School Education Department: பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்! இயக்குநர் கண்ணப்பன் முக்கிய உத்தரவு!

By vinoth kumar  |  First Published Sep 10, 2024, 8:06 PM IST

School Education Department: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் புதிய பணி நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாறுதல் பெற்ற அலுவலர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாவட்ட கல்வி அலுவலராக இருந்த  என்.ரவிச்சந்திரனுக்கு ஏற்கனவே  கடலூர் மாவட்ட தனியார் பள்ளிகள் மாவட்ட கல்வி அலுவலராக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது திருத்தப்பட்ட ஆணையில் திருச்சி மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: Schools Holiday: மாணவர்களுக்கு 10 நாட்கள் கூடுதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

Tap to resize

Latest Videos

undefined

அதேபோல் தூத்துக்குடி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த  பி.எஸ்.இரமானுக்கு ஏற்கனவே நெல்லை மாவட்ட  இடைநிலை மாவட்ட கல்வி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்டிருந்தார்.  ஆனால் தற்போது திருத்தப்பட்ட ஆணையில்  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், நீலகிரி மாவட்டம் தொடக்கக்கல்வி மாவட்டக் கல்வி அலுவலராக இருந்த தி. கோமதி ஏற்கனவே திருப்பூர் தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது  கோவை மாவட்ட இடைநிலை மாவட்ட கல்வி  அலுவலராக நியமனம் செய்து புதிய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

இதையும் படிங்க:  School Holiday: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு! என்ன காரணம் தெரியுமா?

மேற்காணும் திருத்திய மாறுதல் பெற்ற மாவட்டக்கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலர்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலர்களிடம் தமது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் பணியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறார்கள். தொடர்புடைய முதன்மைக்கல்வி அலுவலர்கள் பார்வையில் காணும் செயல்முறைகளில் அறிவுத்தியுள்ளவாறு திருத்திய மாறுதல் ஆணை பெற்ற அலுவலர்களுக்கு பதிலாக மாவட்டத்தில் உள்ள அரசு உயர், மேல்நிலைப் பள்ளி  தலைமையாசிரியர்களிலிருந்து பணியில் மூத்த ஒருவரை பொறுப்பு அலுவலராக நியமனம் செய்து ஆணை வழங்கிவிட்டு, உரிய பின்னேற்பின் பொருட்டு கருத்துருக்களை இவ்வியக்ககத்திற்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 பணிவிடுவிப்பு, பணியில் சேர்ந்த அறிக்கை மற்றும் பொறுப்பு ஒப்படைப்புச் சான்றிதழ் (CTC) உடனடியாக மறுநினைவூட்டுக்கு இடமின்றி இவ்வியக்ககத்திற்கும், தொடர்புடைய இயக்ககம், முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

click me!