Tamil News Live Updates: நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’

நடிகர் விஜய் தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயரிடப்பட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

7:34 PM

பிரதமர் மோடி நாளை ஒடிசா, அசாம் பயணம்!

பிரதமர் மோடி ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

7:07 PM

அயல்நாட்டில் இருந்தாலும் அண்ணாவின் நினைவுதான்: முதல்வர் ஸ்டாலின் உருக்கம்!

அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூளுரைத்துள்ளார்

5:47 PM

புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜய்யின் பணி சிறக்கட்டும்: உதயநிதி வாழ்த்து!

புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

5:14 PM

திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் மனு: பிப்ரவரி 6ஆம் தேதி தீர்ப்பு!

வீட்டில் பணிபுரிந்த சிறுமியை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் வருகிற 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

4:53 PM

தமிழக வெற்றி கழகம்: ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் விவரம்!

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

4:30 PM

காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் மீனவர்கள் கைது அதிகம்: சு.வெங்கடேசன் எம்.பி வருத்தம்!

காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதான மீனவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது

4:13 PM

தமிழக வெற்றி கழகம்: அறிக்கை மூலம் விஜய் என்ன சொல்கிறார்?

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது அறிக்கை மூலம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்

3:49 PM

முதல்வன் முதல் ஆட்டோகிராப் வரை... நடிகர் விஜய் நடிக்க மறுத்து பிளாக்பஸ்டர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் இதோ

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்க மறுத்து பின்னர் வேறு ஒரு நடிகர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2:58 PM

மாதம் ரூ.5,000 முதலீடு செய்தால் ரூ.8 லட்சம் கிடைக்கும்.. சிறந்த போஸ்ட் ஆபிஸ் திட்டம் இதுதான்..

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் ரூ. 5,000 முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் ரூ. 8 லட்சம் நிதியைப் பெறலாம்.

2:43 PM

தமிழக ரயில்வே திட்டத்துக்கு ரூ.6,331 கோடி நிதி: மற்ற மாநிலங்களை விட குறைவு - என்ன காரணம்?

2:36 PM

45 மணி நேரம் இயங்கும்.. BoAt Airdopes 91 அறிமுகம்.. ரூ.899க்கு இத்தனை வசதிகள் இருக்கா.!!

போட் ஏர்டோப்ஸ் 91 45 மணிநேரம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.899ல் வாங்கலாம்.

2:06 PM

சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தார் விஜய் - அப்போ கடைசி படம் இதுதானா?

அரசியல் என்பது எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை, கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

1:13 PM

நம் நாட்டுக்கு இந்த ரோபோக்கள் தேவை.. நான் முதலீடு செய்கிறேன்.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு குவியும் பாராட்டு

ரோபோ ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் வீடியோவை எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

12:08 PM

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் முறையீடு!

நாம் தமிழர் கட்சியினர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்துவதை எதிர்த்து அக்கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்துவது சட்ட விதிமீறல் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். 

11:54 AM

அடிக்கு மேல் அடி..! பேடிஎம் பங்குகள் 20% சரிவு.. 2 நாட்களில் மளமளவென 40% சரிந்து பின்னடைவு..

பேடிஎம் (Paytm) பங்குகள் 20% சரிந்து ரூ. 487.20 ஆக இருந்தது. கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு இரண்டு வர்த்தக அமர்வுகளில் 40 சதவீதம் சரிவைக் குறிக்கிறது.

11:38 AM

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்.. கன்ஃபார்ம் டிக்கெட் எப்போது கிடைக்கும்? ரயில்வே அமைச்சர் சொன்ன அப்டேட்..

உறுதி செய்யப்பட்ட டிக்கெட் தொடர்பான ரயில்வே அமைச்சரின் பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் எப்போது கிடைக்கும் என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.

11:30 AM

தமிழர்களை கொச்சைப்படுத்திய தன்யாவால் லால் சலாம் படத்துக்கு வந்த சிக்கல்... கமிஷனர் அலுவலகத்திற்கு பறந்த புகார்

லால் சலாம் படத்தின் நாயகி தன்யா உள்பட நான்கு பேர் மீது சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

11:19 AM

மாலத்தீவை மிஞ்சப்போகும் லட்சத்தீவு.. எல்லாமே மாறப்போகுது.. இந்திய அரசு கையில் எடுத்த மாஸ்டர் பிளான்.!!

லட்சத்தீவு போன்ற தீவுகளில் சுற்றுலா உள்கட்டமைப்பு பெரிய அளவில் வளர்க்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

10:56 AM

Paytm பயனர்கள் கவனத்திற்கு.. அபராதத்தை தவிர்க்க பிப்ரவரி 29க்குள் இதை செய்யுங்க.. இல்லைனா அவ்ளோதான்.!

Paytm பயனர்கள் அபராதத்தைத் தவிர்க்க பிப்ரவரி 29 க்கு முன் புதிய FASTag ஐ வாங்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

10:42 AM

பட்ஜெட் ஸ்கூட்டரை வெளியிடும் ஓலா.. ரூ. 89999க்கு வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. தரமான சம்பவம் இருக்கு!

ஓலாவின் நுழைவு-நிலை இ-ஸ்கூட்டர் ரூ. 89999க்கு வெளியிட உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

10:26 AM

ஆமா நாங்க Bully Gang தான்... பெருமையாக பதிவிட்ட நிக்சனை பொளந்துகட்டும் நெட்டிசன்கள்

பிக்பாஸ் வீட்டில் Bully Gang ஆக சுற்றி வந்த மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

10:10 AM

Today Gold Rate in Chennai : விடாமல் அடிச்சு தூக்கும் தங்கம் விலை.. அலறும் நகைப்பிரியர்கள்..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:09 AM

இந்த 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு வெளுத்து வாங்கப்போகுதாம் மழை.. வானிலை மையம் தகவல்.!

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

9:33 AM

படுக்கைக்கு அழைத்த சீனியர் காமெடியன்... கேரவனுக்குள் அழைத்து சென்று அதிர்ச்சி கொடுத்த நடிகை பிரகதி

தமிழ், தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி, தன்னை சீனியர் காமெடியன் ஒருவர் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்ததாக கூறி உள்ளார்.

8:47 AM

இப்போது இந்த முறையில் ரூ.5 லட்சத்தை அனுப்பலாம்.. வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி..

புதிய பணப் பரிமாற்ற விதிகளின்படி இப்போது இந்த முறையில் ரூ.5 லட்சத்தை அனுப்பலாம். இந்த விதி பிப்ரவரி 1 முதல் பணப் பரிமாற்ற முறை மாறுகிறது.

8:46 AM

டிஎன்பிஎஸ்சி சொன்ன குட் நியூஸ்.. 12ம் வகுப்பு படித்திருந்தால் மட்டும் போதும்.. மாத சம்பளம் ரூ 71000 வரை..

டிஎன்பிஎஸ்சி பல பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

8:44 AM

பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்! மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு கிடையாது! திண்டுக்கல் சீனிவாசன்!

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

8:43 AM

நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:35 AM

யாரை பத்தி யார் பேசுவது! நாவடக்கத்துடன் பேசுங்க ஆ.ராசா! இல்லைனா இதுதான் நடக்கும்! கடுமையாக எச்சரித்த ஓபிஎஸ்!

எம்ஜிஆரை குடும்பக் கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா இழிவுப்படுத்தி பேசியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 

7:35 AM

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்.!

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரைஅம்பத்தூர், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

7:34 PM IST:

பிரதமர் மோடி ஒடிசா, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்

7:07 PM IST:

அண்ணாவை நெஞ்சில் ஏந்தி வெற்றிக் களம் காண்போம் என திமுக தலைவர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சூளுரைத்துள்ளார்

5:47 PM IST:

புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய்யின் மக்கள் பணி சிறக்கட்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

5:14 PM IST:

வீட்டில் பணிபுரிந்த சிறுமியை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ. மகன், மருமகள் ஜாமீன் கோரிய வழக்கில் வருகிற 6ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது

4:53 PM IST:

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்களின் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது

4:30 PM IST:

காங்கிரஸ் காலத்தை விட பாஜக ஆட்சியில் கைதான மீனவர்களின் எண்ணிக்கை அதிகம் என மத்திய அரசு அளித்துள்ள பதில் மூலம் தெரியவந்துள்ளது

4:13 PM IST:

தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய், தனது அறிக்கை மூலம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்

3:49 PM IST:

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிக்க மறுத்து பின்னர் வேறு ஒரு நடிகர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆன படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

2:58 PM IST:

அஞ்சல் அலுவலக தொடர் வைப்புத்தொகை திட்டத்தில் ரூ. 5,000 முதலீடு செய்து, முதிர்வு காலத்தில் ரூ. 8 லட்சம் நிதியைப் பெறலாம்.

2:36 PM IST:

போட் ஏர்டோப்ஸ் 91 45 மணிநேரம் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ரூ.899ல் வாங்கலாம்.

2:06 PM IST:

அரசியல் என்பது எனக்கு பொழுதுபோக்கு அல்ல, அது என் ஆழமான வேட்கை. அதில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்ள விரும்புகிறேன். என் சார்பில், நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த பணிகளை, கட்சி வேலைகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன் என விஜய் தெரிவித்துள்ளார்.

1:13 PM IST:

ரோபோ ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் வீடியோவை எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.

12:08 PM IST:

நாம் தமிழர் கட்சியினர் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்துவதை எதிர்த்து அக்கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் சோதனை நடத்துவது சட்ட விதிமீறல் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர். 

11:54 AM IST:

பேடிஎம் (Paytm) பங்குகள் 20% சரிந்து ரூ. 487.20 ஆக இருந்தது. கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவுக்கு இரண்டு வர்த்தக அமர்வுகளில் 40 சதவீதம் சரிவைக் குறிக்கிறது.

11:38 AM IST:

உறுதி செய்யப்பட்ட டிக்கெட் தொடர்பான ரயில்வே அமைச்சரின் பெரிய அப்டேட் வெளியாகி உள்ளது. உறுதி செய்யப்பட்ட டிக்கெட் எப்போது கிடைக்கும் என்ற தகவலும் கூறப்பட்டுள்ளது.

11:30 AM IST:

லால் சலாம் படத்தின் நாயகி தன்யா உள்பட நான்கு பேர் மீது சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் செல்வம் புகார் அளித்துள்ளார்.

11:19 AM IST:

லட்சத்தீவு போன்ற தீவுகளில் சுற்றுலா உள்கட்டமைப்பு பெரிய அளவில் வளர்க்கக்கூடிய திட்டத்தை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

10:56 AM IST:

Paytm பயனர்கள் அபராதத்தைத் தவிர்க்க பிப்ரவரி 29 க்கு முன் புதிய FASTag ஐ வாங்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

10:42 AM IST:

ஓலாவின் நுழைவு-நிலை இ-ஸ்கூட்டர் ரூ. 89999க்கு வெளியிட உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.

10:26 AM IST:

பிக்பாஸ் வீட்டில் Bully Gang ஆக சுற்றி வந்த மாயா, பூர்ணிமா, நிக்சன் ஆகியோர் மீண்டும் சந்தித்துக் கொண்டபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகிறது.

10:10 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:09 AM IST:

கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

9:33 AM IST:

தமிழ், தெலுங்கு படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகை பிரகதி, தன்னை சீனியர் காமெடியன் ஒருவர் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்ததாக கூறி உள்ளார்.

8:47 AM IST:

புதிய பணப் பரிமாற்ற விதிகளின்படி இப்போது இந்த முறையில் ரூ.5 லட்சத்தை அனுப்பலாம். இந்த விதி பிப்ரவரி 1 முதல் பணப் பரிமாற்ற முறை மாறுகிறது.

8:46 AM IST:

டிஎன்பிஎஸ்சி பல பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

8:44 AM IST:

தமிழகத்தை பொறுத்தவரை நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி உரிய நேரத்தில் அறிவிப்பார் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார். 

8:43 AM IST:

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து நிதிபெற்றது தொடர்பாக சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

7:35 AM IST: