Jaffer Sadiq : வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய வழக்கில், முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார்.
பல வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு, சுமார் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருள்களை கடத்தியதாக, திரைப்பட தயாரிப்பாளரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் என்பவரை டெல்லி போதைப்பொருள் தடுப்பு போலீசார் பல வாரமாக தேடி வந்தனர்.
இந்த சூழ்நிலையில் தான் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவினர் ஜாபர் சாதிக்கை ஜெய்ப்பூரில் கைது செய்தனர். அவர் மீது சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்தது, உட்பட பல துறைகளில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த தொடங்கினர். பிறகு இந்த வழக்கில் நிபந்தனை ஜாமினில் வெளியான ஜாபர் சாதி மாதம் ஒரு முறை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்து போட வேண்டும் என்கின்ற உத்தரவையும் பிறப்பித்தது.
undefined
அவரது செல்போன்கள் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஜாபர் சாதிக் வழக்கில் விசாரணையில் நடந்து வரும் நிலையில், அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் என்பவர், இப்போது சுமார் 302 பக்கங்கள் கொண்ட ஒரு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்த வழக்கு விசாரணை இப்போது நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்பொழுது தாக்கல் செய்யப்பட்ட இந்த குற்ற பத்திரிக்கையில் ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, அவரது சகோதரர் சலீம் உள்ளிட்ட 12 பேர் மீது குற்றம் சட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த 12 பேரில் கடைசி நபராக பிரபல திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அமீர் மீதும் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கும் செல்வப்பெருந்தகை? ராகுல் காந்திக்கு கடிதம் எழுதிய BSP