ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக பேசிய மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினர் கைது செய்தனர்.
சென்னை சைதாப்பேட்டை அடுத்துள்ள அசோகநகர் பகுதியில் செயல்பட்டுவரும் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆன்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்ணு மாணவிகள் முன்னிலையில் சொற்பொழிவாற்றினார். அப்போது முன்ஜென்மம், அடுத்த ஜென்மம், கடந்த காலப் பாவங்கள் என தொடர்ந்து நிரூபிக்கப்படாத கட்டுக்கதைகள் குறித்து மட்டுமே மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.
இல்லத்தரசிகளும் லட்சங்களில் சம்பாதிக்க அற்புதமான தொழில் வாய்ப்பு; ரூ.30,000 போட்டா ரூ.1 லட்சம்
மேலும் கடந்த காலத்தில் செய்த பாவத்தின் அடிப்படையிலேயே தற்போது பலர் கை, கால்கள் இல்லாத நிலையில், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கின்றனர் என்று கூறினார். அப்போது அதே அரங்கில் இருந்த பார்வை திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் மகா விஷ்ணுவின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மாணவர்களிடம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட தகவல்களை மட்டும் பேசுங்கள். மூடநம்பிக்கைகள் குறித்து பேசாதீர்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் மகா விஷ்ணு மற்றும் பேச்சாளர் மகா விஷ்ணு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தமிழக்ததில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என் துறை சார்ந்த பகுதியில் வந்து மாற்றுத்திறனாளிகள் புண்படும் வகையில் மகா விஷ்ணு பேசியுள்ளார். அவரிடம் இது தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்து இருந்தார்.
Chennai Rain Update: 13ம் தேதி வரை தமிழகத்தில் மழை! சென்னை நிலவரம் குறித்து வானிலை முக்கிய அப்டேட்!
அதேபோன்று மகா விஷ்ணுவும் தனது தரப்பில் விளக்கம் அளித்திருந்தார். அதன்படி தான் இந்த பிரச்சினைக்காக வெளிநாட்டிற்கு ஓடி ஒளிந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது. நான் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் சுற்றுப்பயணத்தில் இருப்பேன். பல்வேறு நாடுகளிலும் நான் சொற்பொழிவு ஆற்றுகின்றேன். அதன் அடிப்படையில் தான் தற்போதும் வெளிநாடு சென்றுள்ளேன். யாருக்கும் பயந்து செல்லவில்லை. தற்போது இந்த விவகாரத்தால் எனது பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு சென்னை வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த மகா விஷ்ணுவை காவல் துறையினர் விசாரணைக்காக ரகசிய இடத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.