaire Marxists Funding Pro Palestinian Rage smp
Author
First Published Nov 15, 2023, 3:01 PM IST | Last Updated Nov 15, 2023, 3:01 PM IST

இஸ்ரேல் - பாலஸ்தீனம் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1400 உயிரிழந்த நிலையில், பாலஸ்தீனத்தில் உயிரிழப்புகள் 10,000த்தை கடந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. குறிப்பாக, வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இஸ்ரேலுக்கும், இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் பாலஸ்தீனத்துக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மேலும், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கூட, கொத்துகொத்தக செத்து மடியும் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், கடந்த மாதம் பாலஸ்தீனிய சார்பு ஆர்ப்பாட்டங்கள் அமெரிக்காவில் நடைபெற்றன. ஆனால், இந்த போராட்டங்களுக்கு அமெரிக்க மல்டிமில்லியனர் மார்க்சிஸ்டுகள் நிதியளிப்பதாக the free press எனும் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் பிறந்த செல்வந்த தொழில்நுட்ப தொழிலதிபர் நெவில் ராய் சிங்கம் மற்றும் அவரது மனைவி ஜோடி எவன்ஸ் ஆகியோரால் பாலஸ்தீன சார்பு போராட்டங்கள் மற்றும் கோபத்தை தூண்டுவதற்கு பெருமளவு நிதியளிக்கப்படுவதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு முதல், The People’s Forumத்தின் முக்கிய நிதியாளராக நெவில் ராய் சிங்கம் இருந்து வருகிறார். இது அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸால் நடத்திய முதல் தாக்குதலுக்கு பின்னர் குறைந்தது நான்கு போராட்டங்களை ஒருங்கிணைத்துள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“உழைக்கும் வர்க்கம் மற்றும் ஓரங்கட்டப்பட்ட சமூகங்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எல்லைகளுக்கு அப்பால், ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான இயக்கம்.” என The People’s Forum தன்னை அழைத்துக் கொள்கிறது. இந்த அமைப்பிற்கு மல்டிமில்லியனர் சிங்கமும் அவரது மனைவி எவன்ஸும் 2017 முதல் 2022 வரை 20.4 மில்லியன் டாலர்களுக்கும் மேல் நன்கொடை அளித்துள்ளதாக the free press செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

சிகாகோவில் 1993 இல் நெவில் ராய் சிங்கம் தொடகிய சாஃப்ட்வேர் கன்சல்டிங் நிறுவனமான Thoughtworks இலிருந்து அவரது செல்வம் வளர ஆரம்பித்தது. ஆகஸ்ட் 2017 இல் தனியார் பங்கு நிறுவனமான Apax பார்ட்னர்ஸுக்கு 785 மில்லியன் டாலருக்கு அந்த நிறுவனம் விற்கப்பட்டது. அதே ஆண்டில், தி பீப்பிள்ஸ் ஃபோரம் உருவாக்கப்பட்டு, டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள 37ஆவது தெருவில் உள்ள பல மாடி கட்டிடத்தின் தரை தளத்தில் அமைக்கப்பட்டது. எவன்ஸ் அதன் மூன்று குழு உறுப்பினர்களில் ஒருவராகவும் நியமிக்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த அமைப்பு 13 பணியாளர்களை பணியமர்த்தியுள்ளது. இதன் மொத்த சொத்துக்கள் 13.6 மில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது.

“எனது வாழ்நாளில் எனது பணத்தில் பெரும்பகுதியை கொடுப்பதே என்னால் செய்யக்கூடிய சிறந்த விஷயம் என்று முடிவு செய்தேன்.” என என்று 69 வயதான சிங்கம் தனது நிறுவனத்தை விற்ற பிறகு ஒரு அறிக்கையில் கூறினார் என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், நெவில் ராய் சிங்கம் ஒரு சாதாரண மார்க்சிஸ்ட் மட்டும் கிடையாது. அவர் ஷாங்காயில் வசிக்கும் ஒரு சீன அனுதாபியும் ஆவார். வெளிநாட்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் இமேஜை உயர்த்தும் குறைந்தபட்சம் நான்கு பிரச்சார செய்தித் தளங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டவர் அவர் என்று தி டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெரியாரின் பேரன்கள் புறப்படுகிறோம்: இரு சக்கர வாகன பேரணியை தொடங்கி வைத்த உதயநிதி!

இந்த ஊடகங்கள் அமெரிக்காவில் முரண்பாடுகளை விதைக்க உதவுகின்றன என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஹவுஸ் செலக்ட் கமிட்டியின் தலைவரான ரெப். மைக் கல்லாகர் The Free Press இடம் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவைப் பிளவுபடுத்துவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் கல்லூரி வளாகங்களில் உள்ள கன்பூசியஸ் நிறுவனங்கள், டிக்டாக்கின் அடிமையாக்கும் வழிமுறைகள் மற்றும்  நெவில் ராய் சிங்கம் நிதியளிக்கும் அமைப்புகள் போன்ற கருவிகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி பயன்படுத்துகிறது.” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு விரோதமான செயல்களில் ஈடுபடும் குழுக்களில் செயல்பாடுகள், பின்னணி, உணர்ச்சி உறுதியற்ற தன்மைகள் காரணமாக அவர் ஆபத்தானவர் என அமெரிகக் புலனாய்வு அமைப்பான எஃப்பிஐ 1974 ஆம் ஆண்டில் விசாரணை செய்திருந்தது.

இப்போது ஷாங்காயில் வசிக்கும் சிங்கம், சீனாவின் பற்றி நன்றாக சொல்லும் நோக்கம் கொண்ட ஊடக நிறுவனமான மக்கு குழுமத்துடன் அலுவலகத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவை தளமாகக் கொண்ட சீன சார்பு வலைத்தளமான நியூஸ்க்ளிக் மற்றும் தென்னாப்பிரிக்காவில் தற்போது செயல்படாத ஊடக நிறுவனமான நியூ ஃபிரேம் ஆகியவற்றின் ஆதரவாளராகவும், ஒத்துழைப்பையும் நெவில் ராய் சிங்கம் வழங்கியுள்ளார். சீனாவின் மனித உரிமை மீறல்கள் குறித்த அவரது மவுனம் 2022 இல் ஆசிரியர் ஒருவரை ராஜினாமா செய்ய வழிவகுத்தது. நெவில் ராய் சிங்கம், தனது நண்பர்களுக்கு சீன இணையதளமான டோங்ஷெங் நியூஸை விளம்பரப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

நெவில் ராய் சிங்கத்தின் மனைவி எவன்ஸ் ஒரு காலத்தில் சீன அரசாங்கத்தை விமர்சித்தவர். 2015 ஆம் ஆண்டில், அவர் சீன பெண்ணியவாதிகளுக்கு ஆதரவளித்து, பெண் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீதான மிருகத்தனமான அடக்குமுறையை சீன அரசாங்கம் நிறுத்த வேண்டும் என்று ட்விட்டரில் பகிரங்கமாக பதிவிட்டவர். ஆனால், நெவில் ராய் சிங்கத்தை மணந்த பிறகு, தனது நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொண்டார். 2020 இல் கோட் பிங்க் மூலம் #ChinaIsNotOurEnemy என்ற பிரச்சாரத்தை அவர் தொடங்கினார். சீனாவின் அழகான வரலாறு மற்றும் அதன் கட்சி, அரசியல் அமைப்பைப் பாராட்டி தொடர்ச்சியான வெபினார்களை கோட் பிங்கின் யூடியூப் பக்கத்தில் அவர் எடுத்து வருகிறார்.

அமெரிக்க மல்டிமில்லியனரும், சமூக ஆர்வலருமான நெவில் ராய் சிங்கம் பாலஸ்தீன சார்பு கோபத்தை தூண்டுவதற்கு நிதியுதவி அளித்ததாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், நியூஸ்க்ளிக் உடன் தொடர்பில் இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

இதுகுறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது எக்ஸ் பக்கத்தில், “நியூஸ்க்ளிக் "முதலீட்டாளர்கள்" தவறான தகவல் மூலம் அமைதியின்மையை தூண்டும் உலகளாவிய தேடலில் சுற்றி வருகின்றனர்.” என விமர்சித்துள்ளார்.

முன்னதாக, டெல்லியைச் சேர்ந்த நியூஸ் கிளிக் இணையதளம் சீன ஆதரவுப் பிரச்சாரத்திற்காக ரூ.38 கோடி நிதி பெற்றதாக  நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் அம்பலப்படுத்தியது. அதில், நெவில் ராய் சிங்கம் என்ற அமெரிக்க தொழிலதிபரின் மின்னணு அஞ்சல் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் பல்வேறு பத்திரிகையாளர்கள், நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்தின் தலைமை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தா மற்றும் சிபிஐ(எம்) தலைவர் பிரகாஷ் காரத் உள்ளிட்ட அவரது குழுவினருக்கு சீன பிரச்சாரத்தை ஊக்குவிக்குமாறு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios