தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளதாகவும், இதனால் கொண்டாட்டங்களுக்கு தயாராகுமாறு ரசிகர்களுக்கு புஸ்ஸி ஆனந்த் வாய்மொழி உத்தரவு அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி உள்ள நிலையில், முன்னதாக இக்கட்சிக்கு அனுமதி கோரி கடந்த பிப்ரவரி மாதம் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இந்திய தேர்தல் ஆணையத்தில் கட்சியை முறைப்படி பதிவு செய்வதற்கான பணிகளை மேற்கொண்டார்.
அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்திய மகா விஷ்ணு: சென்னையில் அதிரடி கைது
இதனிடையே கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கான பணிகள் விழுப்புரம் மாவட்டத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கு அனுமதி கோரி புஸ்ஸி ஆனந்த் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். காவல்துறை தரப்பில் மாநாடு குறித்து 21 கேள்விகள் எழுப்பப்பட்டன. கேள்விகளுக்கு விஜய் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்ட போதிலும் அனுமதி வழங்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்க மாநாடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கட்சியின் தலைவர் விஜய் நாளை அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட விண்ணப்பங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளைய தினம் மாநாடு தொடர்பான அறிவிப்பை விஜய் வெளியிடும்போது, இது தொடர்பாகவும் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டு கரண்ட் பில் ஒவ்வொரு மாசமும் ஷாக் அடிக்குதா? இந்த வழிய பாலோ பண்ணுங்க செலவு பாதியாகிடும்
மேலும் விஜய்யின் அறிவிப்புக்கு பின்னர் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக கொண்டாட்டங்களுக்கு தயாராகுமாறு புஸ்ஸி ஆனந்த் விஜய்யின் ரசிகர்களுக்கும், கட்சியின் தொண்டர்களுக்கும் வாய்மொழியாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக சொல்லப்படுகிறது.