Published : Dec 09, 2023, 07:14 AM ISTUpdated : Dec 09, 2023, 11:00 PM IST

Tamil News Live Updates: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சுருக்கம்

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர் பாபு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

Tamil News Live Updates: தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

11:00 PM (IST) Dec 09

Best 5 Top E-Scooters : ரூ.50,000க்குள் கிடைக்கும் சிறந்த 5 பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்.!

ரூ. 50,000க்குள் கிடைக்கும் சிறந்த 5 இ-ஸ்கூட்டர்கள் பற்றிய அம்சங்கள், மைலேஜ் மற்றும் விலை போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

10:23 PM (IST) Dec 09

115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும்.. மத்திய அரசின் கியாரண்டி வருமானம்.. அசத்தலான போஸ்ட் ஆபிஸ் திட்டம்

மத்திய அரசின் கிசான் விகாஸ் பத்ரா திட்டம் மூலம் 115 மாதங்களில் பணம் இரட்டிப்பாகும். உத்தரவாதமான வருமானம் கொண்ட இந்தத் திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

09:37 PM (IST) Dec 09

நீட் அநீதிக்கு எதிராக தொடர்ந்து கையெழுத்து.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிரடி.!!

நீட் ஒழிப்புக்கான இந்த கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில்  உழைத்திடுவோம் - நம் மாணவர்களின் மருத்துவராகும் கனவை நனவாக்குவோம்” என்று கூறியுள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

08:32 PM (IST) Dec 09

வரி செலுத்துவோர் கவனத்திற்கு.. இனி ரூ.7,50,000 லட்சம் வரி விலக்கு பெறலாம்.. எப்படி தெரியுமா?

வரி செலுத்துவோர் ரூ.7,50,000 லட்சம் வரி விலக்கு பெறலாம். ரிட்டர்ன் தாக்கல் செய்யும் போது முக்கியமான விஷயங்களை நினைவில் கொள்வது அவசியம் ஆகும்.

08:12 PM (IST) Dec 09

கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்கள் கொட்டப்பட்டதா? பதறியடித்து விளக்கம் கொடுத்த ஆவின் நிர்வாகம்.!!

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட குளக்கரைக்கு பின்புறமாக கால்வாயில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

07:16 PM (IST) Dec 09

தனது துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனையை நடத்திய இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.. வைரலாகும் வீடியோ..!!

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் தனது துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனையை நடத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

06:33 PM (IST) Dec 09

திடீரென போன் போட்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.. குவிந்த நிவாரணப் பொருட்கள்.. பொதுமக்கள் பாராட்டு.!!

திடீர் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உங்களை அவசரமாக பார்க்க வேண்டும் என்று அழைப்பு வந்தது.

05:50 PM (IST) Dec 09

இப்படியொரு ஆஃபர் வரவே வராது.. ஐபோன் 14 இவ்வளவு கம்மி விலைக்கு கிடைக்குது.. எப்படி வாங்குவது?

நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்கத் திட்டமிட்டிருந்தால், பிளிப்கார்ட்டில் நடைபெற்று வரும் பிக் இயர் எண்ட் விற்பனையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த விற்பனையில் ஐபோன் 14 இல் கவர்ச்சிகரமான சலுகைகள் உள்ளன.

05:10 PM (IST) Dec 09

ரூ.999க்கு முன்பதிவு.. 22 ஆயிரம் வரை தள்ளுபடி.. அட்டகாசமான எலக்ட்ரிக் பைக் இதுதான்..!!

புதிதாக எலக்ட்ரிக் பைக் வாங்குபவர்களுக்கு பம்பர் ஆஃபர் கிடைக்கிறது. நீங்கள் ஒரு பெரிய தள்ளுபடி பெற முடியும். சலுகைகள் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும்.

04:44 PM (IST) Dec 09

புல்வாமா தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி.. மொகிதீன் ஔரங்கசீப் ஆலம்கீர் கடத்தல் - அதிர்ச்சி சம்பவம்

2019 புல்வாமா தாக்குதலின் சதிகாரரும், ஜெய்ஷ் இம் பயங்கரவாதி ஆலம்கிர் பாகிஸ்தானில் தெரியாத நபர்களால் கடத்தப்பட்டார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

04:07 PM (IST) Dec 09

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தலா 6 ஆயிரம் நிவாரணத் தொகை - மு.க.ஸ்டாலின்

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நிவாரணத் தொகையாக தலா 6 ஆயிரம் ரூபாயை அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

03:26 PM (IST) Dec 09

வெற்றிமாறன் கூட்டணியில் மீண்டும் ராஜனாக அமீர்... கவனம் ஈர்க்கும் மாயவலை டீசர் இதோ

ரமேஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் அமீர், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் உருவாகி இருக்கும் மாயவலை திரைப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

02:41 PM (IST) Dec 09

பருத்திவீரன் பிரச்சனையில் நான் பெற விரும்புவது யாசகமல்ல... என் உரிமை! இயக்குனர் அமீர் காட்டம்

பருத்திவீரன் பட பிரச்சனை தொடர்பாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர், தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்து அமீர் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

02:31 PM (IST) Dec 09

நேரம் காலம் பார்க்காமல் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர்.. 61 வயது மத போதகரை ஆத்திரத்தில் கொலை செய்த 46 வயது பெண்..!

61 வயதில் ஓயாமல் செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்த மத போதகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

02:30 PM (IST) Dec 09

Tamilnadu Heavy Rain: இந்த 16 மாவட்டங்களில் வச்சு செய்யப்போகுதாம் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை..!

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, தென்காசி, நெல்லை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

02:08 PM (IST) Dec 09

தரம் கெட்ட விளையாட்டு விளையாடுறாங்க... பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது செம்ம கடுப்பில் கமல் - சிக்கப்போவது யார்?

பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் தரம் கெட்ட விளையாட்டு விளையாடி வருவதாக நடிகர் கமல்ஹாசன் சாடி இருக்கிறார்.

01:35 PM (IST) Dec 09

மீண்டும் தீவிர சிகிச்சையில் கேப்டன் விஜயகாந்த்..?

விஜயகாந்த் உடல்நலம் தேறி டிஸ்சார்ஜ் ஆக இருந்த நிலையில், தற்போது அவருக்கு சுவாச பிரச்சனை ஏற்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

01:09 PM (IST) Dec 09

மகனை தொடர்ந்து மகளின் திருமணம்.. தளபதி 68 பட நடிகர் ஜெயராம் வீட்டில் களைகட்டும் கல்யாண சீசன்

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸுக்கு கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், தற்போது அவரின் மகள் மாளவிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

11:56 AM (IST) Dec 09

முண்டாசுப்பட்டி பட நடிகர் மதுரை மோகன் காலமானார் - சோகத்தில் திரையுலகம்

முண்டாசுப்பட்டி, வீரன் போன்ற வெற்றிப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் மதுரை மோகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

 

11:49 AM (IST) Dec 09

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

மிக்ஜாம் புயல் நிவாரண பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர் பாபு, டி.ஆர்.பி.ராஜா, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். 

10:21 AM (IST) Dec 09

முதல் நாளில் நயன்தாரா படத்தைவிட அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் கெத்து காட்டும் கான்ஜுரிங் கண்ணப்பன்..!

செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் கான்ஜுரிங் கண்ணப்பன் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை பார்க்கலாம்.

10:15 AM (IST) Dec 09

கருக்கா வினோத்தை காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு

ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக கருக்கா வினோத்தை 5 நாட்கள் காவலில் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்தில் என்.ஐ.ஏ மனு தாக்கல் செய்துள்ளது. 

09:57 AM (IST) Dec 09

Today Gold Rate in Chennai : நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

09:20 AM (IST) Dec 09

திரிஷாவை விடாது கருப்பாய் துரத்தும் மன்சூர் அலிகான்... ரூ.1 கோடி கேட்டு மான நஷ்ட வழக்கு தொடுத்ததால் பரபரப்பு

நடிகைகள் திரிஷா, குஷ்பு மற்றும் நடிகர் சிரஞ்சீவி ஆகியோர் மீது நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.

08:46 AM (IST) Dec 09

ப்ளீஸ் லேடி சூப்பர்ஸ்டார்னு கூப்பிட வேண்டாம்... பயங்கரமா திட்றாங்க - பட்டத்தை பார்த்து பயப்படும் நயன்தாரா

அன்னபூரணி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா, லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.

07:17 AM (IST) Dec 09

AIADMK Case: இது எனது அரசியல் எதிர்காலம் சார்ந்த விஷயம்.. கதறிய ஓபிஎஸ்.. கைவிட்ட உச்சநீதிமன்றம்..!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 16-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது .

07:17 AM (IST) Dec 09

Schools Leave: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை.. நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு.!

தொடர் கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

07:16 AM (IST) Dec 09

ஆளுநர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்.. என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 

07:15 AM (IST) Dec 09

சென்னையில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம்

சென்னையில் அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.


More Trending News