பேட்ட பராக்! உலக கோப்பை அரையிறுதி போட்டியை பார்க்க மும்பையில் கெத்தாக வந்திறங்கிய ரஜினியின் Exclusive போட்டோஸ்
வான்கடேவில் இன்று நடைபெற உள்ள இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் மும்பை சென்றுள்ளார்.
Rajinikanth
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ள இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன.
Superstar Rajinikanth
இதில் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகளும், இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா - தென் ஆப்பிரிக்கா அணிகளும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
Rajinikanth in Mumbai
இந்த போட்டியில் வெற்றிபெற்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்புடன் உள்ளது. இந்த உலகக்கோப்பையில் இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளில் தோல்வியே காணாத அணி என்கிற சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதேபோல் அரையிறுதியிலும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rajinikanth Exclusive photos
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்களும் மும்பைக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்தும், இப்போட்டியை காண்பதற்காக நேற்று இரவு மும்பைக்கு கிளம்பி சென்றார்.
Rajinikanth in Mumbai Airport
மும்பை விமான நிலையில், கருப்பு நிற சட்டை, ஜீன்ஸ் பேண்ட் அணிந்துகொண்டு கெத்தாக வந்திறங்கிய ரஜினிக்கு, அங்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது எடுக்கப்பட்ட எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆகி வருகின்றன. ரஜினிகாந்த் கடைசியாக 2011-ம் ஆண்டு நடந்த இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிபோட்டியை இதே வான்கடே மைதானத்தில் கண்டுகளித்தார். அதன்பின்னர் 12 ஆண்டுகளுக்கு பின்னர் அவர் நேரில் காண உள்ள உலகக்கோப்பை போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Vanitha Vijayakumar: சிரிச்சது குத்தமா? தொகுப்பாளரிடம் மோசமாக நடந்து கொண்ட வனிதா.! வைரலாகும் வீடியோ!