சென்னையில் துவங்கியது.. திமுகவின் பவள விழா & முப்பெரும் விழா - நேரலை இதோ!

By Ansgar R  |  First Published Sep 17, 2024, 5:11 PM IST

DMK Pavala Vizha : இன்று செப்டம்பர் 17ம் தேதி திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கப்பட்ட நாளில், திமுகவின் பவள விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இன்று சென்னையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக முப்பெரும் விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் சிறப்பான முறையில் பணியாற்றியவர்களுக்கு பெரியார், அண்ணா மற்றும் கருணாநிதி உள்ளிட்டவர்களின் பெயர்களில் விருதுகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tap to resize

Latest Videos

கடந்த செப்டம்பர் 15ம் தேதி முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று செப்டம்பர் 17ம் தேதி தந்தை பெரியாரின் பிறந்த நாளும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிமுக நாளான பவள விழாவும் முப்பெரும் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இதில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்பொழுது அந்த நிகழ்ச்சி சென்னையில் துவங்கப்பட்டுள்ளது.

click me!