Asianet News TamilAsianet News Tamil

அய்யோ! பாவம்! துரைமுருகனை இப்படி புலம்ப விட்டுட்டீங்களே! அவரு வயசுக்காட்சி மரியாதை கொடுங்கய்யா! பாஜக.!

அய்யோ பாவம், உள்ளம் கலங்கி பேசியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி பூசலை, துரோகிகளின் கூடாரம் திமுக என்பதை, வன்நெஞ்சம் படைத்தவர்கள் திமுகவினர் என்பதை தெளிவாக கூறும் போது, திமுகவினர் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லும் போது அவரின் உள்ளக்குமுறலை நம்மால் உணரமுடிகிறது. 

Atleast give respect to Duraimurugan age... narayanan thirupathy tvk
Author
First Published Nov 15, 2023, 9:29 AM IST | Last Updated Nov 15, 2023, 9:32 AM IST

திமுகவினருக்குள் முதலில் ஒற்றுமை வேண்டும்; கட்சியில் இருக்கும் சிலரே வருமானவரித்துறையில் போட்டுக் கொடுக்கிறார்கள் என அமைச்சர் துரைமுருகன் பேசியதை சுட்டிக்காட்டி நாராயணன் திருப்பதி கடுமையாக விமர்சித்துள்ளார். 

திமுக கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசுகையில்;- முதலில் திமுகவினருக்கு உள்ளேயே ஒற்றுமை தேவைப்படுகிறது. கட்சியினர் ஒருவருக்கொருவர் காட்டும் மனக்கசப்பு, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு சங்கடங்களை தருகிறது. திமுகவில் இருக்கும் சிலரே, வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன் என்றும், யாரையும் போட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் நிர்வாகிகள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று துரைமுருகன் பேசினார். இந்நிலையில், துரைமுருகனின் இந்த பேச்சை நாராயணன் திருப்பதி கிண்டல் செய்துள்ளார்.

இதையும் படிங்கள்;- சனாதன சர்ச்சை.. அமைச்சர் உதயநிதி மன்னிப்பு கேட்பாரா? ராஜினாமா செய்வாரா? இறங்கி அடிக்கும் நாராயணன் திருப்பதி!

Atleast give respect to Duraimurugan age... narayanan thirupathy tvk

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநிலத் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்;- அய்யோ பாவம், உள்ளம் கலங்கி பேசியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி பூசலை, துரோகிகளின் கூடாரம் திமுக என்பதை, வன்நெஞ்சம் படைத்தவர்கள் திமுகவினர் என்பதை தெளிவாக கூறும் போது, திமுகவினர் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லும் போது அவரின் உள்ளக்குமுறலை நம்மால் உணரமுடிகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Atleast give respect to Duraimurugan age... narayanan thirupathy tvk

60, 70 ஆண்டு காலம் கட்சிக்கு உழைத்தவரை இப்படி போட்டு கொடுத்து விட்டார்களே என்று நெஞ்சம் பதை பதைக்கிறது. இன்கம்டாக்ஸ்க்கே செய்தி சொன்னவர்கள் யாரென்று தெரிந்தும் அவர்களை குறிப்பிட முடியாத அவரின் சோகம் நெஞ்சை பிளக்கிறது.  அய்யோ, பாவம் ஐயா துரைமுருகன் அவர்கள். வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா!! என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார். 

Atleast give respect to Duraimurugan age... narayanan thirupathy tvk

தற்போது திமுக அமைச்சர்கள் பலர் மீது வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதால், துரைமுருகனின் பழைய பேச்சை, ஏதோ இப்போது அவர் பேசியது போல பாஜகவினர் சமூக வலைதளங்களில் பகிர்நது வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios