நம் நாட்டுக்கு இந்த ரோபோக்கள் தேவை.. நான் முதலீடு செய்கிறேன்.. ஆனந்த் மஹிந்திரா ட்வீட்டுக்கு குவியும் பாராட்டு
ரோபோ ஆற்றில் உள்ள குப்பைகளை அகற்றும் வீடியோவை எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா.
நாட்டில் அதிகரித்து வரும் மாசுபாடு குறித்து கவலை தெரிவித்த பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண வேண்டும் என்றார். மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா சமூக வலைதளங்களில் அடிக்கடி ஆக்டிவாக இருப்பார். இவர் பல்வேறு ட்வீட் மூலம் நெட்டிசன்களை வாழ்த்தி வருவது வழக்கம்.
சமீபத்தில் மற்றொரு சுவாரஸ்யமான ட்வீட் செய்துள்ளார் ஆனந்த் மஹிந்திரா. ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டரில், “ஆற்றில் உள்ள குப்பைகளை ரோபோ தனியாக சுத்தம் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இது போன்ற ரோபோக்களின் தேவை நம் நாட்டில் அதிகம் உள்ளது” என்று கருத்து தெரிவித்தார். வீடியோவில் காணப்படும் ரோபோ சீனாவில் தயாரிக்கப்பட்டது என்று கூறிய அவர், நம் நாட்டுக்கு இதுபோன்ற ரோபோக்கள் தேவை என்று கூறியுள்ளார்.
இனியாவது இந்த மாதிரி ரோபோக்களை உருவாக்க வேண்டும் என்றார். ஏற்கனவே இதுபோன்ற ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிப்பேன் என்றார். முழுமையான விவரங்களுடன் தொடர்பு கொண்டால் தேவையான முதலீட்டைச் செய்யத் தயாராக இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஆனந்த் மஹிந்திராவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை பதினொரு மில்லியனைத் தாண்டியுள்ளது.
குறைந்த விலையில் அயோத்தி செல்ல அருமையான வாய்ப்பு.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா..