பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை விவகாரத்தில் தற்போது வரை பலரும் அதிரடியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இக்கொலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு உள்ளதாக பகுஜன் சமாஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
மேலும் செல்வப்பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகிப்பதால் அவரை விசாரணைக்கு உட்படுத்த காவல் துறை தயங்குவதால் அவரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலபொதுச் செயலாளர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி உள்ளார்.
undefined
திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய்: ஆய்வு அறிக்கையால் பக்தர்கள் அதிர்ச்சி
ராகுல் காந்திக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், தற்போது காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக உள்ள செல்வப்பெருந்தகை கடந்த 2008 - 2010 கால கட்டத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பு வகித்தார். இவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளது. மேலும் இவர் மீது ஏற்கனவே ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு, ஆல்பர்ட், பிபிஜி கொலை வழக்கிலும் கொலையாளியாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளார்.
சென்னையில் மழை இருக்கு! ஆனால் குட்நியூஸ் சொன்ன கையோடு ட்விஸ்ட் வைத்த தமிழ்நாடு வெதர்மேன்
இவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக இருப்பதால் இவரை விசாரணைக்கு உட்படுத்துவதில் காவல் துறை தயக்கம் காட்டுகிறது. எனவே இவரை கட்சியின் மாநிலத்தலைவர், கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதப்பட்டுள்ள விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.