Asianet News TamilAsianet News Tamil

அக்டோபர் மாதம் விற்பனையில் பட்டையை கிளப்பி முதல் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையானது, மாதந்தோறும் கணிசமான வளர்ச்சியைக் கண்டு வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனையான முதல் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு காணலாம்

Top 5 electric scooters sold in October 2023 smp
Author
First Published Nov 15, 2023, 11:43 AM IST | Last Updated Nov 15, 2023, 11:43 AM IST

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையானது மாதந்தோறும் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த அக்டோபர் மாதம் மட்டும் மொத்தம் 71,604 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன. அதில், முதல் 5 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பற்றி இங்கு காணலாம்.

ஓலா


அக்டோபர் 2023 இல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முன்னணியில் இருப்பது ஓலா. நிலையான ஏற்றத்தாழ்வுகளை கொண்டுள்ள நிறுவனமான ஓலா, அக்டோபர் மாதத்தில் மட்டும் 22,284 எல்க்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதுவே, செப்டம்பரில் 18,691 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் 19.2 சதவீத மாதாந்திர வளர்ச்சியை இந்த நிறுவனம் பதிவு செய்து வருகிறது.

டி.வி.எஸ்


iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டருடன், இரண்டாவது இடத்தில், ஓசூரைச் சேர்ந்த மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டிவிஎஸ் உள்ளது. டிவிஎஸ் நிறுவனம் 15,603 iQube எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 15,584 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. அக்டோபரில் 0.1 சதவீத மாதாந்திர வளர்ச்சியை டிவிஎஸ் நிறுவனம் பதிவு செய்து வருகிறது.

இது சூப்பர் கான்செப்ட்... வீல் சேர் வசதியுடன் சூப்பர் ஸ்மார்ட் கார்! ஆனந்த் மஹிந்திரா ஆச்சரியம்!

பஜாஜ்


பஜாஜ் மூன்றாவது இடத்தில் உள்ளது. 2023 அக்டோபரில் தனது சேட்டக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 8,430 யூனிட்களை பஜாஜ் நிறுவனம் விற்றுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 7,097 ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம், கடந்த மாதத்தை ஒப்பிடுகையில் 18.7 சதவீத மாதாந்திர வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

ஏத்தெர்


மிகவும் வெற்றிகரமான EV ஸ்டார்ட் அப்களில் ஒன்றான ஏத்தர், கடந்த அக்டோபர் மாதம் 8,027 யூனிட்களை விற்பனை செய்து, முதல் 5 சிறந்த விற்பனையான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரை தளமாகக் கொண்ட ஏத்தர் நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 7,151 யூனிட்களை விற்று, 12.2 சதவீத மாதாந்திர வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

கிரீவ்ஸ்


அக்டோபர் 2023 இல் அதிகம் விற்பனையான மின்சார ஸ்கூட்டர்களின் பட்டியலில் 5ஆவது இடத்தை கிரீவ்ஸ் எலக்ட்ரிக் பிடித்துள்ளது. கடந்த செப்டம்பரில் விற்பனையான 3,612 யூனிட்களை ஒப்பிடுகையில், கடந்த அக்டோபர் மாதம் 4,019 யூனிட்களை விற்பனை செய்துள்ளது கிரீவ்ஸ் எலக்ட்ரிக். இதன் மூலம், அக்டோபரில் 11.2 சதவீத மாதாந்திர வளர்ச்சியை அந்நிறுவனம் பதிவு செய்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios