இதென்னடா நூதன மோசடியா இருக்கு.... ரூ.17 லட்சத்தை அபேஸ் செய்து பிக்பாஸ் பிரபலத்துக்கு விபூதி அடித்த கும்பல்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆன டேனியலிடம் இருந்து ஒரு கும்பல் ரூ.17 லட்சத்தை அபேஸ் செய்து நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளது.
daniel
கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் தான் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில் காமெடி கேரக்டரில் நடித்து பிரபலமானவர் தான் டேனியல். அவர் இப்படத்தின் பேசும் பிரெண்டு லவ் மேட்டரு என்கிற டயலாக் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனதோடு, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளையும் பெற்று தந்தது.
இதையடுத்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் டேனியல். அந்த நிகழ்ச்சியில் மகத் உடன் இவருக்கு கைகலப்பு ஏற்பட்டது. டேனியலை தாக்கியதற்காக மகத்துக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார் கமல்ஹாசன். பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் முதன்முறையாக ரெட் கார்டு வாங்கிய போட்டியாளர் மகத் தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் டேனியலுக்கு சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.
BiggBoss daniel
இந்நிலையில், டேனியல், தான் ஒரு நூதன மோசடி ஒன்றி சிக்கியது குறித்து கூறி இருக்கிறார். அதன்படி நோ புரோக்கர் ஆப் மூலம் வாடகைக்கு வீடு தேடி இருக்கிறார் டேனியல், அப்போது எஸ்.டி.எஸ்.கே என்கிற நிறுவனம் டேனியலை தொடர்பு கொண்டு தங்களிடம் 17 லட்சம் கட்டினால் லீசுக்கு வீடு பார்த்து தருவதாக கூறி இருக்கின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
daniel Annie Pope
இதற்கான ஆதாரங்களை காட்டியதோடு, சென்னையில் தங்கள் மூலம் லீசுக்கு இருக்கும் சிலரை தன்னிடம் அறிமுகப்படுத்தியதை நம்பி 17 லட்சம் கொடுத்திருக்கிறார் டேனியல். அதோடு மாச மாசம் தாங்களே வீட்டு வாடகை செலுத்தி விடுவோம் என்றும், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் முதலீட்டு தொகையையும் உங்களிடம் கொடுத்து விடுவோம் எனவும் சொல்லி இருக்கிறார். இதை நம்பி போரூரில் உள்ள வீட்டிற்கு வாடகைக்கு சென்றிருக்கிறார் டேனியல்.
Actor daniel
அங்கு வீட்டில் குடியேறி மூன்று மாதங்களுக்கு பின்னர் வீட்டின் ஓனர் வந்து வாடகை தரவில்லை எனக்கூறி என்னை வீட்டை காலி செய்ய சொன்னபோது தான் நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தேன். பெங்களூருவை சேர்ந்த அந்நிறுவனம் இப்படி தொடர் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் டேனியல் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... போடா அமுல்பேபி... பிக்பாஸ் பேச்சை கேட்டு விஷ்ணு உடன் சண்டை போட்ட தினேஷ் - அனல்பறக்கும் புரோமோ